
திருவண்ணாமலையில் என்றாலே நாம் எல்லோருக்கும் நினைவு வருவது சிவனின் பஞ்சபூதங்களில் ஒன்றாக அருணாச்சலேஸ்வரர் கோயில் மட்டும்தான். ஆனால் திருவண்ணாமலையைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. என்னவென்று பார்ப்போமா?.
ஸ்ரீ ரமண ஆசிரமம்.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணா ஆசிரமம் திருவண்ணாமலையில் தியானம் செய்வதற்கும் ,உள் அமைதியை காண்பதற்கு ஏற்ற இடமாகும். இந்த ஆசிரமத்தில் ருசியான சாத்வீக உணவையும் ருசிக்கலாம். ஆசிரமத்தில் தனித்துவமான மற்றும் அரிய புத்தகங்களை கொண்ட ஒரு நூலகம்தான் உள்ளது. கூட்டத்திலிருந்து ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் சரியான தேர்வாகும்.
செஞ்சி கோட்டை.
பிரபலமான செஞ்சி கோட்டை என்று அறியப்படும் கம்பீரமான கோட்டை மூன்று வெவ்வேறு மலை உச்சி கோட்டைகள் தடித்த சுவர் மற்றும் பாறைகளால் நம்மை மெய்சிலிக்க வைக்கிறது. மராட்டிய மன்னரான, சிவாஜி "இந்தியாவின் மிகவும் அசைக்க முடியாத கோட்டை" என்ற பெயரிடும் அளவிற்கு இந்த கோட்டை வலுவானதாக இருந்துள்ளது.
சாத்தனூர் அணை.
திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சாத்தனூர் அணை, ஒரு அற்புதமான பொறியியல் அதிசயம். இயற்கை ஆர்வலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். இனிமையான பூங்காக்கள், மீன் / கிரோட்டா மற்றும் பெரிய முதலை பண்ணை ஆகியவை உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து சாத்தனூர் அணையை நண்பர்கள் மட்டும் குடும்பத்தினரும் ஒருநாள் பயணத்தில் பார்வையிட இது ஏற்ற இடம் ஆகும்.
விருபாக்ஷா குகைகள்.
திருவண்ணாமலையில் உள்ள இந்த தனித்துவமான குகை ஆசிரமம் இந்து சின்னமான ஓம் வடிவத்தில் உள்ளது. மலையின் சரிவில் புனித நீரூற்றுகள் உள்ளன. 13-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற துறவியான விருபாக்ஷா தேவாவின் நினைவாக இந்த குகைகள் பெயரிடப்பட்டதாக தெரிகிறது. அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கு கழித்ததாக கூறப்படுகிறது.
மமரா குகைகள்.
மமரா குஹாய் என்ற சொல்லுக்கு 'மரக்குகைகள் ' என்று பொருள். திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள ஒரு ஆன்மீக ஸ்தலமாகும். ஆன்மீக ஞானி ஸ்ரீ ரமண மகரிஷி ஆறு வருடங்கள் தவம் மற்றும் தியானம் செய்த குகை இது என்று கூறப்படுகிறது.
ஸ்கந்தாஷ்ரமம்.
அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் ரமணா ஆசிரமத்திற்கு அருகில் திருவண்ணாமலையில் துறவி ரமணர் தங்கி இருந்த குகைகளில் இதுவும் ஒன்று. இந்த இலக்கை அடைய ஒருவர் நீண்ட தூரம் மலை ஏற வேண்டும். மேலே இருந்து பார்க்கும்போது பார்வை நிச்சயமாக உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். கந்தாஸ்ரமம் ஒரு தனித்துவமான கோவில். நீங்கள் பார்த்த உடனேயே உணர்ந்திடலாம்.
யோகி ராம் சரத்குமார் ஆசிரமம்.
திருவண்ணாமலையில் உள்ள மிக அழகான இடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த புனித ஆசிரமம் விசிறி சாமியார் ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது. சுவாமியின் பச்சை சிலை கோவிலின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. இருப்பினும் பார்வையாளர்கள் வேதங்களை பற்றி அறிந்து கொள்ள இந்த ஆசிரமம் வாய்ப்பு அளிக்கிறது.
ஜவ்வாது மலை.
திருவண்ணாமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜவ்வாதுமலையில் சந்தன மரங்கள் நிறைய காணப்படுகின்றன. இங்கு பீமன் மதவு நீர்வீழ்ச்சி மற்றும் அமைதி வனப்பகுதியில் மழையேற்றம் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும். அடர்ந்த காடுகளின் நடுவில் உள்ளது பீமன் மடவு நீர்வீழ்ச்சி. ஜமன் மரத்தூரிலிருந்து சுமார் 12. கி.மீ தொலைவில் உள்ளது.
கோடை விடுமுறையில் இந்த இடங்களை தேர்ந்தெடுத்து சுற்றுலா செல்லலாம்.