
அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் இந்தியக் கலைநயத்துடனும், பாரம்பரிய கட்டடக்கலையுடனும் கட்டப்பட்டுள்ள மிகவும் முக்கியமான 10 கோவில்களை(10 Hindu temples in america) பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ரீ மகா வல்லப கணபதி தேவஸ்தானம் கோவில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இக்கோவில் தென்னிந்திய ஆகமவிதிபடி முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதற்கான தூண்களும் சிலைகளும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. இங்கு மூலவராக ஸ்ரீ மகா வல்லப கணபதி வீற்றிருக்கிறார்.
இக்கோவில் உலகின் மிக பிரம்மாண்டமான ஆன்மீக மற்றும் பண்பாட்டு வளாகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் புதுடெல்லி மற்றும் குஜராத்தில் காந்திநகர் ஆகிய இரு இடங்களில் உள்ள அக்சர்தாம் கோவில் உலக புகழ் பெற்றவையாகும். சமீபத்தில் நியூஜெர்சி மாகாணத்தில் கட்டப்பட்ட இந்த அச்சர்தாம் கோவில் மிகபெரிய இந்து ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். அமெரிக்காவில் ஆரம்பக் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலின் மூலவராக ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இது பார்ப்பதற்கு நிஜமான திருப்பதி மலை போன்ற உணர்வைத் தரும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் மாலிபு மலைப்பகுதியில் அமைந்துள்ளது இக்கோவில். மேற்கு அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக தலமாகும். கலிபோர்னியாவின் இயற்கை சூழலுக்கு நடுவே Santa monica mountainல் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் முழுக்க முழுக்க வெண்மை நிறத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுள்ள நேர்த்தியான வேலைப்பாடுகள் மற்றும் கோபுரம் பார்ப்போரை கவரும்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் வாஷிங்டன் டி.சிக்கு அருகில் Lanham பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. சைவ வைணவத்தை ஒருசேர இணைத்து 'ஹரிஹர' தத்துவத்தை பறைசாற்றும் வகையில் இக்கோவில் விளங்குகிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா மாநகருக்கு அருகில் ரிவர்டேல் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தன் அசாத்திய வெள்ளை நிற கட்டிடக்கலை அழகால் 'ஜார்ஜியாவின் ஆன்மீக மகுடம்' என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரே இடத்தில் தனித்தனி பெரிய கோவில்கள் அமைந்தள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் மற்றும் ஸ்ரீ இராமலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாட்சி கோவில். இது தமிழ்நாட்டில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாரம்பரியத்தை பிரதிபலிப்பது போல கட்டப்பட்ட ஆலயமாகும்.
அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ளது இக்கோவில். மகாலக்ஷ்மியை முதன்மையாக கொண்டு இக்கோவில் பக்தி மற்றும் அமைதியின் மறுஉருவமாக திகழ்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இந்த சிவ விஷ்ணு கோவில்.இக்கோவில் மிகவும் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, விநாயகர் சாதூர்த்தி போன்ற விழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இக்கோவில் இலினாய் மாகாணத்தில் சிகாகோ மாநகருக்கு அருகில் அமைந்துள்ளது. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களின் ஆன்மீக மற்றும் கலாச்சார மையமாக இக்கோவில் திகழ்கிறது. இக்கோவில் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலை திருத்தலத்தின் ஆகம விதிகளையும், வழிப்பாட்டு முறைகளையும் அப்படியே பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.