திருப்பாவையில் திவ்ய தேசங்கள்!

Divine Lands!
Andal thiruppavai...Image credit - temple.dinamalar.com
Published on

ஶ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை  தனுர் மாத பிறப்பில் தொடங்கி பொங்கல் உடன் முடிவடையும். இந்த திருப்பாவை பாசுரத் தை பாடுவதும் கேட்பதும் புண்ணியம். 

அப்படிப்பட்ட திருப்பாவை பாசுரங்கள்   மார்கழி திங்கள் தொடங்கி வங்கக்கடல்  முடிய கீழ்காணும் திவ்ய தேசங்கள்  இதோ.

1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .

5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக்கடிகை. 

இதையும் படியுங்கள்:
சிவபெருமானை ஏன் வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்கிறோம் தெரியுமா?
Divine Lands!

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம். 

13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.

14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.

15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.

16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.

17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.

18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.

19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.

20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.

21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.

22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.

இதையும் படியுங்கள்:
ஸஹஸ்ர நாம பாராயணத்தால் என்ன பலன்? யாருக்கு பலன்?
Divine Lands!

23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.

24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.

25. ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ணபுரம்.

26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - (திருவேங்கடம்).

28 கற்றுக்கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை.)

30) வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).  

நன்றி: (P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com