முதிர் கன்னி!

முதிர் கன்னி!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கவிதைத் தூறல்

பி.சி.ரகு, விழுப்புரம்
ஓவியம்
: தமிழ்

*முப்பத்தி ஐந்து ஆண்டுகள்
முடிந்து போய்விட்டன
அவள் வாழ்வில்!

*முடிச்சு போடத்தான்
முன்வரவேயில்லை
யாரும் அவள் கழுத்தில்!

*திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாமே
யாராவது தயவு செய்து
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அவளுக்கு சொர்க்கத்தின் முகவரியை!

*பெண் பார்க்க பலர் வந்து
'பொன்' அதிகம் கேட்டதால்
கன்னியாகவே அவள் இன்னும்
காலம் கழிக்கிறாள்!

*டிக்கடி கல்யாணம் ஆவதுபோல்
அவளுக்கு கனவுகள் வருகிறது
ஆனால், நிஜத்தில் ஒரு நிச்சயதார்த்தம் கூட
நடைபெறவில்லை!

*பாவம் அவள்
யாரும் சிறைவைக்காமலே
சீதையாக சிறைபட்டுக் கிடக்கிறாள்!

*தாலியையும்
குழந்தையையும்
குடும்பப் பொறுப்புகளையும்
சுமக்க வேண்டிய நேரத்தில்
கவலைகளையும்
கண்ணீரையும்
சுமந்து கொண்டிருக்கிறாள்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com