அர்ச்சகரை சுட்டெரித்த சிவன் கோபம்! அம்பாசமுத்திரம் கோயில் ரகசியம்!

பொய் சத்தியத்திற்கு கிடைத்த தண்டனையும், தாமிரபரணி கரையில் அமைந்த ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயிலும்.
காசிநாதர் கோயில் - Erithandavar Temple
காசிநாதர் கோயில் - Erithandavar Temple
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள முக்கியமான சிவன் கோவிலாகும் (காசிநாதர் கோயில்). இந்த கோவில் காசிப முனிவர் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலமாகும். மேலும் இக்கோவில் புதன் சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மூலவர் காசிநாதர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். கிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் காணப்படுகிறது.

ஐப்பசி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும். மூலவர் காசிபநாதர் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. இக்கோவில் எரித்தாண்டவர் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. தல விருட்சம் நெல்லி மரம். இந்த கோவிலில் எரித்தாண்டவர் மற்றும் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதிகள் உள்ளன.

முற்காலத்தில் காசிப முனிவர் தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தபோது வெண் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டார். அவர் பிடித்து வைத்த சிவலிங்கமே அவர் பெயரால் காசிப நாதர் என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் சிவ சர்மா என்ற அந்தணர் யாத்திரையாக இங்கு வந்தார். அப்போது இந்த கோவிலின் அர்ச்சகராக இருந்த சாந்த தேவன் என்பவருடன் பழகி வந்தார்.

அந்தணர் சிவ சர்மா என்பவர் அர்ச்சகர் சாந்த தேவனிடம் நான் பொதிகை மலை சென்று அகஸ்தியரை பார்த்து வருகிறேன் அது வரையிலும் எனது இந்த நகை பொக்கிஷத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள் எனக் கூறி சென்றார். நீண்ட நாட்கள் கழித்து அகஸ்தியரை வழிபட்டு வந்து மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து அர்ச்சகர் இடம்தான் கொடுத்து வைத்த நகை பொட்டலத்தை திருப்பி கேட்டார்.

அதற்கு சாந்த தேவன் என்ற அர்ச்சகர் நான் உங்களை இதுவரை பார்த்ததே இல்லை நீங்கள் என்னிடம் எதுவும் கொடுக்கவும் இல்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவ சர்மா ஊர் பெரியவர்களிடம் முறையிட்டார். ஊர் பெரியவர்கள் அர்ச்சகர் இடம் இந்த புளிய மரத்தின் மீது சத்தியம் பண்ணுங்கள் என்றார்கள்.

அதற்கு அர்ச்சகர் புளிய மரத்தின் மீது பொய் சத்தியம் கூறினார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் புளிய மரத்தோடு சேர்த்து அந்த அர்ச்சகரை எரித்துவிட்டார். பின்னர் அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை மீண்டும் ஆட்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
கடலில் கிடைத்த பாறை... உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவான மர்ம வரலாறு!
காசிநாதர் கோயில் - Erithandavar Temple

எனவே இந்த கோவிலுக்கு எரித்து ஆட்கொண்டவர் என்று பெயர் வந்தது. அதுவே மருவி எரித்தாண்டவர் என பெயர் பெற்றது.

பின்னர் அர்ச்சகர் சாந்ததேவன் பொக்கிஷத்தை சிவ சர்மாவிடம் ஒப்படைத்தார். இக்கோவில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோவில் ஆகும். இந்தக் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்று அண்ணா அபிஷகம் நடைபெறுவது இல்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப் பிறப்பு அன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.

காசிநாதர் கோயில் - Erithandavar Temple
காசிநாதர் கோயில் - Erithandavar Temple

மரகதாம்பிகைக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் தொட்டில் கட்டியும் வளையல் அணிவித்தும் வழிபட்டால் பெண்களுக்கு திருமணமும் குழந்தை பாக்கியமும் கைகூடி வரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அம்பாள் பெயரால் அம்பாள் சமுத்திரம் என ஆதி காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் அந்தப் பெயர் மருவி அம்பாசமுத்திரம் ஆனது.

பொய் சத்தியம் செய்த அர்ச்சகரை எரித்த சிவ பெருமான் மிகவும் உக்கிரமாக காணப்பட்டார். அவரது கோபத்தை தணிப்பதற்காக பார்வதி தேவி பெருமாளிடம் வேண்டிக்கொண்டார். பெருமாள் சிவனை சாந்தப்படுத்தினார். எரித்தாண்டவர் சன்னதிக்கு எதிரே பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள நடராஜர்புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார்.

தைப்பூசம் வியாழக்கிழமை வரும் நாளில் மட்டும் நடராஜருக்குபுனுகு சாத்தி வழிபாடு நடைபெறும்.

பங்குனி உத்திரம் திருவாதிரை தைப்பூசம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். இங்குள்ள காசிபநாதருக்கு திருப்பத்துடைய நாயனார் திருப்பத்துடைய மகாதேவர் காசிநாதர் என்ற பெயர்களும் உண்டு

அம்பாள் மரகதாம்பிகை தெற்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து காட்சி தருகிறார்.

காசிப முனிவரின் யாக குண்டத்தில் இருந்து சிவலிங்கம் தோன்றியதாக வரலாறு. இந்தக் கோவில் பல ஆண்டு காலம் மொட்டை கோபுரமாகவே இருந்தது. சமீபத்தில்தான் ராஜகோபுரம் எழுப்பி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோவில் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சப்த கன்னிகை தட்சிணாமூர்த்தி துர்க்கை சண்டிகேஸ்வரர் புனுகு சபாபதி நடராஜர் நவகிரகங்கள் பைரவர் சன்னதிகள் உள்ளன.

சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பங்குனித் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். எட்டாம் திருநாள் அகஸ்தியர்க்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

நெல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலை ஒரு முறையேனும் தரிசித்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இதையும் படியுங்கள்:
காசி பிந்து மாதவர் கோவில்: 5 நதிகள் சங்கமிக்கும் ரகசியமும் சிவபெருமான் ஓதும் ராம மந்திரமும்!
காசிநாதர் கோயில் - Erithandavar Temple
logo
Kalki Online
kalkionline.com