ஆடி அமாவாசை 2026: பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெற தர்ப்பணம் செய்யும் முறை!

முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் அமைதியும் செல்வமும் பெருக எளிய வழிகள்!
ஆடி அமாவாசை - Aadi Amavasai 2026
ஆடி அமாவாசை - Aadi Amavasai 2026AI Image
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on

டி அமாவாசை, தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கமாக, பித்ருக்கள் பூலோகத்திற்கு வருவதாக நம்பப்படும் முன்னோர் வழிபாட்டின் மிகப் புனித நாளாக விளக்கப்படுகிறது. ராமேஸ்வரம், திருச்செந்தூர், பவானி கூடுதுறை போன்ற புனித நீர்நிலைகளில் தர்ப்பணம், அன்னதானம், காகங்களுக்கு உணவளிப்பு மூலம் பித்ரு தோஷம் நீங்கி குடும்ப ஒற்றுமை, சந்தான பாக்கியம், தொழில் வளர்ச்சி, திருமண யோகம், நோய் நிவாரணம், வீடு நிலம் யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது. தடுமாறியவனுக்கு தை அமாவாசை, மறந்து போனவனுக்கு மகாளய அமாவாசை, ஆட்டம் கண்டவனுக்கு ஆடி அமாவாசை” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. ஓராண்டில் 12 அமாவாசைகள் வந்தாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கமான தை மாதத்தில், மகர ராசியில் சூரியனும் சந்திரனும் இணையும் நாள் தை அமாவாசை எனப்படுகிறது. அதேபோல், தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில், கடக ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றிணையும் நாள் ஆடி அமாவாசையாக அனுசரிக்கப்படுகிறது.

ஆடி மாதம் தொடங்கும்போதே, பூமியில் வாழும் மனிதர்களை பாதுகாக்க, பித்ருக்கள் என்று கூறப்படும் முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வருவதாகக் கருதப்படுகிறது. எனவே, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் அமாவாசை நாளில், பித்ருக்களை திருப்திபடுத்த, ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் உள்ள பித்ரு சாபம் நீங்கும்.

ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். சிலரால் இந்நாளில் வயோதிகம், உடல்நலக்குறைவு போன்ற பல காரணங்களால் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாது. அவர்கள் வீட்டிலேயே எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை: ஆன்மீக வழிகாட்டி!
ஆடி அமாவாசை - Aadi Amavasai 2026

ஆகஸ்ட் 12, 2026 நாளை புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படும் ஆடி அமாவாசை முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெறுகின்ற மிக முக்கியமான புனித நாளாகும். அன்றைய தினம் சூரியனின் தட்சிணாயணக காலத்தில் முதல் அமாவாசை தொடங்குவது ஆன்மீக ரீதியில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இத்தினத்தில் முன்னோர்களின் ஆத்மாக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து தங்களது சந்ததியினருக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம் நிலவுகிறது.

குடும்பத்தில் உள்ள பித்ரு தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்க இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிக அவசியமான சடங்காகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் பவானி கூடுதுறை போன்ற புனித நதிக்கரைகளிலலும், கடற்கரைகளிலும் மக்கள் பெருமளவில் கூடி மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தர்ப்பணம் கொடுத்து மக்கள் பித்ரு கடன்களை நிறைவேற்றுகின்றனர். இந்நாளில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவதும், முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படும் காகத்திற்கு உணவளிப்பதும் அவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.

ஆடி அமாவாசை - Aadi Amavasai 2026
ஆடி அமாவாசை - Aadi Amavasai 2026AI Image

ஆடி அமாவாசை தர்ப்பணத்தால் ஏற்படும் பலன்கள்:

* குடும்ப ஒற்றுமை: முன்னோர்களின் ஆசீர்வாதம் குடும்பத்தில் ஒற்றுமையையும் அன்பையும் பெருக்கும். கலகங்கள் தீரும்.

* சந்தான பாக்கியம் : பித்ரு தோஷம் குழந்தை பாக்கியத்தை தடுக்கும். அமாவாசை தர்ப்பணம் இந்த தோஷத்தை நீக்கி குழந்தை பாக்கியத்தை குடுக்கும்.

* தொழில் வளர்ச்சி: முன்னோர் ஆசி கிடைத்தால் தொழிலில் தடைகள் விலகும். புதிய வாய்ப்புகள் வரும். லாபம் அதிகரிக்கும்.

* திருமண யோகம்: திருமணம் தாமதமாவதற்கும் பித்ரு தோஷம் ஒரு காரணமாக கருதப்படுகிறது. தர்ப்பணம் செய்தால் விரைவில் நல்ல வரன் அமையும்.

* நோய் விலகும்: குடும்பத்தார் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனரா? தர்ப்பணம் செய்தால் நோயின் தாக்கம் குறையும்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம்: வழிபாடு முதல் கூழ் செய்வது வரை... தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!
ஆடி அமாவாசை - Aadi Amavasai 2026

* வீடு நிலம் யோகம்: சொத்து விவகாரங்களில் நீண்ட நாட்களாக நடக்கும் வழக்குகள் தீர முன்னோர் ஆசி மிகவும் உதவும்.

இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், உங்கள் முன்னோர்களின் முழுமையான ஆசியைப் பெற்று குடும்பத்தில் நிலவும் தடைகள், பித்ரு தோஷங்கள் மற்றும் தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியும் செல்வ வளமும் நிறைந்த வாழ்க்கையைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com