
பயணம் செய்யும் போது நமக்கு பெரிய பிரச்னையாக இருப்பது நமது உடைமைகள் திருடப்படுவதாகும். இதிலிருந்து நமது சூட்கேஸையும், பொருட்களையும் பாதுகாக்க சில டிரிக்ஸை பயன்படுத்தினால் போதுமானதாகும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. Choosing right luggage.
முதலில் நல்ல சூட்கேஸை வாங்குவது தான் பொருட்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். மிருதுவான பைகளை வாங்கும் போது அதை திருடர்கள் எளிதில் கிழித்து பொருட்களை திருடிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதற்கு பதில் கனமான சூட்கேஸ்களான Polycarbonate அல்லது அலுமினியம் பேக்குகள் வாங்குவது சிறந்ததாகும். அதிகமாக பாக்கெட்கள் இருக்கும் பைகளை தவிர்ப்பது நல்லது.
2. Hack proof Zipper.
நம்முடைய பைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பூட்டுகளை பயன்படுத்தினாலும் ஒரு சிறிய பால் பாயின்ட் பேனாவை வைத்து அதை திறக்கும் டிரிக்கை திருடர்கள் உபயோகிக்கிறார்கள். இதிலிருந்து நம் உடைமைகளை பாதுகாக்க Anti puncture zippersஐ பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.
3. Seal it tight.
உங்களுடைய உடைமை திருடப்படுவதில் இருந்து பாதுகாக்க பிரகாசமான நிறங்களில் எண்களைக் கொண்ட சீல்களை பயன்படுத்தவும். யாரேனும் உங்கள் சூட்கேஸை திறக்க வேண்டும் என்றால் சீல்களை உடைக்க வேண்டும். இதனால் உங்கள் பொருட்கள் திருடப்பட்டதற்கான ஆதாரம் கண்கூடாகவே உங்களுக்கு தெரிந்துவிடும்.
4. Incognite mode.
சில சமயங்களில் நாம் கொண்டு செல்லும் சூட்கேஸ்களை விலைமதிப்பற்றதாக காட்டிக்கொள்வது கூட அதை திருடவேண்டும் என்ற எண்ணத்தை திருடர்களுக்கு தூண்டுவதைக் குறைக்கும். புதிய டிசைனர் சூட்கேஸ்களை எடுத்து செல்வது சிறந்ததல்ல. சூட்கேஸில் டேப், ஸ்டிக்கர், பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துவது உடைமைகளை பாதுகாக்க சிறந்த வழியாகும்.
5.Power of documentation.
உங்களுடைய சூட்கேஸ் தொலைந்து போய்விட்டால் அதை கண்டுப்பிடிக்க அதனுடைய போட்டோ உங்களிடம் இருப்பது நல்லது. சூட்கேஸில் உள்ள பொருட்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வதும், என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்? என்ற குறிப்பை எடுத்துக் கொள்வதும் பொருட்கள் தொலைந்துப் போனால் அதை கைப்பற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
6. Never leave your suitcase.
விமான நிலையத்தில் நம்முடைய சூட்கேஸை கவனிக்காமல் விட்டுவிட்டு செல்வது அதை திருடிச் செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உங்களுடைய உடைமைகளை கண் பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. விமான நிலையத்தில் தனியாக இருக்கும் சூட்கேஸ் அச்சுறுத்தலாக கருதப்படும். எனவே, உங்கள் சூட்கேஸை அப்படியே விட்டுவிட்டு செல்வதை தவிர்க்கவும்.
7. Airlines with better tracking records.
பயணம் செய்ய சரியான விமானத்தை தேர்வு செய்யும் போது அவர்கள் இதற்கு முன் சூட்கேஸ்களை எவ்வாறு கையாண்டுள்ளனர் என்ற Statistics ஐயும் சேர்த்து பார்த்துவிட்டு விமானத்தை தேர்வு செய்வது சிறந்தது.
8. Baggage receipt.
உங்களுடைய உடமை காணாமல் போகும் போது அதைப்பற்றி சரியான தகவல் இல்லையென்றால் அதை கண்டுப்பிடிப்பது என்பது கடினமாகிவிடும். எனவே, உங்களுடைய Baggage claim receipt ஐ புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
9. Valuable belongings.
உங்களுடைய விலைமதிப்பற்ற பொருட்களை வெவ்வேறு சூட்கேஸ்களில் பிரித்து வைப்பதை காட்டிலும் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைப்பது பொருட்கள் தொலைந்துப் போகும் அபாயத்தை குறைக்கும்.
10. Track your luggage.
நம்முடைய உடைமைகள் எங்கிருக்கிறது என்பதை டிராக் செய்வதற்கு Real time luggage tracking appஐ பயன்படுத்துவதின் மூலமாக நம்முடைய உடைமைகள் எக்கிருக்கிறது என்பதை எளிதாக தெரிந்துக் கொள்ளலாம். இந்த 10 வழிமுறைகளையும் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை மேற்க்கொள்ளுங்கள்.