

படம்: பிரபு ராம்
தங்கக் கீரி சொன்ன கதை - மகாபாரதம்
ராஜ சூய யாகம் சிறப்பாக நடந்து முடிகிறது. எதிலும் குறை சொல்ல முடியாதுபடி சிறப்பாக நடந்ததாக யாவரும் பேசுகிறார்கள். பாண்டவர்கள் மகிழ்வுற்று இருக்கிறார்கள்.
எங்கிருந்தோ ஓடி வருகிறது கீரிப்பிள்ளை ஒன்று. அதன் உடலில் ஒரு பாதி தங்கமாக மின்னுகிறது. யாகசாலையில் புரண்டு வருகிறது. தன் உடம்பை பார்த்துக் கொள்கிறது. சபையில் உள்ளவர்களை பார்த்து எகத்தாளமாக சிரிக்கிறது.
தர்மபுத்திரர் வியப்புடன் நோக்குகிறார். வீண் பெருமை படாதீர்கள் உங்கள் தான தர்மங்கள் மிகச் சிறந்தவை அல்ல.
யாருக்கும் யாரு ஒரு குறைவும் இல்லாது நடைபெற்ற இதனை ஏன் இவ்வாறு சொல்கிறாய் என்று கேட்டார் தர்மபுத்திரர்.
கீரி சொல்கிறது குருஷேத்திரத்தில் வாழ்ந்த ஒரு ஏழை பிராமணரின் கதையை கேளுங்கள்; பின்னர் சொல்லுங்கள் என்றது.
குருசேத்திரத்தில் வாழ்ந்த அந்த அந்தணர் பிட்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் மட்டுமல்லாதவர்கள் மனைவி, மகன், மருமகள் ஆகியோரும் குடும்பத்தில் இருந்தார்கள். அன்றாடம் கிடைக்கும் குறைந்த உணவை ஒருவேளை மட்டுமே உண்டு வாழ்ந்தார்கள்.
ஒரு சமய நாட்டில் பஞ்சம் ஏற்படவே பல நாட்கள் பட்டினியாகவே இருந்தார்கள். ஒரு நாள் மிகுந்த அலைச்சலுக்கு பின் கிடைத்த கொஞ்சம் சோளத்தை மாவாக அரைத்து இறைவனை வணங்கி நால்வரும் உண்ண அமர்ந்தார்கள். பல நாள் பட்டினிக்கு பின் கிடைத்த சிறு உணவு.
வாயில் கதவு தட்டப்படும் சட்டம் கேட்டது. அப்படியே வைத்து விட்டு கதவை திறந்தார்கள்.
வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் பசியால் களைத்து நின்று கொண்டு இருந்தார். அவரை உள்ளே அழைத்தார்கள். ஏழை அந்தணர் இன்முகம் காட்டி என்னிடம் உள்ள இந்த எளிய உணவை ஏற்றுக் கொள்ளுங்கள் எனத் தன்பங்கை கொடுத்து மகிழ்ந்தார்.
உண்ட முதியவருக்கு பசி தீரவில்லை.
மனைவி தன் பங்கை கொடுத்தாள். பசியால் உம்மை தவிக்க விட்டு விட்டு நான் பெரும் பயன் என்ன என்று கூறி வருந்தினார் அந்தணர் துன்பமும் இன்பமும் எல்லாருக்கும் பொதுவே என்று கூறி தன் பங்கை கொடுத்து மகிழ்ந்தனர்.
அதனை கண்ட மகன் தன் பங்கை கொடுக்க முன்வந்தான்.
அவனை நோக்கி குழந்தை முதியவர் பசி பொறுப்பர். உன்னால் பசி தாங்க முடியாது என்றார்.
மகன் கேட்கவில்லை வயது முதிர்ந்த தாய் தந்தையரும் நீங்களும் பசித்திருக்க நான் உண்பதா என்று கொடுத்து உதவினான்.
முதியவருக்கு இன்னும் நிறைவு ஏற்படவில்லை. மருமகள் முன் வந்தாள்.
ஸ்வாமி என்பங்கை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள் என்றாள்.
அந்தணர் அவளை நோக்கி நல்ல பண்புள்ளவளே பசி கொடுமையால் உருமாறி இளைத்து மெலிந்து போனால் நீயும் பசியால் துன்புற நான் எப்படி உண்பேன் என்று மறுத்தார்.
அந்தணரிடம் மருமகள் சொன்னால், சுவாமி நீங்கள் சான்றோர் உங்களுக்கு உதவும் நற்காரியத்தில் இந்த உயிர் போனால் என்னை என் பங்கையும் புசியுங்கள் என்றாள். யாவரும் பசியால் மயங்கி விழுந்தனர்.
முதிய அந்தணர் அதனையும் உண்டு பின் மகிழ்வடைந்தார். அவர்களின் நோக்கி உங்களது பரிசுத்தமான அன்போடு கூடிய தர்மத்தால் நான் மகிழ்வடைந்தேன். சிறந்த ஞானி கூட பசியை பொறுக்க மாட்டான். உங்கள் அன்பு அற்புதமானது அதோ பாருங்கள் என்றார். பசியினாலும் பட்டினியாலும் ஒளி இழந்த இருண்டு போன கண்களால் பார்த்தார்கள்.
தேவர்கள் பூமாரி பொழிந்து அவர்களுக்கு நன்மை அளிக்கு காத்திருப்பது தெரிந்தது. இந்த கதையைச் சொல்லி முடித்த கீரிப்பிள்ளை அந்த இடத்தில் படுத்து புரண்டேன் என் உடலின் பாதி தங்க நிறம் ஆகிவிட்டது. மறுபாதியும் தங்கமாக கூடிய சிறந்த தர்மம் நடக்கும் இடத்தை தேடி பல இடங்களில் புரண்டு பார்த்து வருகிறேன். பலன் இல்லை. தர்மபுத்திரர்கள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.
நாய் சொன்ன தீர்ப்பு! - ராமாயணம்
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராமருக்கு நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. என்னவென்று அறிய காவலனை அனுப்பினார். அவனும் விரட்டி விட்டு வந்தான் சிறிது நேரத்தில் மீண்டும் குறைக்கவே காவலன் துரத்த சென்றான்.
இந்நிலை தொடரவே தம்பி லட்சுமணன் நீ போய் காரணத்தை அறிந்துகொள் வா என்றார். லட்சுமணனும் நாயிடம் வந்து உன் துயரத்திற்கு காரணம் என்ன? என கேட்டார்.
ஈனக்குரலில் நாய் பிரபோ கோயில் யாகம் செய்யும் இடம், பிருந்தாவனம், சபை, மடம், புண்ணிய தீர்த்தம், சமையல் கட்டு ஆகிய இடங்களுக்கு நாங்கள் போகக்கூடாது என்பதால் அரசவைக்கு என்னால் வர முடியவில்லை. ராமபிரானை எனக்காக அழைத்து வாருங்கள் என்றது.
விஷயம் அறிந்த ராமரும் வருவே தங்களின் வருகைக்கு நன்றி பிரபு! சன்னியாசி ஒருவர் கல்லால் அடித்து காலை உடைத்துவிட்டார். அதற்கு நியாயம் கேட்டு வந்தேன் என்றது.
வருந்தாதே இப்போதே விசாரிக்கிறேன் என்றார். சன்னியாசி அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார். எதற்காக நாயை கல்லால் அடித்தீர் என கேட்டார் ராமர்.
பிரபு இந்த நாய் பிச்சை ஏற்ற உணவில் வாய் வைத்தது. பசியுடன் இருந்த எனக்கு கோபம் வந்து கல்லெறிந்தேன் என்றார்.
ஐந்தறிவு ஜீவன் மீது கல்லெறிந்தால் பாவம் அல்லவா. தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும் என்றார். பின்னர் நாயை பார்த்த ராமர் தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன் என்றார்.
நன்றி பிரபு... இவரை ஒரு சிவன் கோயிலின் நிர்வாக அதிகாரியாக ஆக்குங்கள். இதுவே தண்டனை என்றது. ராமரும் சம்மதித்தார்.
தனக்கு பதவி அளிக்கப்பட்டதால் சன்னியாசி மகிந்தார். நாயும் நிம்மதியுடன் புறப்பட்டது.
இதையெல்லாம் பார்த்த அயோத்தி வாசிகள் பிரபுவே இது எப்படி தண்டனையாகும்! நாய் ஏன் இப்படி கேட்டது என ஆச்சரியப்பட்டனர்.
அந்த நாயை அழைத்து வருமாறு ராமர் உத்தரவிட நாய் வந்தது. அதனிடம் கேட்டபோது அயோத்திவாசிகளே சிவன் கோயிலில் அதிகாரியாக பணிபுரிவது என்பது முள்ளின் மீது நிற்பது போல சிரமமான வேலை என்றது.
சிவன் கோயில் மடம், கிராம நிர்வாகத்தில் தவறு செய்யும் அதிகாரிகள், பசு, அந்தணர், அனாதைகளின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசரிடம் இருந்து கொண்டு அவரிடம் வரும் யாசகர்களை தடுப்பவர்கள், அந்தணர்களின் போஜனப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறுபிறவியில் நாயாக பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் ஒரு மடாதிபதியாக இருந்தேன். அப்போது செய்த தவறுக்காக இப்போது நாயாக பிறந்துள்ளேன். எனவேதான் சன்னியாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினேன். இந்த பிறவியில் என் பாவத்தை ஏற்றுக்கொண்ட சன்யாசி சிவன் கோயில் நிர்வாகியாக இருந்தாலும் தீவினை காரணமாக மீண்டும் பாவம் செய்து நாயாக பிறப்பார் என்றது.
சிவன் கோயிலில் பொறுப்பேற்ற சன்னியாசி மறுபிறவியின் நாயாக பிறந்தார் அவருக்கு தண்டனை அளித்த நாய் மறுபிறவியில் நற்கதி அடைந்தது.