கிரிவலம் செல்வதால் இத்தனை நன்மைகளா?

Are there so many benefits of going to Krivalam?
Thiruvannamalai girivalam
Published on

கிரிவலம் என்பது புனிதமான ஸ்தலத்தையோ, தெய்வீகம் உள்ள இடத்தையோ, மலையை சுற்றி வருவதல் கிரிவலம் எனப்படுகிறது. கிரிவலம் சுற்றுவதால் தேக ஆரோக்கியமும், நிம்மதி, அமைதியும், ஆன்ம பலமும் கிடைக்கும்.

நன்மைகள்

கிரிவலம் செல்வதால் மன அழுத்தம் | கால்களில் இரத்த ஓட்டம் சீராகும். மலையை வலம் வர மனது விரியும்.

நடந்து வழிபட தேக நலன்  கூடும். நாலு பேரோடு நடக்க நல்ல உறவு பெருகும். அடியார்களை நினைக்க அமைதி பெருகும்.

ஆன்மிக ஒளி  கிடைக்கும். அண்ணாமலையாரை கிரிவலம் வர சிவனின் அருள் பெறலாம்.

பெளர்ணமியில் கிழமைகளில் தனிச்சிறப்பு.

ஞாயிறு

ஞாயிறு அன்று பெளர்ணமி வந்தால் அது சூரியனக் குரியதாகும். சூரியனால் ஏற்படும பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
திருக்கார்த்திகையின் மூன்று வகையான கார்த்திகை தீபங்களும் -தோன்றிய வரலாறும்!
Are there so many benefits of going to Krivalam?

திங்கள்

திங்களன்று வரும் பெளர்ணமி நாளில் சந்திர திசை உள்ளவர்கள் சுற்றி வந்தால் சங்கடங்கள் தீர்ந்து சகல வளங்களும் பெறுவார்கள்.

செவ்வாய்

செவ்வாயன்று  வரும் பெளர்ணமி நாளில் முருகப்பெருமான், அங்காரகனுக்கு உகந்தநாள். இந்த நாளில் சுற்றினால் எதிர்ப்புகள் நீங்கி, செல்வ வளம், குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.

புதன்

புதனன்று வரும் பௌர்ணமி நாளில்  புதன் திசை நடப்பவர்கள் சுற்றி வந்தால் நன்மைகள் நடக்கும். அறிவாற்றல், ஞாபகத்திறன் பெறவும், உறவுகள் பலப்படும். வாழ்வில் நல்லது பெறுவார்கள்.

 வியாழன்

வியாழனன்று வரும் பெளர்ணமி நாளில் குரு திசை உள்ளவர்கள் சுற்றிவர குரு பகவானின் அருளும், அறிவாற்றல் சகல வளமும் பெறுவார்கள்.

 வெள்ளி

வெள்ளியன்று வரும் பௌர்ணமி நாளில்  சுக்ரனுக்கு உகந்த தினமாக இருப்பதால்  சற்றி வந்தால் களத்திர தோஷம், திருமணத்தடை, சுக்கிர தசை நடப்பவர்கள் சுற்றிவர பிரிந்த கணவன், மனைவி ஒன்று  சேர்வார்கள்.

சனிக்கிழமை

சனியன்று வரும் பெளர்ணமி நாளில் சனீஸ்வரரை வணங்க ஏற்ற தினமாக உள்ளதால் சனி திசை நடப்பவர்கள் சுற்றி வர சனியும், பெளர்ணமியும் இணைந்தால் சனியால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் நீங்கும். தீராத ஆரோக்கிய பிரச்னைகள் தீரும். மனதில் உற்சாக பிறக்கும். நவக்கிரக தோஷங்கள் விலகும்.

இதையும் படியுங்கள்:
திருக்கயிலை மலையைத் தூக்கிய இராவணனால் ஏன் சிவதனுசை தூக்க முடியவில்லை?
Are there so many benefits of going to Krivalam?

கிரி என்பது மலை என பொருள்படும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் மலைக்கு வலது பக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதலே கிரிவலம் என்பதாகும்.

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இடைவிடாது கிரிவலம் வந்தால் சிவனின் அருள் பெறலாம்.

கார்த்திகை தீபத்தன்று இந்த மலைமீது ஏற்றப்படும் தீபத்தில் ஈசுவரன் அருள் பாலிக்கிறார். திருவண்ணாமலை பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகும். இங்கு மலையே  சிவலிங்கமாகும்.

திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் முன்வினைகள் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com