ஆடித் திருவிழா: வாழ்வில் அற்புதம் நிகழ்த்தும் 7 சக்திவாய்ந்த அம்மன் கோவில்கள்!

AI Image Amman temples
ஆடி அம்மன் - Amman templesஆடி அம்மன் -
Updated on

டி மாதத்தின் ஆன்மீக மகத்துவத்தை விளக்கும் இந்த கட்டுரை, பூனே பார்வதி அம்மன், குமரி அம்மன், பரமகல்யாணி, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன், மதுரை மதுரவல்லி, சங்கரன் கோமதி அம்மன், மும்பை ஆதிசக்தி மாரியம்மன் போன்ற ஏழு சக்தி அம்மன் கோவில்களின் சிறப்புகள், நேர்த்திக்கடன் முறைகள், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ராகு கேது தோஷ நிவாரணம் போன்ற பலன்களை விரிவாக அறிமுகப்படுத்துகிறது.

ஆடி மாதத்தில், இந்தியாவில் ஆடி அம்மன் கோவில் இருக்கும் பல பகுதிகளிலும், கிராமப்புறத்து கோவில்களிலும், குறிப்பிட்ட சில வெளிநாடுகளில் இருக்கும் அம்மன் கோவில்களிலும், ஆடிப் பெருவிழா விமரிசையாக நடைபெறும்.

முளைப்பாரி எடுப்பது; தீச்சட்டி ஏந்துவது; கரகமாடுவது; பால்குடம் ஏந்துவது; பூக்குழியில் நடப்பது, மாவிளக்கு போடுவது என பலவிதமான வேண்டுதல்கள் ஆடியில் நடைபெறும்.

ஆடி முதல்நாள் பண்டிகை; ஆடி செவ்வாய்; ஆடி வெள்ளி; ஆடிக் கிருத்திகை; ஆடிப்பூரம்; ஆடித்தபசு; ஆடிப் பதினெட்டு என ஆடி மாதம் முழுவதும் அருமையாக, அற்புதமாக இருக்கும்.

பலவகை அம்மன்கள்; பல்வேறு வகை வழிபாடுகள்; அலங்காரங்கள் மற்றும் நேர்த்திக் கடன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாமா..?

பூனே பார்வதி அம்மன்

108 படிகள் கொண்ட மலைமீது இருக்கும் சக்தி வடிவான பார்வதி அம்மன்கோவில், ஆடி மாதத்தில் அம்மனுக்குரிய வழிபாடுகளுடன், அலங்காரங்களுடன் கோலாகலமாக காட்சியளிக்கும்.

ஆடி செவ்வாய் மற்று ஆடி வெள்ளிக்கிழமைகளில், பெண்கள், அதிகாலையிலேயே, 108 படிகள் ஏறிவந்து அம்மனை வழிபட்டு குடும்ப அமைதி, மாங்கல்ய பாக்கியம் போன்றவைகளுக்காக வேண்டி வழிபடுவது வழக்கம்.

ஆடி அம்மன் - Amman temples
ஆடி அம்மன் - Amman templesAI Image

குமரி அம்மனுக்கு குருதி பூஜை

கன்னியாகுமரியிலுள்ள குமரி அம்மனுக்கு ஒரு காலத்தில் மிருகத்தை பலியிட்டு, அதன் குருதியை பூஜைப் பொருளாக பயன்படுத்தி வழிபட்டனர். காலப்போக்கில் இந்த வழிபாடு மறைந்து போனாலும், அதன் நினைவாக இன்றும் மஞ்சள் நீரில் சுண்ணாம்பு கலந்து சிகப்பு நிறமாக்கி அம்மனுக்கு குருதி பூஜை நடத்தப் படுகிறது. குழந்தை பாக்கியம் பெற, குமரி அம்மனை வேண்டிக் கொண்டு, கன்யா பூஜையை நடத்தினால், குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

திருமண பாக்கியத்திற்கு உதவும் பரம கல்யாணிஅம்மன்

ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள சிவசைல கோவிலில் குடியிருந்து அருள்பாலிக்கும் அம்மன் பரமகல்யாணி. கருவரைக்குப் பக்கத்தில், ஒரு உரல், உலக்கை மற்றும் விரலி மஞ்சள் வைக்கப்பட்டிருக்கும். திருமணவரன் வேண்டுதலோடு வரும் பக்தர்கள் உரலில் சிறிது விரலி மஞ்சளைப்போட்டு உலக்கையால் இடித்து பொடி செய்து பூசிக்கொள்வது வழக்கம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று கூட்டம் அதிகமாக இருக்கும். பண்டிகை காலங்களில், இங்குள்ள அம்மன் கையில் தங்க கடிகாரம் கட்டுவது வழக்கமாக உள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன்

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மிக விசேஷமானது. பிரசித்தமானது. மனதார வேண்டியது நடைபெறும். இக்கோவிலில், ஆடிப் பூரப் பண்டிகை கடந்த 24 ஆண்டுகளாக 11 நாட்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப் பூர பண்டிகையுடன் பூச்சொரிதல் விழாவும் சேர்த்து இங்கே நடைபெறுவதைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
எரியும் தீயில் குளியல்! பொய் சொன்னால் தண்டிக்கும் மரம்! அம்மன் கோயில்களின் அமானுஷ்ய ரகசியங்கள்!
AI Image Amman temples

மருதாணி பூசிக்கொள்ளும் மதுரை மதுரவல்லி அம்மன்

மதுரை மேலமாசி வீதியில் உள்ள மதனகோபால ஸ்வாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் தாயாரின் பெயர் மதன மதுரவல்லி. அம்மனை வழிபடுவோருக்கு, ராகு கேது தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. நேர்த்திக் கடனாக, மருதாணியை அரைத்து, மதுரவல்லி அம்மன் கைகளில் ஆடி மாதத்தில் பூசுகின்றனர்.

கோமதி அம்மன் கோவில் வசனக் குழி

சங்கரன் கோவில் என்றாலே கோமதி அம்மனும், ஆடித்தபசும் நினைவில் வந்துவிடும். மேலும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் சேர்ந்து சங்கர நாராயணராக காட்சியளிக்கும் கோவில் இது. இக்கோவிலில் இருக்கும் வசனக்குழி பள்ளம் தெய்வீக சக்தி வாய்ந்தது. பில்லி சூனியத்தால் வேதனைப் படுகிறவர்களுக்கு இங்கே பூஜை செய்ய, பலன் ஏற்படுகிறது. குழந்தைகளை தத்தெடுப்பது, தத்துக்கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில், அம்மனை வேண்டி, மாவிளக்கு போடுவது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசேஷங்கள்!
AI Image Amman temples

ஆதிசக்தி மாரியம்மன் கோவில், மும்பை

அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். வேண்டிய காரியம் நிறைவேற, ஆடிமாதத்தில் தீமிதிப்பது, தீ சட்டி ஏந்துவது, கூழ் காய்ச்சுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பூரம் இங்கே மிகவும் விசேஷம்.

வண்ண வண்ண கண்ணாடி வளையல் மாலைகளின் அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்கும் குழந்தை பாக்கியம் வேண்டி, திருமணமான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வளைகாப்பு செய்துகொள்ள, ஒன்றிரண்டு வருடங்களில் பலன் கிடைக்கிறது எனக் கூறப்படுகிறது.

ஆடிமாத அம்மன் விழாவில் அநேக பக்தர்கள், குறிப்பாக பெண்கள், அம்மனை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, காக்கும் தெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். மேலும் அவரவர்களுக்கு தெரிந்த பாடல்களைப் பாடி, தாங்கள் செய்த உணவைப் படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.

பல்வேறு பெருமைகள் உடைய ஆடியை நாமும் ஆடிப்பாடி வரவேற்கலாம்!

இந்தத் தொகுப்பின் மூலம் ஆடி மாத வழிபாடுகளின் பின்னணியில் உள்ள ஆன்மீக அறிவியலையும், உங்கள் குடும்பத்தில் உள்ள தடைகள், தோஷங்கள் நீங்கி மாங்கல்ய பலமும் குழந்தை பாக்கியமும் பெறுவதற்கான துல்லியமான நேர்த்திக்கடன் முறைகளையும் நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com