பஸ்மாசுரனை வதம் செய்த மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரம்: பேலூர் சென்னகேசவ பெருமாள் கோவிலின் ரகசியங்கள்!

Belur Chennakesava Temple - மோகினி அவதாரம்
Belur Chennakesava Temple - மோகினி அவதாரம்AI Image
Updated on

பெருமாளின் பத்து அவதாரங்களான மத்ஸ்யம், கூர்மம், வராகம் நரசிம்மம், புத்தர், இராமர், வாமனம், பரசுராம், பலராம், கல்கி அவதாரங்களைப் பற்றி அறிவோம்.‌ இவை அனைத்தையும் காட்டிலும் பக்தர்களின் மனதில் தனி இடம் பெற்ற அவதாரம் ஒன்று உள்ளது. அதுதான் மோகினி அவதாரம்.

அழகின் வடிவமாகவும், மாயையின் உருவாகவும், தர்மத்தை நிலைநாட்டிய தெய்வீக சக்தியாக விளங்கிய இந்த மோகினி அவதாரத்தில் மகாவிஷ்ணு காட்சி தரும் தலம் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பேலூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சென்னை கேசவபெருமாள் திருக்கோவில் ஆகும்.

பேலூரில் நுழைந்தவுடன் கண்களைக் கவர்வது அத்புதமான இக் கோவிலின் கட்டிடக்கலை. ஒவ்வொரு கல்லும் உயிர் பெற்றது போல் தோன்றும். ஒவ்வொரு சிற்பமும் ஒரு புராணக்கதையைச் சொல்லும். ஹொய்சால மன்னர்களின் கலைச் செல்வமாக விளங்கும் இந்த ஆலயம்‌ பலநூற்றாண்டுகள் கழிந்தும் தனது அழகை இழக்காமல் நிற்கிறது.

கோவிலின் மேற்கூரையில் செதுக்கப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள், கல்லில் வடிக்கப்பட்ட நடன மங்கைகள் தேவர்கள், யாளிகள், புராணக் காட்சிகளைப் பார்த்தால் மனிதர்களால் இதை உருவாக்க முடியுமா என்ற வியப்பையே ஏற்படுத்துகிறது

ஒரு காலத்தில் பஸ்மாசுரன் என்ற அரக்கன் கடுமையாக தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்றான்.‌ தான் தன் கையை யார் தலையில் வைத்தாலும் அவர்கள் உடனே சாம்பலாக வேண்டும் என்று வேண்ட, சிவபெருமானும் வரத்தை வழங்கினார்.

Belur Chennakesava Temple - மோகினி அவதாரம்
Belur Chennakesava Temple - மோகினி அவதாரம்AI Image

நன்றியை மறந்த அசுரன் வரத்தை சோதிக்க எண்ணி சிவபெருமானின் தலையிலேயே கைவைக்க முற்பட்டான். அப்போது மகாவிஷ்ணு ஒரு அற்புத திருவிளையாடல் செய்தார். அதுவே உலகமே மயங்கும் மோகினி அவதாரம் எடுத்தார்.‌ அவளைப் பார்த்த பஸ்மாசுரன் அவள் அழகில் மயங்கினான்.‌ அவள் சொல்வதையெல்லாம் கேட்டான். அவள் நடனமாட அழைத்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றினான். சிறிது நேரத்தில் மோகினி தன் தலையில் கை வைத்தாள்‌ யோசிக்காமல் பஸ்மாசுரனும் அதையே செய்தான். அடுத்த கணமே சாம்பலானான்.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பேலூர் சென்ன கேசவ பெருமாள் மோகினி அவதாரத்தில் காட்சி தருகிறார். சுமார் 15அடி உயரமுள்ள அந்த தெய்வீக சிலையை பக்தர்கள் மெய்மறந்து தரிசிக்கிறார்கள்.‌ அவரது முகத்தில் பெண்மையும் கண்களில் கருணையும் வெளிப்படுகின்றன.

மூக்குத்தி கொலுசு போன்ற அலங்காரங்கள் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. ஆனால் அவரது கைகளில் சங்கு சக்கரம் தாமரை கதாயு அவதிதம் ஆகியவை அவரை விஷ்ணு என்று உணரவைக்கிறது.

தசாவதாரம் காட்சிகள், நரசிம்மர், மகிஷாசுரமர்த்தினி, லட்சுமி சரஸ்வதி ஒவ்வொருவரும் சுவரில் காணப் படுகிறார்கள்.‌ கல்லில் உள்ள உயிரோட்டம் அந்தக்கால சிற்பிகளின் திறமையை வெளிப்படுத்துகிறது . இங்கு உள்ள மற்றொரு சிறப்பு நட்பே சென்னகேசவசன்னதி. அவரது சிலையை உருவாக்கிய கல்லில் இருந்து ஒரு தேரை வெளியே வந்ததால் நட்பே என்று பெயர் ஏற்பட்டது. நட்பே என்றால் தேரை என அர்த்தம்‌ கேசவன் என்றால் தடைகளை நீக்குபவர் என்று பொருள்.

இந்த ஆலயத்தின் கோபுர கலசத்தை தரிசித்தாலே சாபவிமோசனம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். வைகுண்ட ஏகாதசி கிருஷ்ண ஜெயந்தி திருவிழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அகந்தையை அழித்த பெருமாளின் மோகினி அவதாரத்தில் சிறப்பை வெளிப்படுத்தும் தலம்.

இதையும் படியுங்கள்:
கள்ளபிரான் கோவில் பால்பாண்டி பெருமாள்: பெயர் காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Belur Chennakesava Temple - மோகினி அவதாரம்

கோவிலின் சிறப்புக்கள்

ஈர்ப்புப் தூண் அல்லது விளக்குக் கம்பம்

நட்சத்திர வடிவ மேடையில் 42மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட தூண் அமைந்துள்ளது.‌ இந்த தூணின் அதிசயம் என்னவென்றால் அஸ்திவாரம் இல்லாமல் நிற்கிறது. சொந்த எடையால் நிற்பதால் ஈர்ப்புப் தூண் என்று கூறப்படுகிறது.

நுழைவாயிலுக்கு அருகிலும் கோவிலைச் சுற்றிலும் பல சிறிய சன்னதிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சிறிய கோவில் போன்று காட்சி தருகின்றன.

ஹொய்சாலா சின்னம்

ஹொய் என்றால் சிங்கம். சாலா என்பது இந்த வாசித்து மூதாதையரை குறிக்கிறது. இது இராச்சியத்தின் இலச்சினாகும்.

சுவர்களில் பல நடனமாடும் மதனிகா நடன மங்கைகளைக் காணலாம்‌. இந்த மங்கைகள் இசைக் கருவிகளோடு காணப்படுகிறார்கள். 40க்கும் மேற்பட்ட இதுபோன்ற சிற்பங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பசுக்களை காக்க எழுந்த கோபிநாத சுவாமி மலைக்கோயில் வரலாறு!
Belur Chennakesava Temple - மோகினி அவதாரம்

கோவிலுக்குள் உள்ள எண்ணற்ற தூண்கள் உலோகத்தால் செய்யப்பட்டவை போன்று பளபளக்கின்றன. இந்த கோவில் சோப்புக் கல் கொண்டு கட்டப்பட்டதாகும்.

மோகினிச்சிலை நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சோப்புக்கல்லின் பளபளப்பும் சுற்றியுள்ள அகல் விளக்கின் ஒளியும் மிக அத்புதமாக உள்ளன.

இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம், பேலூர் சென்னகேசவ பெருமாள் கோவிலின் கட்டிடக்கலை அதிசயங்களையும், அங்குள்ள மோகினி அவதாரத்தின் ஆன்மீகப் பின்னணியையும் முழுமையாக அறிந்து கொண்டு, உங்களின் அடுத்த ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிடுவதற்கான உன்னதமான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com