அகோரிகள்: மரணத்தை வெல்லும் மர்மமான துறவிகளின் வாழ்வியல்!

சமூகத்தின் எல்லைகளைக் கடந்து இறைவனைத் தேடும் அகோரிகளின் விசித்திரமான ரகசிய வாழ்க்கைமுறை, ஆச்சரியமூட்டும் உண்மைகள்.
அகோரிகள் | Aghoris
அகோரிகள் | AghorisImage credit: AI Image
Updated on
Deepam strip
Deepam strip

கோரிகள் என்பவர்கள் சிவபெருமானின் தீவிர பக்தர்களான ஆன்மீக துறவிகள் ஆவார். இவர்கள் சமூகத்தின் கட்டுப்பாடுகள், நல்லவை, கெட்டவை, தீட்டு ஆகிய அனைத்து எல்லைகளையும் கடந்து அனைத்திலும் இறைவனை காணும் தீவிரமான அகோர வழிமுறையை பின்பற்றுகின்றனர். இதற்கு அர்த்தம் ஒன்றுமில்லாத வாழ்க்கை என பெயர். 

அகோரிகளின் வாழ்க்கை முறை:

இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மயானங்களில் வசிப்பார்கள். எரியும் சடலங்களில் இருந்து சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்வார்கள். மனித மண்டை ஓடுகளை உணவு உண்ணவும் தண்ணீரை அருந்தவும் பயன்படுத்துகின்றனர். இறந்தவர்களின் எலும்புகளை அணிகலன்களாக பயன்படுத்துகின்றனர். 

மரணத்தை வெல்வதே இவர்களது குறிக்கோள் ஆகும். பிணங்கள் மீது அமர்ந்து தியானம் செய்வது வருகிறார்கள். ஒரு சில அகோரிகள் சமைக்கப்படாத மனித மாமிசத்தை கடுமையான சடங்குகளின்போது மட்டும் உண்கிறார்கள். எல்லா அகோரிகளும் உண்பதில்லை.

உலக இன்பத் துன்பங்களை துறந்து நிர்வாணமாக அல்லது இறந்தவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறார்கள். மக்கள் மத்தியில் வாழாமல் அடர்ந்த காடுகள் மயானம் மற்றும் குகைகளில் தனித்து வாழ்கின்றனர்

அகோரிகள் சிவபெருமான் வடிவமான பைரவரை முதன்மையான கடவுளாக நினைத்து வழிபடுகிறார்கள். அனைத்து உயிர்களிலும் இறைவனை உணர்வதே இவர்களது தத்துவம். 

இவர்களின் மூதாதையர்கள் பண்டைய காபாலிகா பிரிவில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. 

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபாகினா ராம்போன்ற துறவிகள் வழி நடத்தப்படும் மரபை பின்பற்றுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பரம்பொருள் என்பது என்ன? பஞ்சபூதங்களின் ரகசியமும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சியும்!
அகோரிகள் | Aghoris

இவர்கள் பெரும்பாலும் கங்கை நதிக்கரையிலும் மற்றும் மயானங்களிலும் சுடுகாட்டுப் பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள். 

இறப்பு என்பது முடிவல்ல; அது ஒரு மாற்றம் என நம்புகிறார்கள்.  எனவே, இவர்கள் சுடுகாடுகளை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்கள். 

உடல் முழுவதும் சுடுகாட்டு சாம்பலை எடுத்து பூசிக் கொள்வார்கள். 

இவர்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கும்பமேளா நடக்கும் சமயத்தில் மட்டும் அனைவரும் ஒன்று கூடுவார்கள். இவர்களது வாழ்க்கை முறை மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாகும். இடது கையில் மண்டை ஓட்டையும் வலது கையில் மணியையும் வைத்துக்கொண்டு நடமாடுவார்கள். காசி நகரத்தில் அதிகமாக காணப்படுவார்கள். 

அகோரிகள் | Aghoris
அகோரிகள் | Aghoris

அகோரிகள் கஞ்சா அதிகமாக பயன்படுத்துகிறார்கள். சமஸ்கிருதத்தில் அகோரிகள் என்றால் பயம் இல்லாதவர்கள் என்று அர்த்தம். இவர்களின் செயல்கள் ஆர்வத்தையும் பயத்தையும் உண்டு பண்ணும். 

இவர்கள் தனியாகத்தான் இருப்பார்கள்; மனிதர்களை எளிதில் நம்பி விட மாட்டார்கள். தங்கள் சொந்த குடும்பத்தினர் யாரிடமும் எந்த உறவும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். 

அக்காலத்தில் அகோரிகள் நேபாள அரசரின் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். இவர்களுக்கு எந்த கோரிக்கையும் கிடையாது.

அடிக்கடி கஞ்சா புகைத்தாலும் சுய நினைவுடன் இருப்பார்கள். 

கும்பமேளாவின்போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி காணிக்கையை ஏற்றுக்கொண்டால் அவர்கள் அகோரிகள் அல்ல என கூறுகிறார்கள். வட இந்தியாவில் ஆண் அகோரிகளை மட்டுமே பார்க்க முடியும். மேற்கு வங்கத்தில் பெண் அகோரிகளும் இருக்கிறார்கள். 

இவர்கள் தொழு நோயாளிகளை ஆதரிக்கிறார்கள். வாரணாசியில் தொழுநோயாளிகளுக்கு என்று ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆயுர்வேத சிகிச்சை தொழு நோயாளிகளுக்கு அளித்து வருகிறார்கள்.

இவர்களின் எண்ணிக்கைகளை கணக்கிடுவது கஷ்டம். ஏனென்றால் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். காசி நகரத்தில் அதிக அளவில் அகோரிகள் காணப்படுகிறார்கள் 

இதற்கு அடுத்தபடியாக நேபாளம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிக அளவில் அகோரிகள் உள்ளனர். 

இதையும் படியுங்கள்:
நதியின் மடியில் அமர்ந்திருக்கும் கட்டில் துர்கா பரமேஸ்வரி அம்மனின் அதிசய வரலாறு!
அகோரிகள் | Aghoris

இவர்களை சாதுக்கள் என அழைக்கிறார்கள். இந்த அகோரிகள் பைரவர் வீரபத்திரர் ஆகியோரை தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். இவர்கள் தங்களை உணர்வது மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 

இவர்களது வாழ்க்கை முறை பற்றி வெளிநாட்டவர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.. அகோரிகள் ஆக வேண்டும் என்றால் உடனடியாக அகோரிகளாக மாற முடியாது. அதற்கு 12 ஆண்டு காலம் தவம் செய்ய வேண்டும். அகோர குருவின் வழிகாட்டுதலில்படி நடக்க வேண்டும். 

அகோர குருவை தேடுவது கஷ்டம்; எந்த இடத்திலும் நிலையாக இருக்க மாட்டார். அகோரிகள் யாசகம் பெற்றால் அவர்கள் உண்மையான அகோரிகள் கிடையாது. 

இப்படி விசித்திரமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தங்களுக்குள் வகுத்துக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற நதிக்கரையில் அல்லது மயானம் சுடுகாடு போன்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். உலகம் பலவிதம் அதில் மனிதர்களும் பலவிதம்.

logo
Kalki Online
kalkionline.com