மூணார், தேக்கடிக்கு பைபை சொல்லுங்க.. கேரளாவுல இப்போ புது ட்ரெண்டிங் ஸ்பாட் இதுதான்!

wayanad-travel-guide
wayanad-travel-guide
Published on

கேரளா என்றாலே மூணார், தேக்கடி போன்ற பிரபலமான இடங்கள் தான் பல வருடங்களாக பலருடைய பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக சுற்றுலாப் பயணிகளின் ரசனை முற்றிலுமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், வாகன நெரிசலில் சிக்கித் தவிப்பதை விட, இயற்கையோடு ஒன்றிப்போகும் அமைதியான இடங்களைத் தான் இன்றைய இளைஞர்கள் அதிகம் தேடுகிறார்கள். 

அந்த வகையில் இப்போது சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு சூப்பரான மலைப்பிரதேசம் தான் Wayanad. இந்த அமைதியான சொர்க்கத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இயற்கையின் சொர்க்கம்!

கேரளாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வயநாடு மாவட்டம் ஒரு உண்மையான இயற்கையின் பொக்கிஷம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என விரிந்துகிடக்கும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். நகரத்தின் அந்த இரைச்சலும் காற்று மாசும் துளி கூட இல்லாத ஒரு தூய்மையான இடம் இது. 

காலையில் எழுந்ததும் இலைகளில் படர்ந்திருக்கும் பனித்துளிகளும், மாலையில் மலைகளைத் தழுவிச் செல்லும் பனிமூட்டமும் மனதுக்கு ஒருவிதமான இதமான அமைதியைக் கொடுக்கும். வருடம் முழுவதும் இங்கு குளிர்ச்சியான கிளைமேட் நிலவுவதால், எப்போது வேண்டுமானாலும் இங்கு தாராளமாக பேக் பண்ணிக்கொண்டு கிளம்பலாம்.

இதையும் படியுங்கள்:
இனி ஹெலிகாப்டரில் வேளாங்கண்ணியைச் சுற்றிப் பார்க்கலாம்! - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
wayanad-travel-guide

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்!

இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட அட்டகாசமான இடங்கள் உள்ளன. மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது எடக்கல் குகை (Edakkal Caves). இங்குள்ள பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள பழங்கால சிற்பங்கள் வரலாற்றை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றன.

அடுத்ததாக பனசுரா சாகர் அணை (Banasura Sagar Dam) ஆசியாவிலேயே மிகப்பெரிய மண் அணைகளில் ஒன்று என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இவை தவிர, கண்களுக்கு குளிர்ச்சி தரும் சூச்சிபாரா நீர்வீழ்ச்சி (Soochipara Waterfalls) மற்றும் அமைதியாக படகு சவாரி செய்ய ஏற்ற பூக்கோடே ஏரி (Pookode Lake) என பல சுவாரஸ்யமான இடங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

சாகசப் பிரியர்களுக்கான இடம்!

அமைதியை மட்டும் விரும்புபவர்களுக்கு இல்லை, கொஞ்சம் த்ரில்லான சாகசங்களைத் தேடுபவர்களுக்கும் இது ஒரு பெர்ஃபெக்ட்டான ஸ்பாட். அடர்ந்த காட்டுக்குள் திறந்த ஜீப் சஃபாரி செல்வது இங்கு ரொம்பவே பிரபலம். அப்படி செல்லும்போது யானைகள், மான்கள் மற்றும் பல அரிய வகை வனவிலங்குகளை மிக அருகில் பார்த்து ரசிக்கலாம்.

பாதுகாப்பான இடங்களில் கேம்பிங் செய்வது மற்றும் நண்பர்களோடு சேர்ந்து ட்ரெக்கிங் செல்வது என உங்களின் ட்ரிப்பை முழுமையாக என்ஜாய் செய்ய இங்கு ஏராளமான வசதிகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! மே 8-க்குள் இதை செய்யாவிட்டால் அவ்வளவு தான்!
wayanad-travel-guide

இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் வயநாடு தொடர்பான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் தான் அதிகமாக வைரலாகி வருகின்றன. மூணார் போன்ற வழக்கமான இடங்களுக்குச் சென்று கூட்டத்தில் சிக்கித் தவிப்பதற்கு பதிலாக, எந்த ஒரு தொந்தரவும் இல்லாத இது போன்ற புதிய இடங்களை எக்ஸ்ப்ளோர் செய்வது ரொம்பவே புத்துணர்ச்சியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com