வீட்டில் ஹோமம் செய்ய போறீங்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க...

வீட்டில் ஹோமம் செய்யும் போது தெரிந்தும், தெரியாமலும் இந்த தவறுகளை செய்தால் நீங்கள் செய்யும் ஹோமத்தின் முழுபலன்களும் கிடைக்காமல் போகலாம்...
Homam
homam
Published on
Deepam strip

ஹோமம் என்பது நெருப்பில் பலவகையான பொருட்களைச் சேர்த்து தெய்வங்களை வழிபடும் ஒரு புனித சடங்காகும். இது இந்து மதத்தில் வேத காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் ஏதேனும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு அது நிறைவேறுவதற்காக ஹோமம் செய்வது வழக்கம். பொதுவாகவே, பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை வேளையில் செய்யப்படும் எல்லா ஹோமங்களும் விசேஷமானவை. கூடுதல் பலன்களைத் தருபவை. பொதுவாக, ஹோமங்கள் வெற்றி, செல்வம், ஆரோக்கியம் மற்றும் அமைதி போன்ற பலன்களைப் பெறுவதற்காகவும், தடைகளை நீக்குவதற்காகவும், தீய சக்திகளை அழிப்பதற்காகவும் செய்யப்படுகின்றன. கணபதி ஹோமம், சண்டி ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி-குபேர-ஹோமம் என பல வகையான ஹோமங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஹோமத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அந்த வகையில் கணபதி ஹோமம் வாழ்க்கையின் தடைகளை நீக்கவும், லட்சுமி ஹோமம் செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதற்காகவும், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் உடல் பிணியில் இருந்து நிவாரணம் அளிக்கவும், புத்திர காமேஷ்டி ஹோமம் குழந்தைப்பேறுக்காகவும், சுதர்சன ஹோமம் எதிர்மறை மற்றும் தீய சக்திகளை அழிக்கவும், நவகிரக ஹோமம் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கவும், லட்சுமி-குபேர-ஹோமம் தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் வெற்றி பெற சிறப்பு ஹோமம்!
Homam

முக்கியமாக, ஹோமங்களை மதியம் 12 மணிக்குள் முடித்து விடுவதே உத்தமம். சில ஹோமங்களை சில குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். அப்போது தான் அதன் பரிபூரண பலன்கள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில், ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீசௌபாக்ய லட்சுமி ஹோமம் ஆகியவற்றை கண்டிப்பாக அதிகாலையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் செய்வதால் தெய்வ அருள்பரிபூரணமாகக் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திருமணமானவர்கள், தம்பதிசமேதராக அமர்ந்து ஹோமங்களைச் செய்வது அதிக பலன்களைத் தரும் என்கின்றனர் ஆச்சார்யப்பெருமக்கள்!

வீடுகளில் ஹோமம், யாகம் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி அறிந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஏனெனில் நாம் ஏதேனும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு அது நிறைவேறுவதற்காக நாம் வீடுகளில் ஹோமம் செய்யும் போது தெரிந்தும், தெரியாமலும் செய்யும் சில தவறுகளால் நாம் செய்த ஹோமம், யாகத்தால் நமக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

வீட்டில் ஹோமம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டியவையும், தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்களையும் இங்கு பார்ப்போம்...

* ஹோமம் செய்யும் நாள் அன்று வீட்டை நன்றாக தூய்மையாக சுத்தம் செய்து கழுவி விட வேண்டும்.

* அதிகாலையிலேயே எழுந்து நீராடி தூய்மையான ஆடையை அணிய வேண்டும். அழுக்கான பழைய ஆடைகளை உடுத்தக்கூடாது.

* ஹோமம் ஆரம்பிப்பதற்கு முன் வீட்டின் பூஜை அறையில் இறைவனுக்கு பூக்கள் சாற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

* ஹோமத்தை முடிந்த வரை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது அதிகளவு நன்மைகளை தரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

* அன்றைய தினம் ஹோமம் முடியும் வரை உணவு அருந்தாமல் விரதம் இருந்து கலந்து கொள்வதன் மூலம் ஹோமத்தின் முழு பலனையும் பெறமுடியும்.

* வீட்டில் ஹோமம் நடத்தும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டில் அசைவம் செய்வதையோ, சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும்.

* உங்கள் வீட்டில் ஹோமம் நடக்கும் போது அதில் பங்கு கொள்பவர்கள் யாரும் தரையில் அமரக்கூடாது. மரப் பலகை மீதோ, துணியின் மீதோ அல்லது தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும். இல்லையெனில் அந்த ஹோமம் செய்வதால் எந்த பலனும் கிடைக்காது. அதாவது, ஹோமம் செய்வதால் கிடைக்கக்கூடிய நேர்மறை ஆன்மிக கதிர்கள் நமது உடலில் சேராமல், பூமியில் இறங்கி விடும் என்று ஆச்சார்யப்பெருமக்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிறந்த யாகம் எது தெரியுமா?
Homam

* ஹோமத்திற்கு பயன்படுத்தும் நெய் சுத்தமானதாக, அதாவது பசு நெய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். நெய் ஊற்றுவதற்கு எவர் சில்வர் அல்லது வேறு உலோகங்களால் ஆன ஸ்பூன், பிளாஸ்டிக் கரண்டியை பயன்படுத்தக்கூடாது. வெள்ளி, ஐம்பொன், தென்னை, பனை ஓலையினால் ஆன கரண்டிகளை பயன்படுத்தலாம். இதனை தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்தினாலும் அதனால் நற்பலன்களுக்கு பதிலாக சாபங்களே வந்து சேரும்.

* ஹோமத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களை தரையில் வைக்கக்கூடாது. அதனை வெள்ளி அல்லது உலோக பாத்திரம், மரக்கிண்ணம், மர பாத்திரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

* ஹோமங்களில் உடல் சுத்தியுடன் கூடிய ஆண்கள், பெண்கள் இருவரும் ஆஹுதிகள் அளிக்கலாம். அப்படி ஆஹுதி அளிக்கும் போது தர்ப்பைப் புல்லால் ஆன மோதிரத்தை (பவித்திரம்) அணிந்திருப்பது அவசியம்.

இந்த தர்ப்பை மோதிரம் நம் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை நீக்கி ஹோமங்களின் மூலம் கிடைக்கும் அக்னி தெய்வீக கதிர்களை நம் சரீரத்திற்கு நேரடியாக கிடைக்க செய்யும் அற்புதத்தை பெற்றுத் தரக்கூடியது.

* ஹோமம் முடிந்த உடன் அந்த இடத்தை உடனே சுத்தம் செய்யக்கூடாது. மாலையில் தான் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது துடைப்பத்தை பயன்படுத்தக்கூடாது. துணியை வைத்தோ, கைகளினாலோ தான் சுத்தம் செய்ய வேண்டும்.

* அதேபோல் ஹோமம் செய்த அன்று வீட்டை பொறுக்கவோ, தண்ணீரால் கழுவவோ, துடைக்கவோ கூடாது.

* ஹோமம் செய்யும் நாள் அன்று அன்னதானம் அல்லது நம்மால் முடிந்ததை தானம் செய்தால் ஹோமத்தின் முழுபலன்களை நமக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பணம், திருமணம், மகிழ்ச்சி, ஆரோக்கியம்: அனைத்தும் கிடைக்க இந்த ஹோமங்கள்தான் வழி!
Homam

இப்படி வீட்டில் ஹோமம் செய்யும் போது சில விஷயங்களை மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மற்றும் ஹோமம் செய்யும் போது நாம் செய்யும் சில தவறான செயல்களால் நமக்கு ஹோமத்தால் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போகலாம் என்பதால் ஹோமம் செய்யும் போது மிகவும் கவனமுடன் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com