மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள உலக பாரம்பரியம் மிக்க இடம் இது. சிற்ப வேலைப்பாடுகள் மிக்க கோவில்கள், சிறந்த கைவினை திறன் மற்றும் வரலாற்று சிறப்பின் காரணமாக இந்த கோவில்கள் உலகம் முழுவதிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
சிறந்த மலை வாசஸ்தலம் இது. சத்புரா மலைத்தொடரின் அழகைக் காண நிறைய சுற்றுலா பயணிகள் வருகை புரியும் இடம் இது. இங்குள்ள பாண்டவர் குகைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
குவாலியர் அரண்மனைகள் மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்ற நகரம். குவாலியர் மலை உச்சியில் உள்ள கோட்டை சிறந்த சுற்றுலா தலமாக போற்றப்படுகிறது. கோட்டை வளாகத்தில் 15 ஆம் நூற்றாண்டின் குஜாரி மஹால் அரண்மனை இப்போது தொல்பொருள் அருங்காட்சியகமாக உள்ளது.
5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழமையான குகைகள் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படுகிறது. 20 ராக் கட் குகைகள் உள்ள இடம் இது.
இந்த நகரம் 1502 ல் ராஜ்புத் அரசால் உருவாக்கப்பட்டது. இங்குள்ள நினைவுச்சின்னங்கள் ராஜபுத்திர மற்றும் முகலாய கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது. இங்கு பிரம்மாண்டமான அரண்மனைகளும், கோவில்களும் உள்ளன. ராமராஜா கோயில், ஜஹாங்கீர் மஹால்,சதுர்புஜ் கோவில் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.
இது நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பழமையான நகரம்.98 அடி உயரமுள்ள துவாந்தர் நீர்வீழ்ச்சி,பெடகாட் நீர்வீழ்ச்சி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும். இங்கு பல அரண்மனைகள் கோட்டைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற பேடா காட்டில் படகு சவாரி சுகமான அனுபவம் தரும்.
புனிதமான மற்றும் மிகப் பழமையான நகரம் இது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஷ்வர் கோவில் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புகழ்பெற்ற கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலபைரவர் கோவில், பார்தி ஹரி குகைகள், இஸ்கான் கோவில், சண்டிபனி ஆசிரமம் பார்க்க வேண்டிய இடங்கள்.
சாஞ்சியில் கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கிபி 12ம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவு சின்னங்கள் இங்கே உள்ளன.
மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது.இங்கு 750 பாறைகள், 7 மலைகள் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் போன்ற வாழ்க்கை முறையை அறிய இங்குள்ள ஓவியங்கள் உதவுகின்றன.
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வரர் கோயில் இங்கு உள்ளது. ஓம் என்ற சின்னத்தை ஒத்த இரண்டு மலைகள் அதற்கு இடையில் ஒரு பள்ளத்தாக்கு என இத் தீவின் வடிவம் ஓம் என்ற எழுத்து போல் உள்ளதால் இதற்கு இப்பெயர் வந்தது. இத்தீவில் அமரேஸ்வரர் என மற்றொரு கோயிலும் உள்ளது.