"கர்ணனை ஏன் கொன்றீர்கள்?"

மகாபாரதத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் இன்றுவரை உயர்வாக பேசப்படுவது கர்ணன் கதாபாத்திரமே. அதற்கான காரணத்தை பார்க்கலாம் வாங்க..
Karna was Mahabharat Great Hero
Karna the real hero Kurukshetra War - Arjuna vs Karna Fight
Published on
deepam strip
deepam strip

மகாபாரதத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன், துச்சாதனன், சகுனி, பீஷ்மர், துரோணர்,...... கர்ணன் என.

என் மனதை கலங்க வைத்த கதாபாத்திரம் கர்ணன். வியாசரின் புத்தி மற்றும் ஞானம் தான் கர்ணனை படைத்தது.

கர்ணன் துரியோதனன் மீது அளவுகடந்த நட்பு வைத்து இருந்தான். துரியோதனன் கர்ணனை மதித்து அவன் நட்பில் உறுதியாக இருந்தான்.

தன் மனைவியின் கையை பிடித்த போது அதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்து கொண்டான். இது கர்ணன் துரியோதனன் மீது உள்ள நட்பை விளக்குகிறது.

ஆம்.

இனி தான் வருகிறது பிரச்னை. கர்ணன் ஒரு கொடை வள்ளல். யார் வந்து எது கேட்டாலும் கர்ணன் கொடுத்து விடுவார். புராணங்களில் கர்ணனுக்கு ஈடாக யாரும் இல்லை.

என்னை பொறுத்த வரை கர்ணன் மரணம் அடைந்தது ஸ்ரீ கிருஷ்ணரால் தான்.

அவன் செய்த புண்ணியங்களின் பலனை தனக்கு தர வேண்டும் என்று யாசிப்பது பெருங்குற்றம்.

ஏற்கனவே தேவேந்திரன் கர்ணனிடம் மிக சாதுரியமாக கவசம் மற்றும் குண்டலங்களை யாசித்து பெற்று விட்டார். இது தந்திரம். இது ஒரு சதியே… !

இதையும் படியுங்கள்:
கீதையின் சாரம்: நல்லதற்கு நல்லது; தீயதுக்குத் தீயது! கர்ணன் - கண்ணன் உரையாடல்
Karna was Mahabharat Great Hero

பிறகு… ஸ்ரீ கிருஷ்ணர் குந்தி மூலம் கர்ணனிடம் இருந்து ஒரு சத்தியம் கேட்டார்.

கர்ணன் தனது சகோதரர்கள் தான் பஞ்ச பாண்டவர்கள் என தெரிந்தும்… அவர் செஞ்சோற்று கடனுக்காக துரியோதனன் பக்கமே போர் புரிவேன் என்று திட்டவட்டமாக கூறினார். அங்கேயும் ஸ்ரீ கிருஷ்ணர் சதி இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன படி குந்தி ஒரு வரம் கர்ணனிடம் கேட்டார்.

ஆம். அதாவது கர்ணன், அர்ஜுனன் மீது ஒரே ஒரு முறை மட்டுமே நாகஸ்திரம் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்டார். தனது தாயை கண்ட மகிழ்ச்சியில் அந்த வரத்தை கொடுத்து விட்டார் கர்ணன். இதுவும் ஸ்ரீ கிருஷ்ணர் சதியே… !

போரில் கர்ணன் அர்ஜுனன் மீது ஒரு முறை அஸ்த்திரத்தை அனுப்பியதும் தேரின் சக்கரங்களை கீழே இறங்கி விட்டார். அடுத்த அம்பை எடுக்கும் போது கர்ணன் தனது தாயிடம் அளித்த வரம் பற்றி எண்ணி அம்பு ஏய்தவில்லை. அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்டார்.

அப்போது அர்ஜுனன் ஏய்த அம்புகள் தர்மதேவதையின் அருளால் கர்ணன் மீது பூ மாலைகளாக விழுந்தன. அப்போது தான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழை பிராமணர் வேஷத்தில் கர்ணனிடம், அவர் செய்த புண்ணியங்கள் அனைத்தும் தமக்கு தர வேண்டும் என்று யாசித்தார்.

கர்ணன் அதையும் கொடுக்கவே, இறந்தார்.

அட கடவுளே… !

தானத்தில் சிறந்தது அன்னதானம். கர்ணன் அதுபற்றி யோசிக்கவில்லை.

கர்ணன் எல்லா தானங்களையும் கொடை வள்ளலாக இருந்து தானம் செய்தார். அவர் அன்னதானம் செய்யவில்லை.

ஒரு வேளை அவர் அன்னதானம் செய்து இருந்தால்… ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும் அல்ல, எந்த கொம்பனாலும் அவர் உயிரை எடுத்திருக்க முடியாது.

ஆம்.

தர்மதேவதை கர்ணனை சாக அடிக்காமல் அவரை காப்பாற்றி இருப்பார்.

நீங்கள் நினைக்கலாம். கர்ணன் துஷ்ட துரியோதனன் பக்கம் அல்லவா இருந்தார்…? எனவே ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணனை கொன்றது சரியே என்று.

ஆம். அவர் துரியோதனன் பக்கம் தான் இருந்தார். தனது தகப்பன் சூரியன் மற்றும் தாய் குந்தியை விட துரியோதனனிடம் அளவு கடந்த நட்பு இருந்ததை இது விளங்குகின்றது.

கர்ணன் கதையை கேட்டால் அல்லது கர்ணன் படம் பார்த்தாலோ நமது கண்களில் கண்ணீர் சுரக்கும்.

ஆம்.

கர்ணன் மாமனிதன்…!

கர்ணன் கொடை வள்ளல்..!

கர்ணன் சத்தியத்திற்கு கடமை பட்டவன்…!

ஆம்… .

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: காண்டீபம் - கர்ணன் இதை வாங்க மறுத்தது ஏன்?
Karna was Mahabharat Great Hero

என் முன்னால் வியாசர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தால் நான் கேட்கும் ஒரே கேள்வி…

கர்ணனை ஏன் கொன்றீர்கள்.? ...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com