சோழர் கொடுத்த பொக்கிஷம் செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில்!

சுந்தரேஸ்வரர் சுவாமி
சுந்தரேஸ்வரர் சுவாமி

சென்னை குன்றத்தூரில் உள்ள கோவூரில் 1300 ஆண்டு பழமையான செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சோழர் கொடுத்த பொக்கிஷமாகும்.

கோயிலின் 85 அடி உயர ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கும். சிற்ப கலைகள் மனதை கொள்ளை கொள்ளும். சுந்தர சோழன் கட்டிய கோயிலுக்கு மேலும் அழகு சேர்த்தது பல்லவர்கள். வழக்கமாக கோயில்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். சுந்தரேஸ்வரர் கோயில், சௌந்தராம்பிகை சன்னதி மற்றும் ஏழடுக்கு ராஜ கோபுரம் ஒன்பது கும்பங்களுடன் கம்பீரமாக தெற்கு நோக்கி  அமைந்துள்ளது."

சென்னை, போரூர் - குன்றத்தூர் சாலையில் கோவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

வெளிப்பிராகாரத்தில் நேத்ர கணபதி, வரசக்தி விநாயகர், சனீஸ்வரரின் தனி சன்னிதி, நவக்கிரக சன்னிதிகளைக் காணலாம்.

சிவகங்கை தீர்த்தமென்று அழைக்கப்படும் இத்தல தீர்த்தம், இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப் பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்தல விருட்சமான வில்வம் மூன்று தளங்கள் மட்டுமின்றி ஐந்து, ஏழு, ஒன்பது தளங்களுடன் மகா வில்வமாகத் திகழ்கிறது.

சோம வாரத்தில் இந்த விருட்சத்தை பிரதட்சணம் செய்தால் செல்வமும், செழிப்பும் பெறுவர் என்கிறது சிவபுராணம்.

செளந்தராம்பிகை...
செளந்தராம்பிகை...

கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் உள்ள கர்ப்பக் கிரகத்தில் சுந்தரேஸ்வர லிங்கம் பெயருக்கேற்றபடி அழகுடன் விளங்குகின்றது.

கோஷ்டத்தில் கணபதி, தென்முகக் கடவுள், பிரம்மா, துர்க்கை, லிங்கோற்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.வெள்ளைத் தேநீரின் வியக்க வைக்கும் நன்மைகள் தெரியுமா?

இதையும் படியுங்கள்:
வெள்ளைத் தேநீரின் வியக்க வைக்கும் நன்மைகள் தெரியுமா?
சுந்தரேஸ்வரர் சுவாமி

சைவ நால்வர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வயானை சகிதம் கந்தவேள், 63வர், தனி சன்னிதியில் ஸ்ரீதேவி சமேதராக கருணாகரப் பெருமான், வீரபத்ரர், மாகாளி முதலானோரும் அருள்பாலிக்கின்றனர்.

தியாகப் ப்ரம்மம் தனது பஞ்சரத்னக் கீர்த்தனையில் இத்தல ஈசனைப் போற்றி பாடியிருக்கிறார்.

அம்பாள் சன்னிதியை வலம் வருகையில் வைஷ்ணவி, வாராஹி, திருமகள், பிராம்மி,சண்டிகை, துர்க்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com