காசி பிந்து மாதவர் கோவில்: 5 நதிகள் சங்கமிக்கும் ரகசியமும் சிவபெருமான் ஓதும் ராம மந்திரமும்!

Bindu Madhav temple - பிந்து மாதவர்
Bindu Madhav temple - பிந்து மாதவர்
Updated on

காசியில் உள்ள பிந்து மாதவர் கோவில் குளம் மிக விசேஷமானது‌ பிந்து என்றால் துளி, மாதவ் என்றால் விஷ்ணு. கங்கையின் ஒவ்வொரு துளியிலும் இறைவன் வீற்றிருக்கிறார் என்பதைக் குறிக்கும் விதமாக இப்பெயர் பெற்றது.‌ அக்னி பிந்து என்ற முனிவர்  விஷ்ணுவை நோக்கி இங்கு கடுமையான தவம் புரிந்தார்‌. அவரது தவத்தில் மெச்சி பெருமாள்  இங்கு தோன்றி முனிவரின் பெயரால் பிந்து மாதவர் என்ற திருநாமத்துடன் இங்கேயே எழுந்தருளினார்.‌ 

பெருமாளின் திருவடியில் இருந்து  கங்கை உருவானதால் கங்கைக் கரையில் அமைந்துள்ள இத்தலம் விஷ்ணுவின் சக்தி நிறைந்த வழிபாட்டுத்தலமானது.‌ பஞ்சகங்கா காட் அருகே இது அமைந்துள்ளது.‌ இங்கு கங்கை,யமுனை, சரஸ்வதி, கிரணா, தூதபாபா ஆகிய ஐந்து நதிகளும் கண்ணுக்குத் தெரியாமல் சங்கமிப்பதாக நம்பப்படுகிறது. 

இந்த படித்துறையில் நீராடி பிந்து மாதவனை தரிசிப்பதால் கோடி புண்ணியம் பெறலாம். கருவறையில் பெருமாள் சங்கு சக்கரம், கதாயுதம் ஏந்தி கையில் தாமரையுடன் கருப்புப் பளிங்குச் சிலையாக  மிக கம்பீரமாக பெருமாள் காட்சி தருகிறார். 

இவருக்குப் பக்கத்திலேயே விநாயகர், சிவன் மற்றும் பல சிலைகள் வெள்ளை பளிங்குக் கல்லில் வடிக்கப் பட்டுள்ளன.  இது ஹரி ஹர ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது‌.

16ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர் ராஜா மான் சிங் என்பவரால் இக்கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. ஆனால் 1669ல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இக்கோவில் இடிக்கப்பட்டு, அங்கிருந்த தூண்களைக்கொண்டே ஆலம்கிர் மசூதி கட்டப்பட்டது. கோவில் இடிக்கப்படும் முன்பு பெருமாள் சிலையை பக்தர்கள் கங்கை நதியில் மூழ்கடிக்க பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

‌பின்னர் 17ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜி மற்றும் 19ம் நூற்றாண்டில் மராட்டிய மன்னன் பின்னால் என்பவர்களால் புதிய கோவில் மசூதிக்கு அருகிலேயே புதுப்பிக்கப்பட்டு  நிலையானது மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Bindu Madhav temple - பிந்து மாதவர்
Bindu Madhav temple - பிந்து மாதவர்Ai Image

ராமகிருஷ்ணர் காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி ஆகியோரை தரிசித்ததோடு  கங்கை நதி அருகே உள்ள பிந்து மாதவர் கோவில் சென்றார்‌. அவரைப் பார்த்து பரவச நிலை அடைந்தார்‌. காசியில் ராமகிருஷ்ணருக்குத் தெய்வீக காட்சி ஒன்று கிடைத்தது‌.

கங்கையில் இறந்தவர்களை எரிக்கும் மணிகர்ணிகா படித்துறை வழியாக படகில் சென்று கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒவ்வொரு உடலருகிலும் சென்று அவர்கள் காதில் ராம மந்திரம் ஓதி  மோட்சம் அளிப்பதையும், பார்வதி தேவி அவர்களுக்கு விசிறி அவர்களின் தலைகளை அறுப்பதையும் நேரில் கண்டு மிரண்டு போனார்.

இதையும் படியுங்கள்:
சுந்தரருக்கு வழிகாட்டிய ஒரத்தூர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்: ஜூலை 12-ல் நடக்கும் வரலாற்று நிகழ்வு!
Bindu Madhav temple - பிந்து மாதவர்

இதன் காரணமாகவே காசியில் இறப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை‌  சிவனே மோட்சம் தருகிறான் என்று உலகிற்கு எடுத்துரைத்தார். துளசிதாசர் வடமொழியில் ராமாயணத்தை ராமசரிதமானஸ்  ஆக எழுதினார்  அதற்கு பண்டிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.‌ அவர் தனது காவியம் பிரதிகளை விஸ்வநாதர் கோவிலிலும் பிந்துமாதவர் காலடியிலும் வைத்து பிரார்த்தனை செய்தார்‌.

மறுநாள் காலை அந்தப் பிரதிகளின் மேல் விச்வனாத பெருமாளும் பிந்துமாதவபெருமாளும் சத்தியம் சிவம் சுந்தரம் என்று கையொப்பமிட்டதாக ஆன்மிக வரலாறு உண்டு.

ஹனுமான்சாலீசா  பிந்துமாதவர் படித்துறையில்தான் துளசிதாசரால் இயற்றப்பட்டது‌. இத்தனை பெருமைகள் மிகுத்த பஞ்சகாட் படித்துறையில் ஸ்நானம் செய்து  பிந்து மாதவியின் அருளை எல்லோரும் பெறுவோம்.சுந்தரருக்கு வழிகாட்டிய ஒரத்தூர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்: ஜூலை 12-ல் நடக்கும் வரலாற்று நிகழ்வு!

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் செப். வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து- தேவஸ்தானம் அறிவிப்பு..!!
Bindu Madhav temple - பிந்து மாதவர்

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் காசி திருத்தலத்தின் மிக முக்கிய வழிபாட்டுத் தலமான பிந்து மாதவர் ஆலயத்தின் தோற்றம், அதன் பின்னால் இருக்கும் வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் காசியில் இறப்பவர்களுக்குச் சிவனே முக்தி தரும் ஆன்மிகப் பேருண்மைகளைப் புரிந்துகொண்டு, உங்களின் அடுத்த காசிப் பயணத்தை ஆன்மிக ரீதியாக முழுமையானதாக மாற்றியமைக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com