

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் ராய்காட்டில் (Raigad) உள்ள பழமையான மற்றும் சக்தி வாய்ந்த ஹரிஹரேஷ்வர் கோவில் (Harihareshwar Temple Raigad), மூன்று மலைகளால் சூழப்பட்ட அமைதியான கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. ஹரி (விஷ்ணு) மற்றும் ஹர (சிவன்) ஆகிய இருவரும் இங்கு வழிபடப்படுவதால் ஹரிஹரேஷ்வரர் எனப் பெயர் பெற்றது. அமைதியான கடற்கரை மற்றும் ஆன்மீக அதிர்வுகளுக்குப் பெயர் பெற்றது. மும்பை மற்றும் புனே மக்களுக்கு வார இறுதி விடுமுறைக்கு ஏற்ற இடமாக உள்ளது.
இங்கு அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான பஹுமுக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தில் சிவபெருமானின் எண்ணற்ற முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது மூன்று மலைகளால் சூழப்பட்டு, சாவித்திரி நதி அரபிக் கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது மகாராஷ்டிராவின் பிரபலமான கடற்கரை கோயில்களில் ஒன்றாகும்.
ஹரிஹரேஷ்வரர் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோவிலாகும். இந்த ஆலயத்தில் பகுமுகி லிங்கம் என்ற பெயரில் பிரம்மாண்டமான சிவலிங்கம் காணப்படுகிறது.
இந்த லிங்கத்தினுடைய மேற்பகுதியில் சிவபெருமானுடைய பல திருமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிவலிங்கத்தின் உயரம் 1.99 மீட்டர், சுற்றளவு 4 மீட்டர் மற்றும் மொத்த எடை 4000 கிலோ என்றும், இதில் 359 திருமுகங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இக்கோவில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. இந்த பகுமதி லிங்கத்தை தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
கோவில் கட்டடக்கலை சாளுக்கிய காலத்தை சேர்ந்தது. முகமண்டபம், அர்த்தமண்டபம், ரங்க மண்டபம், அந்தரால, கர்ப்பக்கிரகம் போன்றவற்றை உள்ளடக்கியது. கோவிலின் முக்கிய அம்சங்களான தனித்துவமான சிற்பங்களும், வடிவமைப்பும், கர்ப்பக்கிரகத்தின் கட்டடக்கலையுமாகும். இங்கு சிறிய மற்றும் பெரிய பரிக்ரமா (கோவிலை வலம் வரும் பாதை) பாதைகள் உள்ளன. சிறிய பரிக்ரமாவை முடிக்க சுமார் அரை மணி நேரமும், பெரிய பரிக்ரமாவை முடிக்க சுமார் இரண்டரை மணி நேரமும் ஆகும்.
மகாபலேஷ்வரில் உருவாகும் புனித நதி சாவித்திரி ஹரிஹரேஷ்வரில் அரபிக் கடலுடன் இணைகிறது. இக்கோவில் 'தேவ்கர்' அல்லது 'கடவுளின் வீடு' என்றும் அழைக்கப்படுகிறது. மராட்டியப் பேரரசின் பிரதம மந்திரிகளான பேஷ்வாக்களின் குலதெய்வமாக போற்றப்படும் இக்கோவிலுக்கு 1674 ஆம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி விஜயம் செய்துள்ளார். கோவிலின் பிரதான கருவறைக்குள் லிங்க வடிவில் சிவன், பார்வதி, விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் உள்ளன. கோவிலுக்கு மிக அருகில் கால பைரவர் மற்றும் யோகேஸ்வரி ஆகிய இரண்டு கோயில்களும் உள்ளன.
இந்த பகுமுக லிங்கம் சிவனின் பிரபஞ்ச சக்தியை குறிக்கிறது மற்றும் மிகவும் அரிதான மற்றும் தனித்துவமான சிவலிங்கங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் ஆரத்தி, அபிஷேகம் ஆகியவை காண வேண்டியவையாகும். இங்கு சிவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
பார்வையிட சிறந்த நேரம்?
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு வருவதற்கு ஏற்ற காலமாகும். கோவில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.