சிறுகதை: சிந்திக்க வைக்கும் குருபக்தி!

Dronacharya, Ekalavyan, Arjuna
Dronacharya, Ekalavyan, ArjunaImg credit: AI Image
Updated on
Deepam strip
Deepam strip

மகாபாரதத்தில் வரும் சுவாரஸ்யமான கதைபாத்திரம் ஏகலைவன்.

அவன் சத்ரியன் அல்ல. ஆனாலும் நம்பிக்கையோடு குரு துரோணரைச் சந்தித்து தனக்கு வில் வித்தை கற்றுத் தர வேண்டும் என்று மன்றாடினான்.

ஆனால், துரோணர், சத்ரியன் இல்லாத ஒருவருக்கு வில் வித்தை கற்றுக் கொடுக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னார்.

மனம் உடைந்த ஏகலைவன் யோசித்தான். துரோணர் சிலையை அவனே கஷ்டப்பட்டு வடித்தான். அவன் கவனம் முழுக்க முழுக்க துரோணரை நினைத்து செய்ததால் சிலை துரோணரைப் போல் அப்படியே எந்தவிதக் குறையும் இன்றி தத்ரூபமாக இருந்தது.

வீடு சின்னது. எனவே, துரோணர் சிலையை வாசலில் வைத்தான்.

மறுநாள் காலையில் துரோணர் சிலை முன் அமர்ந்து அரை மணி நேரம் தியானம் செய்தான். அவன் மனதில் இரண்டே விஷயங்கள். 1. துரோணர் 2. வில் வித்தை.

தியானம் முடித்துவிட்டு வில் மற்றும் அம்பு எடுத்து குறியைப் பார்த்து ஏய்தான். அவன் குறி தவறாகப் போகவில்லை. பிறகு வேறு ஒரு குறியைத் தேர்ந்து எடுத்து மனதில் துரோணரை வணங்கி ஏய்தான். அதுவும் குறி தப்பவில்லை.

இப்படி தினமும் தியானம் மற்றும் பயிற்சியை விடவில்லை.

வெகு சீக்கிரத்தில் சிறந்த வில் வித்தைகாரர் ஆனான். எல்லாம் தனது மனமார்ந்த குரு துரோணர் கற்றுக் கொடுத்ததாக இருக்கவேண்டும் என்று பரிபூரணமாக நம்பினான்.

அவன் மனம் முழுக்க முழுக்க குருபக்தி மற்றும் வில்பயிற்சிதான் இருந்தது.

சிறந்த வில்லாளி ஆகிவிட்டான். ஏகலைவன் மிகமிக குருபக்தியோடுதான் இந்தச் சாதனையை செய்தான்.

அவன் வாழ்வில் விதி விளையாடியது. ஒரு நாள் வனம் வந்த துரோணர் தனது சிலையை இங்கு யார் வைத்தது என்று நினைக்கும்போதே, ஏகலைவன் “குருவே….! வணக்கம்…!” என்று சொன்னான்.

துரோணர் அதிர்ச்சி அடைந்து “நான் உன் குருவா… ?” என்று கேட்டார். ஏகலைவன் தனது கதையை முழுவதும் சொன்னான்.

இதையும் படியுங்கள்:
வாலி - சுக்ரீவன் பிறந்தது எப்படி? தேவர்களும் வியந்த அந்த விசித்திரக் கதை!
Dronacharya, Ekalavyan, Arjuna

துரோணருக்கு அதிசயமாக இருந்தது. “சரி.. வெளியே வா… உன் வில் வித்தை திறமையைக் காட்டு” என்று சொல்லி வெளியே வந்தார்.

ஏகலைவன் வில் அம்பு எடுத்து வந்தான். துரோணர் சொன்ன குறிகள் எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக அம்பால் ஏய்தான்.

துரோணருக்கு அதிர்ச்சி. சில கடினமான குறியைக் கொடுத்தாலும் ஏகலைவன் மிகச் சரியாக ஏய்தான்.

துரோணருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது ஏகலைவன் வித்தை. ஏகலைவன் வீட்டில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

துரோணரின் மனம் முழுக்க முழுக்க அர்ஜுனன் பற்றியே இருந்தது. தனது சிஷ்யன் ஆன அர்ஜுனன் பற்றியே சிந்தித்து பார்த்தார். அர்ஜுனன் தவிர வேறு யாரும் வில் வித்தையில் சிறந்தவறானாக இருக்கக்கூடாது என்று முடிவு எடுத்தார்; யோசித்தார்; சூழ்ச்சி செய்து தவறான முடிவுக்கு வந்தார். அவர் ஒரு முடிவு எடுத்து விட்டார்.

“ஏகலைவா! நீ உண்மையிலேயே என்னைக் குருவாக நினைக்கிறாயா?”

“ஆம். குருவே. இது சத்தியம்...”

“சரி குருதட்சணையாக என்ன தரப்போகிறாய்?”

“குருவே… உங்களுக்காக என் உயிரைக்கூட தருவேன்!”

“உயிர் எல்லாம் வேண்டாம்.”

அர்ஜுனன் தவிர யாரும் சிறந்த வீரராக இருக்கக்கூடாது என்று யோசித்து, துரோணர், “குருதட்சணையாக ஏகலைவனினின் கட்டைவிரலைக் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
வால்மீகி ‘ராமாயணம்’: சொல்லாமல் சொல்வது என்ன...?
Dronacharya, Ekalavyan, Arjuna

பிறகு அவனால் வில் வித்தை வீரனாக இருக்கமுடியாது. இதை ஏகலைவன் நன்கு உணர்ந்து இருந்தான். பதில் எதுவும் பேசாமல் தனது கட்டை விரலை அறுத்து துரோணர் காலில் சமர்ப்பித்தான்.

துரோணருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இதுபோல் ஒரு சிஷ்யனைத் துரோணர் பார்த்தது இல்லை. மெய் சிலிர்த்து போனார்.

logo
Kalki Online
kalkionline.com