ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கான 10 அதிமுக்கிய உரிமைகள் இதோ!

கட்டணத் ரீஃபண்ட், மருத்துவ உதவி, போர்டிங் பாயிண்ட் மாற்றம்—பயணிகள் அறியவேண்டிய முழு தகவல்கள்!
ரயில்வே உரிமைகள் - Indian Railway passenger safety,
ரயில்வே உரிமைகள் - Indian Railway passenger safety,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ரயில்வே உரிமைகள்:

இந்திய ரயில்வேயில் பயணிகள் தங்களுக்கு இருக்கும் முக்கிய உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம். இந்திய ரயில்வேயின் விதிமுறைகளின்படி, நாம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நமது குடும்ப உறுப்பினர்களில் மற்றொருவருக்கு மாற்ற முடியும். இது போன்ற பலவகையான வசதிகள் மற்றும் உரிமைகள் ரயில்வேயில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

டிக்கெட்டை குடும்ப உறுப்பினருக்கு மாற்றுதல்:

நம்மால் பயணம் செய்ய முடியாத பட்சத்தில், நமது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை (confirmed) நமது தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்கு ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக உரிய ஆதாரங்களுடன் முதன்மை முன்பதிவு மேற்பார்வையாளரை (Chief Reservation Supervisor) அணுக வேண்டும்.

பயணத் தேதியை மாற்றுதல்:

உறுதி செய்யப்பட்ட அல்லது ஆர்.ஏ.சி(RAC) டிக்கெட்டுகளின் பயணத் தேதியை நம்மால் முன்போ அல்லது பின்போ மாற்றிக்கொள்ள கூடிய வசதி உள்ளது. இதற்கு ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பயண இலக்கை நீட்டித்தல்:

நாம் டிக்கெட் எடுத்த நிலையத்தைத் தாண்டியும் பயணம் செய்ய விரும்பினால், டிக்கெட் பரிசோதகரை (TTE) அணுகி பயண இலக்கை நீட்டித்துக் கொள்ளலாம். அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தி புதிய ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏ டி எம்/பண பரிவர்த்தனை தோல்விக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல்:

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்பொழுது பணம் கழிக்கப்பட்டு டிக்கெட் புக் ஆகவில்லை என்றால், அந்தப் பணம் 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு தானாகவேத் திரும்ப வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
ரயிலில் ஓசியில் பயணிப்போருக்கு ஷாக் நியூஸ்: அபராதத்தை அதிரடியாக உயர்த்திய ரெயில்வே நிர்வாகம்..!!
ரயில்வே உரிமைகள் - Indian Railway passenger safety,

ரயில் தாமதமானால் முழுப் பணத்தை திரும்பப் பெறலாம்:

நம்முடைய ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாக வந்தால், நாம் பயணத்தை ரத்து செய்துவிட்டு முழுப் பணத்தையும் திரும்பப் பெற (refund) TDR தாக்கல் செய்யலாம். இதற்குக் கட்டணம் எதுவும் பிடிக்கப்பட மாட்டாது.

போர்டிங் பாயிண்ட் மாற்றுதல்:

நாம் டிக்கெட் புக் செய்த நிலையத்திற்குப் பதிலாக, ரயில் செல்லும் வழியில் உள்ள வேறொரு நிலையத்தில் இருந்து ரயிலில் ஏற விரும்பினால் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைனில் அல்லது கவுண்டரில் நமது போர்டிங் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம்.

மருத்துவ உதவி உரிமை:

பயணத்தின் பொழுது நமக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் டிக்கெட் பரிசோதகர் (TTE) அல்லது ரயில் ஓட்டுநரிடம் தெரிவிக்கலாம். அடுத்த பெரிய ரயில் நிலையத்தில் நமக்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.

ரயில்வே உரிமைகள் - Indian Railway passenger safety,
ரயில்வே உரிமைகள் - Indian Railway passenger safety,

ரயிலில் மாற்று வசதி (Alternative Train Accommodation Scheme - VIKALP):

நமது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றால் அதே வழிதடத்தில் செல்லும் வேறு ரயில்களில் உள்ள காலி இடங்களை நமக்கு வழங்கும் விகல்ப் திட்டத்தை நாம் தேர்வு செய்யலாம்.

ஆர்.ஏ.சி பயணிகளுக்கான இருக்கை உரிமை:

நமக்கு ஆர்.ஏ.சி டிக்கெட் இருந்தால் ரயிலில் பயணம் செய்ய நமக்கு முழு உரிமை உண்டு. நமக்கு ஒரு முழு படுக்கைக்கு பதிலாக, மற்றொரு ஆர்.ஏ.சி பயணியுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு இருக்கை ஒதுக்கப்படும்.

தரமான உணவு மற்றும் குடிநீர் உரிமை:

ஐஆர்சிடிசி (IRCTC) வழங்கும் உணவு மற்றும் குடிநீரின் விலை மற்றும் தரம் குறித்து புகார் செய்ய பயணிகளுக்கு முழு உரிமை உண்டு. உணவின் தரம் சரியில்லை எனில், '139' என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது 'IRCTC Rail Connect' செயலி மூலம் உடனடியாகப் புகார் அளிக்கலாம்.

உங்கள் ரயில் பயணத்தின் போது உணவுத் தரம், தாமதத்திற்கான ரீஃபண்ட் மற்றும் அவசர கால சேவைகளில் உங்களுக்கான உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்தி, எவ்வித ஏமாற்றமும் இன்றி தைரியமாகப் பயணிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
முன்பதிவு டிக்கெட்டில் இப்படியொரு சிக்கலா.? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
ரயில்வே உரிமைகள் - Indian Railway passenger safety,
logo
Kalki Online
kalkionline.com