ஆச்சரியமூட்டும் உலகின் மிகச் சிறிய நாடு...!

The smallest country in the world...!
vatican city
Published on

லகிலேயே மிகச் சிறிய நாடு வாடிகன்தான். இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை போப் ஆண்டவர் கவனித்து வருகிறார். உலக கத்தோலிக்க கிறித்தவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் போப் ஆண்டவர் இந்த நாட்டினை ஆட்சி செய்து வருகிறார். இதனால்தான் போப் உலக நாடுகளுக்கு செல்லும்போது அவருக்கு சிவப்பு கம்பள மரியாதை வழங்கப்படுகிறது.

போப் இல்லாத நேரத்தில் வாடிகன் நகரின் நிர்வாக அதிகாரியாக செயல்படும் கர்தினாலே ஆட்சி பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார். போப் ஆண்டவரின் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் படை மட்டும் உண்டு. அதில் சேருபவர், பட்டம் பெற்றவராகவும், திருமணம் ஆகாதவராகவும், 25 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்பது விதி.

வாடிகன்  நகரம் இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், மொத்த மக்கள் தொகை சுமார் 900 ஆகவும் இருக்கிறது. வாடிகன் நகரத்தில் போப்பின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது.

வாடிகன் நாடு தோன்றிய வரலாறு சுவாரஸ்யமானது. பல நூறு ஆண்டுகளாக இத்தாலி நாட்டில் இருந்துதான். கத்தோலிக்க கிறித்தவர்கள் தமது சமயக் கொள்கைகளை உலகெங்கும் பரப்பினர். இதனால் இத்தாலியன் மத்திய பகுதியில் போப் ஆண்டவரின் அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது. இதனால் 1859 ம் ஆண்டு இந்தப் பகுதிக்கு "போப் ஆண்டவர் அரசு" என்று பெயர் வந்தது.

அந்நாளில் இத்தாலி நாட்டின் 16,000 சதுர மைல்கள்வரை போப் ஆண்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. 1870 ம் ஆண்டு ரோம் நகரம் இத்தாலி நாட்டின் தேசிய தலைநகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.அப்போது உருவானதுதான் வாடிகன் நாடு.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் இந்த சுற்றுலாத் தலத்தில் வாகனங்களுக்குத் தடை!
The smallest country in the world...!

1929ஆம் ஆண்டு11 பிப்ரவரி அன்றுதான், சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு என்று வாடிகன் நகரம் அறிவிக்கப்பட்டது.  "வாடிகன்"  இதன் பொருள் தோட்டம் என்பதாகும். வாடிகன் நாட்டிற்கென தனிக்கொடி, தனி அஞ்சல்துறை, ரயில் நிலையம், தனி தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு நிலையம் உருவாக்கப் பட்டது. உலக கிறித்தவ பக்தர்கள் தரும் காணிக்கை மூலம் தனது செலவுகளை பார்த்துக் கொள்கிறது.

உலகிலேயே ஐ.நா பாரம்பரிய சின்னமாக ஒரு நாட்டை அங்கிகரித்துள்ளது என்றால் அது வாடிகன் சிட்டியை மட்டும்தான். இதன் பாரம்பரிய இத்தாலிய பெயர்  "சிட்டா டெல் வட்டிகானோ" (Città del Vaticano) ஆகும். இதற்கென தனி பாஸ்போர்ட் உள்ளது.இந்த நாட்டில் தேசிய நாட்கள் எதுவும் கிடையாது. சிறைச்சாலை கிடையாது, யாருக்கும் நிரந்தர குடியுரிமையும் கிடையாது.

வாடிகன் நகரம் அதிகாரப்பூர்வமாக மூன்று மொழிகளை பயன்படுத்தி வருகிறது. இத்தாலிய மொழியை பேச்சு மொழியாகவும், சமய சடங்கிற்கு லத்தீன் மொழியையும், கடித தொடர்புகளுக்கு பிரெஞ்சு மொழியையும் பயன்படுத்துகிறது. உலகிலேயே வாடிகன் வங்கி மட்டுமே தங்களது ஏடிஎம் மெஷினில் லத்தீன் மொழியில் வாடிக்கையாளர்களை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது.

வாடிகன் நாட்டில் மக்களுக்கு வரிகள் கிடையாது. இந்நாட்டின் பிரதான வருமானம் சுற்றுலா பயணிகளின் நுழைவு கட்டணம்.இங்குள்ள மக்களின் பிரதான கைத்தொழில்களாக நாணய உற்பத்தி, முத்திரை உற்பத்தி, ஆடைகள், சுற்றுலா போன்றவைகளாக உள்ளன. இந்நகரில் பெண்கள் தோள் பட்டை மற்றும் தொடை தெரியும்படி ஆடைகள் அணியக்கூடாது. ஆண்கள் ஷார்ட்ஸ் அணிந்து செல்லக்கூடாது என்பது விதி.

வாடிகன் அரண்மனை ரகசியங்கள் நிறைந்தது. இதில் 1600 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்ந பிரமாண்டமான அரண்மனைக்குள் செல்ல 3 கதவுகள் மட்டுமே உள்ளன. அதுவும் எப்போதும் முடியே இருக்கும். முக்கியமான சில நாட்களில் மட்டுமே திறக்கப்படும். இந்த அரண்மனையை சுவிஸ் நாட்டு 3000 காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த அரண்மனைக்குள்தான் உலகிலேயே மிகப் பெரிய தொழில் நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள் உள்ளது. உலகிலுள்ள அத்தனை மொழிகளிலும் பைபிள்  இங்குதான் அச்சடிக்கப்படுகிறது. பெரிய நூலகமும் உள்ளது. இங்கு 75000 நூல் வகைகளும் 1.6 மில்லியன் நூல்களும் உள்ளன. அத்துடன் 40 மொழிகளினை கொண்ட நூல்களும் உள்ளன.

இது சிறிய நகரமாக இருப்பதனால் இங்கு விமான போக்குவரத்து இல்லை. அத்துடன் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறிய அளவிலான போக்குவரத்து முறை மாத்திரமே உள்ளது. அதாவது, வாடிகன் நகரம் நாடு என அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு குழந்தை கூட இங்கு பிறக்கவில்லையாம்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய நதி தீவு எங்கு உள்ளது என்று தெரியுமா?
The smallest country in the world...!

இங்கு இதுவரை ஒரு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை என்பதும், இத்தாலியின் தலைநகர் ரோமுக்கு மத்தியில் அமைந்திருப்பதால், இந்த நகரில் யாருக்கேனும் சிகிச்சை தேவைப்படின் உடனடியாக அவர்கள் ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள். இதனால், இங்கு மருத்துவமனையின் தேவை இல்லாமல் போயிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com