ஆடிப்பெருக்கு 2026: காவிரி கரையில் பாண்டவர்கள் திதி கொடுத்த ரகசியம் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!

மகாபாரத தொடர்பு முதல் ஸ்ரீரங்கம் சீதனம் வரை ஆடிப்பெருக்கின் முழுமையான ஆன்மீகத் தகவல்கள்.
Aadi Perukku | ஆடிப்பெருக்கு
Aadi Perukku | ஆடிப்பெருக்குAI Image
Updated on
Deepam strip
Deepam strip

ஆடிப்பெருக்கு எனக் கூறப்படும் ஆடிப் பதினெட்டாம் நாள், காவிரிக் கரையிலும், அனைத்து நீர் நிலைகளிலும் கொண்டாடப்படுகின்ற  பாரம்பரிய விழா. 

இதன் பின்னணியில் இருக்கும் நிகழ்வு சுவாரசியமானதாகும்.

மகாபாரதப் போர் ஆடி மாதம் முதல்நாள் முதல் பதினெட்டு தேதி வரை நடைபெற்றது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்று அரசுரிமை பெற்றனர்.

போரில் இறந்த தங்களுடைய உறவினர்களுக்கு, பாண்டவர்கள் திதி கொடுத்த நாள் ஆடிப் பதினெட்டு என அழைக்கப்படுகிறது.

விழாவின் நடைமுறைகளும், சிறப்புக்களும்:

நீர் நிலைகளின் வளத்தையும், உழவுத் தொழிலின் சிறப்பையும் போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த நன்னாளில், பெண்கள் ஆற்றங்கரையில் ஒன்றுகூடி மங்கலப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். மேலும், புதுமணத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்வதும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும் விவசாயத்தின் செழிப்புக்காகவும் இயற்கைக்கு மனதார நன்றி தெரிவிப்பதும் இந்தத் திருவிழாவின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் சமூகச் சிறப்பம்சமாகும்.

நதிக்கரைகளில், தேங்காய், பழம், காப்பரிசி, அழகான பூக்கள் ஆகியவைகளை வைத்து படையல் செய்து வழிபடுவதும், முளைப்பாரி வைத்து நீரை வழிபட்டு மகிழ்வதும் முக்கிய நடைமுறைகளாகும்.

காவிரி போன்ற நீர் நிலைகளில் பெருக்கெடுத்து ஓடும்  நீரைத் தெய்வமாக போற்றி மலர்களைத் தூவி வரவேற்று நன்றி செலுத்தும் நாள், புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் ஆற்றங்கரைக்குச் சென்று புதிய தாலிக் கயிறு மாற்றி, புத்தாடை அணிந்து வழிபடும் நன்னாள். 

Green field |ஆடிப்பெருக்கு
Green field |ஆடிப்பெருக்கு

ஆடிப்பட்டம் தேடி விதை பழமொழிக்கு ஏற்றவாறு, இந்நாளில் விதைத்தால், தை மாதம்  பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு ஏற்றதாக இருக்கும்.

ஆடிப்பெருக்கன்று, கிராமத்துப் பெண்கள் ஆற்றில் குளித்து, பூஜை செய்ய ஒரு இடத்தை அங்கே பிடித்துக் கொள்வார்கள். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன்மேல் கோலமிட்டு, வாழையிலையை விரித்து அகல்விளக்கு ஏற்றுவர். வழிபாட்டில், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் ஆகியவைகளைப் படைத்து, ஊதுபத்தி, கற்பூரம் காட்டி வணங்குவார்கள். பின்னர், தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு உதவும் நீருக்கு நன்றி கூறி, வாழை மட்டையில் விளக்குகளை ஏற்றி வைத்து, அதை ஆற்றில் மெதுவாக விடுவார்கள்.

மேலும், அவரவர் வீடுகளில் செய்து கொண்டு வந்த கலப்பு சித்ரான்னங்களை, அதாவது சர்க்ரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சிப்ஸ் ஆகியவைகளை ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆடி கூழ்: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 8 அம்மன் கோயில்களும் அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக அறிவியலும்!
Aadi Perukku | ஆடிப்பெருக்கு

உபரி தகவல்கள்

  • ஆடிப் பெருக்கன்று, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அம்மா மண்டபத்துப் படித்துறையில், காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெறும். 

  • ஆடிப்பெருக்கன்று, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம் பெருமாள் அம்மா மண்டபம் வருவார். சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்த பிறகு, மாலையில் கோவிலுக்குத் திரும்புவார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, மற்றும் மங்கலப் பொருட்கள் காவிரி ஆற்றில் விடப்படும்.

  • ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதல், காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை (மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை,பூம்புகார்))ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

  • பண்டைக்காலத்தில், ஆடிப் பெருக்கன்று,  செல்லரித்துப் போன ஓலைச் சுவடிகளைப் படி எடுத்துக்கொண்டு பழைய சுவடிகளை ஆற்றில் விடும் வழக்கம் இருந்தது.

  • ஆடிப் பதினெட்டு,  ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.

  • ஆடி மாதத்தின் 18 ஆவது நாள்  என்று  நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்கு விழா.

  • இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஆடிப்பதினெட்டை, ஆடிப்பாடி கொண்டாடலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதத்தில் அசுத்தமாகும் பூமி? திரிபுராவில் 7 நாட்கள் நடக்கும் விசித்திர கர்ச்சி பூஜை திருவிழா!
Aadi Perukku | ஆடிப்பெருக்கு
கல்கியின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' கதை, ஓர் ஆடிப் பெருக்கு தினத்தன்று, காவிரியாற்றுப் பெருக்கெடுக்கும் காட்சியோடு மிகச்சிறப்பாகத் தொடங்குகிறது. கல்கி குழுமம் தன் You Tube சானலில் வெளியிட்ட 'பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம்' என்ற 16 வீடியோக்களின் தொகுப்பின் முதல் வீடியோ இதோ: 
logo
Kalki Online
kalkionline.com