அனந்த விரதம்: 14 முடிச்சு கயிற்றின் ரகசியமும் அற்புதப் பலன்களும்!

இந்த விரதத்தை தம்பதியராக மேற்கொண்டால் குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், செல்வ வளம் பெருகும்.
அனந்த விரதம்
அனந்த விரதம்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

பெருமாளுக்குக்குரிய முககிய விரதங்களுள் ஒன்று அனந்த விரதம் (anantha vratham). பிரபஞ்சத்தைக் காப்பவரும் பல அவதாரங்களுக்குப் பெயர் பெற்றவருமான விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்துப் பண்டிகையாகும். இது ‘அனந்த சதுர்த்தசி விரதம்’ (anant chaturdashi) என்றும் ‘ஆனந்த பத்மநாப விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஆனந்தா’ என்றால் ‘முடிவில்லாத’ என்று பொருள். அதாவது ‘முடிவில்லாத’ அல்லது ‘எல்லையற்ற’ நன்மைளையும், ஆனந்தத்தையும் தரக்கூடிய விரதம் இதுவாகும்.

‘பத்மம்’ என்றால் ‘தாமரை’. பெருமாள் சயன கோலத்தில் பாற்கடலில் சயனித்த போது, அவரது நாபிக் கமலத்தில் இருந்து தாமரை தோன்றி, அதிலிருந்து பிரம்ம தேவர் அவதரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற நாளே ‘அனந்த சதுர்த்தசி’ எனப்படுகிறது.

மேலும் இந்த நாளில் தான் பெருமாள் ஆதிசேஷன் மீது அனந்த சயனம் கொண்டு காட்சி அளித்ததாகவும் ஐதீகம். ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் (பத்ரபத மாதம்) வரும் வளர்பிறை சதுர்தசி திதியில் ‘அனந்த விரதம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ‘அனந்த விரதம்’ வரும் 25-ம்தேதி (செப்டம்பர் 25) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

சதுர்த்தசி திதி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 24-ம் தேதி இரவு 11:18 மணிக்குத் தொடங்குகிறது.

திதி முடியும் நேரம்: செப்டம்பர் 25-ம்தேதி இரவு 11:06 மணிக்கு நிறைவடைகிறது.

25-ம்தேதி பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 06:28 மணி முதல் இரவு 11:06 மணி வரை.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து 14 ஆண்டுகள் துன்பங்களை அனுபவித்தபோது, கிருஷ்ணர் அருளிய விரதம் இதுவாகும்.

இந்த விரதத்தை கடைப்பிடித்தே பாண்டவர்கள் இழந்த ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் அடைந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

anantha vratham
anantha vrathamAI image

விஷ்ணு பகவானின் பக்தர்கள் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, அமைதியான மற்றும் வளமான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்து, 'அனந்த சூத்திரம்' எனப்படும் புனித நூலைக் கட்டுகிறார்கள்.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் பெருமாளின் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு விநாயகர் பூஜை செய்து யமுனை உள்பட புனித நதிகளை வணங்கி பூஜிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து அதோடு 14 முடிச்சுகள் கொண்ட சிவப்பு அல்லது மஞ்சள் நிற புனிதமான கயிற்றை வைத்து பூஜை செய்யவேண்டும். இந்த 14 முடிச்சுகளும் பிரபஞ்சத்தின் 14 லோகங்களைக் குறிக்கின்றன. இது தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்து, வாழ்நாள் முழுவதும் அமைதியையும் செல்வத்தையும் தரும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: 35 அடி பிரம்மாண்ட விஸ்வரூப தரிசனம்!
அனந்த விரதம்

பூஜை முடிந்ததும் அந்த கயிற்றை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பாரம்பரியமாக ஆண்களுக்கு வலது மணிக்கட்டிலும், பெண்களுக்கு இடது மணிக்கட்டிலும் நூல் கட்ட வேண்டும். சதுர்த்தசி திதி 14-வது திதி என்பதால் இறைவனுக்கு 14 வகை நைவேத்தியங்கள் செய்வது மிகவும் விசேஷம்.

அனந்த விரதத்தை 14 ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள், துன்பங்கள் நீங்கிவிடும் என்று நம்பிக்கை. இந்த விரதத்தை தம்பதியராக மேற்கொண்டால் குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், செல்வ வளம் பெருகும்.

அனந்த சதுர்தசி, விநாயகர் விசர்ஜனத்துடன் ஒத்துப்போகிறது. வட இந்தியா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், அனந்த சதுர்தசி, விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின் இறுதி நாளாக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இந்நாளில் நீர்நிலைகளில் கரைத்து (விசர்ஜனம்) விநாயகப் பெருமானுக்கு விடை கொடுக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பரிவர்த்தினி ஏகாதசி: யோக நித்திரையில் பெருமாள் நிலை மாறும் அதிசயம்! என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
அனந்த விரதம்

இழந்த செல்வத்தைப் பெறவும், மன அமைதியை அடையவும், பாவங்களிலிருந்து விடுதலை பெறவும் அனந்த சதுர்த்தசி ஒரு சிறந்த ஆன்மீக நாளாகக் கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com