அறியாமை டூ ஆனந்தம்: 'கோ லோகம்' வரை மனிதன் கடக்க வேண்டிய 4 படிகள்! - ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

வெறும் வழிபாடுகள் மட்டும் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது; அறியாமையிலிருந்து கோ லோகம் வரை நீங்கள் கடக்க வேண்டிய 4 முக்கிய நிலைகளைப் பற்றி பகவான் விளக்குகிறார்.
Sri Sathya Sai Baba
Sri Sathya Sai BabaAI Image
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on
Deepam strip
Deepam strip

ரஸோ வை சஹ; அவன் இனிப்பானவன். அப்படியே தான் இந்த ஜகத்தும் (உலகமும்). அவன் படைத்த இந்த பிரபஞ்சம் இனிமையாக இல்லாமல் இருக்க முடியாது. இது அவனது கைவண்ணம் என்று உணர்ந்தவர்கள் இதை அறிவார்கள். இறைவனது புகழையும் ஆற்றலையும் உங்களுக்குக் கற்பிக்கும்படியாக இந்த ஜகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இதனால் அவனைப் பார்த்து அவனை அடையவும் முடியும்.

இந்த லட்சியத்தை நோக்கிச் சென்று அடைய நான்கு நிலைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு லோகம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நீங்கள் அடையும் இடம் அது.

முதலாவது லோகம் அ-வித்யா லோகம்.அறியாமை மற்றும் மாயையின் பிரதேசம் அது. அங்கிருந்து நீங்கள் துக்க சங்கிலியுடனும் அது தரும் வலியுடனும் ஆரம்பிக்கிறீர்கள். இரண்டாவது லோகம் வித்யா லோகம். விஞ்ஞானமயலோகமான அறிவு லோகத்தில் நீங்கள் ஊடுருவி சரியானதையும் தவறானதையும், உமியையும் தானியத்தையும், பிரிக்க உங்களால் முடிகிறது. மூன்றாவது லோகம் ஆனந்த லோகம். அங்கு நீங்கள் என்றுமுள்ள ஆற்றலுக்கும் அமைதிக்குமான ஆதாரத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்குகிறீர்கள்.

Bhagavan Baba
Bhagavan Baba

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!

Image 1 Image 2 Image 3

இறுதியாக கோ லோகம் இருக்கிறது. அது தான் கோபாலன் உறைகின்ற இடம். எல்லா கோ-க்களும் (தெய்வீகப் பொறிகளான ஜீவர்கள், பிரேம சாகரத்தின் அலைகள், அன்புக் கடல்) அங்கு பரவசமாக ஞானம் பெற்று இருக்கும் இடம்.

அன்பு இல்லாவிடில் நீங்கள் கடவுள் பற்று கொண்ட ஆர்வலர்களுடன் உறவு கொள்ள முடியாது. நேர்மையான சடங்குகளும், ஆடம்பரமான வழிபாடும் அல்லது உரக்கக் கத்தலுடனான போற்றுதலும் கோ லோகத்தின் உள்ளே உங்களைச் செல்ல வழி வகுக்காது. அவை அனைத்தும் அன்பு என்னும் பொக்கிஷத்தின் முன் உள்ள உலோகக் குப்பைகள் தாம்! பிறப்பிலிருந்து இறப்பு இல்லாமைக்கும், இறப்பிலிருந்து பிறப்பு இல்லாமைக்கும் இட்டுச் செல்ல உதவும் பாலம் அன்பே ஆகும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மனதில் குடியிருக்கும் ஆறு பாம்புகளை அடக்குங்கள்! - ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
Sri Sathya Sai Baba

ஜீவ உணர்விலிருந்து தேவ உணர்வுக்கு, மனிதத் தன்மையிலிருந்து தெய்வீகத் தன்மைக்கு நீங்கள் உயரும் போது பிறப்போ அல்லது இறப்போ கிடையாது.

ஒவ்வொரு உயிரையும் அன்புடன் நேசித்து அனைத்தும் ஒன்றே என்பதை நீங்கள் உணரும் போது முக்தி கிடைக்கிறது.

உங்கள் இதயத்தை அன்பில் நனையுங்கள். உங்கள் செயல்களை தர்மத்தில் நனையுங்கள். உங்கள் உணர்ச்சிகளை தயையில் நனையுங்கள். பிறகு நீங்கள் வெகு விரைவில் இறைவனை அடைவீர்கள்.

1971ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பகவான் ப்ரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை.

logo
Kalki Online
kalkionline.com