

பழையாறையில் வாழ்ந்த சிவபக்தர் அமர்நீதி நாயனார்:
அமர்நீதி நாயனார் பழையாறை என்ற ஊரில் பிறந்தவர். இவர் ஒரு வணிக வியாபாரி. வணிகம் செய்து நிறைய பொன்னும், பொருளும், செல்வமும், மாட மாளிகையிலும் சேர்த்து செல்வந்தராக இருந்தார்.
இவர் ஒரு தீவிரமான சிவன் பக்தர். இக்காரனத்தினால் இவர் தன் குடும்பத்துடன் திருநள்ளாறு வந்து சிவனடியாருக்காக ஒரு மடம் கட்டினார். அங்கு வரும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து உடுத்திக்கொள்ள புது கோமணம் கொடுத்து சிவ தொன்றாற்றினார்.
அமர்நீதி நாயனாரின் இந்த பக்தியை சோதிக்க நினைத்த எம்பெருமான் ஒரு சிவனடியார் வேடத்தில் அந்த மடத்திற்கு வந்தார். அமர் நீதி நாயனார் அந்த சிவனடியாரை வணங்கி தாம் இன்று இங்கு தங்கி உணவருந்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அந்த சிவனடியாரும் சரி என்று கூறி தான் வைத்திருந்த கம்பில் இரு கோமணங்களில் ஒன்றை அமர் நீதி நாயனாரிடம் கழட்டி கொடுத்துவிட்டு நான் ஆற்றில் சென்று குளித்துவிட்டு வரும் வரை இதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
அமர் நீதி நாயனாரும் அந்தக் கோமணத்தை பாதுகாப்பாக வைத்தார். பின் சிவனடியார் திரும்பி வரும் பொழுதும் பெருமழை பெய்து கொண்டிருந்தது. அவர் முழுவதுமாக நனைந்து அந்த மடத்திற்குள் வந்தார். அமர்நிதி நாயனாரை பார்த்து என்னுடைய கோமணம் நனைந்து விட்டது. இன்னொரு கோமணத்தை தங்களிடம் கொடுத்தேன் அதை தருமாறு கேட்டார். அமர் நீதி நாயனார் சென்று பார்த்தபோது அவர் வைத்த இடத்தில் அந்த கோமணம் இல்லை.
அமர் நீதி நாயனார் கலங்கி அதை சிவனடியாரிடம் கூறினார். சிவனடியார் சிரித்துக்கொண்டே மக்களுக்கு புது கோமணம் தருவதாக கூறி என்னுடைய கோமணத்தைதான் திருடி வைத்துக்கொண்டீர்கள் என்று கூறினார். மனம் கலங்கிய அமர் நீதி நாயனார் தங்களுடைய கோமணத்திற்கு பதிலாக நான் வேறு ஒரு புது கோமணம் தருவதாக கூறினார். அதை சிவனடியார் மறுத்துவிட்டார்.
அமர்நீதி நாயனார் சிவனடியாரிடம் வேண்டுமென்றால் தங்களுக்கு அனைத்து பொன் பொருட்களும், வைர வைடூரியங்களும், பட்டாடைகளும் தருவதாக கூறினார். சிவனடியாரோ நான் ஒரு பிரம்மச்சாரி எனக்கு எதற்கு பட்டாடைகள் என்னுடைய கிழிந்த கோமணத்திற்கு இணையாக ஒரு கோமணம் தருக என்று கேட்பார்.
துலாபாரத்தில் ஏறி முக்தி பெற்ற அமர்நீதி நாயனார் குடும்பம்:
துலாபாரத்தில் சிவனடியார் உடைய கிழிந்த கோமணமும் மறுபக்கத்தில் அமர் நீதி நாயனார் தன்னிடமிருந்து அனைத்து விதமான புது கோமணங்களையும் வைர வைடூரியங்களையும் வைத்தபோதும் தராசு நேராகவில்லை. அமர் நீதி நாயனார் சிவனடியாருடன் மேலும் இருக்கும் பொருட்களை வைக்க அனுமதி கூறினார்.
சிவனடியாரும் சரி என்று கூறியவுடன் அமர் நீதி நாயனார் அந்த துலாபாரத்தை தன்னுடைய மனைவி மகனுடன் சுற்றி வந்து இதுவரை நான் ஆற்றிய சிவத்தொண்டில் ஏதேனும் குறை இருந்தால் மன்னித்தருளுக என்று கூறி மனைவி மகனுடன் துலாபாரத்தில் ஏறி அமர்ந்தார். அப்பொழுதே துலாபாரம் சிவனுடைய கோமணத்திற்கு நேராக வந்தது.
அந்த சமயத்தில் சிவனடியாராக வந்த எம்பெருமான் பார்வதி தேவியுடன் அமர் நீதி நாயனாரையும் அவருடைய மனைவி மகனைக்கும் முக்தி அளித்து தன்னுடன் சிவப்பதத்தில் இணைத்துக் கொண்டார்.
ஆன்மீகப் பாதையில் பக்தி மற்றும் தியாகத்தின் உச்சக்கட்ட எல்லையை உணர்ந்து, உலகியல் ஆசைகளைக் கடந்து இறைவனின் திருவடியை அடையும் உன்னதமான மனப்பக்குவத்தையும், வாழ்வின் உண்மையான நற்பேற்றையும் வாசகர்கள் இந்த வரலாற்றின் மூலம் அடைவார்கள்.