தீப ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் முப்பந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த வழிபாடு:
வீடுகளில் விடிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது. மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றி வழிபடுவது. சிறப்பாக சொல்லப்படுகிறது. அதிலும் நெய் தீபம் ஏற்றுவதால் நம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
லட்சுமி தேவிக்கு உகந்த நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால், லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள்.
குலதெய்வம் நம் வீட்டிற்கு வர, சுத்தமான நெய்யில் விளக்கெண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும்போது உடனடியாக அருகில் உள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால் அந்த வினாடியே கஷ்டங்கள் குறையும் என மகரிஷிகள் கூறிய பரிகாரமாகும்.
நெய் விளக்கு பரிகாரம்.
பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை தினங்களில் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட பித்ரு தோஷம் அகலும். இரண்டு சர்ப்பங்கள் இணைந்துள்ள நாகராஜ சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து செவ்வரளி சாற்றி நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வர தம்பதியினருக்கு இடையே ஒற்றுமை நிலவும்.
21 செவ்வாயில் நெய் தீபம் ஏற்றினால் பில்லி சூன்யம் விலகும்.
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி பன்னிரண்டு முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில் வழக்கு சாதகமாக வரும்.
வியாழக்கிழமை நாளில் தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வர, விரைவில் கருத்தரிக்கும் என்பது ஐதீகம். மேலும் தீபம் ஏற்றும் போது வடக்கு திசை அல்லது கிழக்கு திசை, மேற்கு திசை பார்த்தவாறு ஏற்றுவது நல்ல பலனையும், செல்வ செழிப்பையும் கொடுக்கும்.
இறைவனின் அருளை எளிதில் பெற உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோவிலில் தீபம் ஏற்றுவது மிக சிறப்பு வாய்ந்த பரிகாரமாகும். அதிகாலை நண்பகல், அந்தி பொழுதில், ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றுவது, அதிக பலனை கொடுக்கும். மேலும் இறைவனின் கருவறையில் இருக்கும் தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட, வீட்டில் உள்ள கடுமையான பிரச்னைகள் கூட விலகும் என்பது ஐதீகம்.
நெய் விளக்கின் பலன்கள்!
5 நெய் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் சிறந்த கல்வி ஞானம் பெறலாம்.
9 நெய்விளக்குகள் ஏற்றினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
12 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கும் எடுத்த காரியம் வெற்றி பெறும்.
18 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் விலகும்.
27 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் திருமண தடை விலகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
36 நெய் விளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் சகல தோஷமும் நீங்கும்.
48 நெய்விளக்கு ஏற்றினால் தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
108 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மன் அருள் முழுமையாக கிடைக்கும்.
நெய் விளக்கு ஏற்றிய பிறகு கோவிலின் பிரகாரத்தை மூன்று முறை வலம் பெற வேண்டும்.
இருளை விலக்கி வழக்கு அருளை வழங்குவது வழிபட்டால் ஒளிமயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோடியோடு வெற்றி மீது ஒப்பிட்டு ஜோதிலட்சுமி என்று சொல்வார்கள்.
தீபம் அனைத்து கடவுள்களின் உருவமாக கருதப்படுகிறது. அதனால் தான் தினமும் காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கு நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்கிறது என்பது ஐதீகம். அமைதி, ஒளி, குணம், நல்ல சந்ததி என பல நன்மைகளை தருகிறது.
தீப ஒளி தீய சக்திகளை விரட்டும். மனதெளிவை அதிகரிக்கும். அதன் மணம் மனதை அமைதிப்படுத்தும். இனிமையான சூழலை தரும் எதிர்மறை ஆற்றலை நிராகரித்து நேர்மறை எண்ணம் நல்ல நிலையை வீட்டில் கோவிலில் ஏற்றும் போது நமக்கு கிடைக்கும்.