ஆன்மீகக் கதை: சிவன் கோவில் சொத்துக்களுக்கு இவர்தான் அதிகாரியா? சண்டிகேஸ்வரரின் உண்மை கதை!

சிவன் கோவிலில் சண்டிகேஸ்வரர் முன் கைகளை தட்டும் பழக்கத்தின் ஆன்மீக காரணமும் அதற்குப் பின்னாலுள்ள அதிசய வரலாறும்.
சண்டிகேஸ்வரர் Chandikeswarar worship
சண்டிகேஸ்வரர் Chandikeswarar worship
Updated on
Deepam strip
Deepam strip

சிவன் கோவிலில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கும் போது அனைவரும் இரு கைகளை தட்டுவார்கள். இதற்குக் காரணம் பல பேருக்கு தெரியாது.

சண்டிகேஸ்வரர் திருச்சேய்ஞலூர் (தஞ்சாவூர் மாவட்டம்) எச்சதத்தன் மற்றும் பவித்திரை இருவருக்கும் மகனாக பிறந்தவர். சண்டிகேஸ்வரனின் இயற்பெயர் விசாரசர்மன்.

விசாரசர்மன் சைவ சமயத்தில் பஞ்ச மூர்த்திகளின் ஒருவராக கருதப்படுகிறார். இவர் பிறவியில் இருந்தே அதிக அளவு சிவபக்தி உடையவராக வாழ்ந்து வந்தார். இவர் பசுக்களை மேய்க்கும் வேலை செய்து வந்தார். ஒரு நாள் விசாரசர்மன் பசுக்களை மேய்த்தபோது மண்ணாளான சிவலிங்கத்தை செய்து அதன் முன் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது விசாரசர்மனின் தவத்தில் மகிழ்ந்த பசுக்கள் சிவலிங்கத்தின் மீது தானாகவே பாலை சுரந்து அபிஷேகம் செய்தது. இந்த நிகழ்வை பார்த்து விசாரசர்மன் மனம் மகிழ்ந்தார்.

இந்நிகழ்வு தினசரி நடந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த ஒருவர் விசாரசர்மன் தந்தையிடம் சென்று இதனைப் பற்றி கூறினார். எச்சதத்தன் விசாரசர்மனை மறைமுகமாக கண்காணித்த போது, மணலான சிவலிங்கத்தின் முன் விசாரசர்மன் தவம் செய்த சமயம் பசுக்கள் தானாகவே பாலை சிவலிங்கத்தின் மீது சுரத்து அபிஷேகம் செய்தது. பசுக்கள் பாலை வீணாக்குவதை கண்டு கோபமுற்ற எச்சதத்தன் சிவலிங்கத்தை காலால் உதைத்தான். இதனால் விசாரசர்மன் தவம் கலைந்து மிகுந்த கோபம் கொண்டு கையில் வைத்த குச்சியை எடுத்து எச்சதத்தன் காலை நோக்கி வீசினான். அந்த குச்சி கோடாரியாக மாறி எச்சத்தன் காலை துண்டித்தது.

இதையும் படியுங்கள்:
எமதர்மனுக்கே சாப விமோசனமா? அளித்தது யார்? எங்கே? ஆச்சரிய வரலாறு...
சண்டிகேஸ்வரர் Chandikeswarar worship

சிவபெருமானும் பார்வதி தேவியும் இந்த நிகழ்வைக் கண்டு விசாரசர்மன் பக்தியால் மகிழ்ந்தனர். எச்சகத்தின் காலை குணமாக்கினர். விசாரசர்மனிடம் எம்பெருமான் பக்தியில் தன்னையே மறந்த நீ இன்று முதல் சண்டிகேஸ்வரர் என்றும் தனக்கு நிகழும் பூஜைகளும் மரியாதைகளும் இனி உனக்கும் கிடைக்கும் என்று வரம் அளித்தார். சண்டிகேஸ்வரர் சிவன் கோவிலின் பொறுப்பாளராக உள்ளார்.

சிவனுக்கு படைக்கப்படும் பொருட்கள் எல்லாம் சண்டிகேஸ்வரர் பெயரில் கணக்கில் வைக்கப்படும். இவர் சிவ கணங்களையும், சிவ சொத்துக்களையும் காவல் காத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். இதற்கு ஏற்ப சிவன் கோவிலை வணங்கிய பின் சண்டிகேஸ்வரர் இடம் சென்று இரு கைகளையும் தட்டி கோவிலில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என்று கூறவேண்டும். சண்டிகேஸ்வரர் சிவன் கோவில்களில் வடக்கு பிரகாரத்தில் கருவறைக்கு இடதுபுறம் தனி சன்னதியில் அமர்ந்திருப்பார். இவரை 'அதிகார சண்டிகேஸ்வரர்' என்று அழைப்பார்கள். ஏனெனில், இவர் சிவன் கோவிலில் சொத்துக்களுக்கு அதிபதி ஆவார்.

logo
Kalki Online
kalkionline.com