கிருஷ்ண ஜெயந்தி சிறப்புகள்: பஞ்ச கிருஷ்ண தலங்கள் மற்றும் 8 அற்புத வடிவங்களின் ரகசியம்!

ஸ்ரீ கிருஷ்ணரின் அருள்பெற பஞ்ச கிருஷ்ண தலங்கள் மற்றும் அவரது சிறப்பு வடிவங்களின் ஆன்மீக மகிமை.
கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi 2026
கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi 2026Image credit : Gemini
Updated on

கவான் மகாவிஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும், நல்லவர்களை காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.

இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்ற பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர் களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும்.

இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத்தேடி வருவதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வகை கோலமாக வரைவது வழக்கம்.

கிருஷ்ணர் “சில தலங்கள் எனக்கு மிகவும் பிரியமானவை. அவற்றுள் நான் எப்போதும் என் பக்தர்களுடன் அவர்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அவர்களுடனேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்" எனக் கூறியுள்ளதாக பிரம்ம புராணம் கூறுகிறது. அவ்வாறு நித்திய நிரந்தரமாக பகவான் உறையும், உலவும் தலங்களை பஞ்ச கிருஷ்ண தலங்கள் என அழைக்கப்படுகின்றது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையாக பரவியிருக்கும் தலங்களாக அவை இருப்பதால் கிருஷ்ணா ராண்யம் என்றும் பெயர் பெற்றிருக்கிறது.

இந்த தலங்களில் மூலவராகவோ, உச்சவராகவோ ஏதேனும் ஒரு திருப்பெயர் இருக்கு கிருஷ்ணர்நாமம் வந்துவிடும். இல்லையெனில் கிருஷ்ணரின் லீலைகள் நிகழ்ந்த தலமாகவும் இது இருக்கும். ஆழ்வார்களும் ரிஷிகளும் இந்த தலங்களில்தான் கிருஷ்ண தரிசனம் பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட 5 தலங்கள்

திருக்கோவிலூர்.

திருக்கண்ணங்குடி.

திருக்கபிஸ்தலம்.

திருக்கண்ணபுரம்

திருக்கண்ணமங்கை.

கிருஷ்ணரின் 8 வகையான

விசேஷ வடிவங்கள்.

சந்தான கோபால கிருஷ்ணன்.

வடிவம். அன்னை யசோதையின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை வடிவம்.

சிறப்பு - குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதியினர் இந்த வடிவத்தை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பால கிருஷ்ணன்

வடிவம் - ஒரு கையில் வெண்ணெய் உருண்டையை வைத்துக் கொண்டு தவழும் கோலத்தில் இருக்கும் சிறு குழந்தையாக பால கிருஷ்ணர் வடிவம் கொண்டுள்ளார்.

சிறப்பு - வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி அன்று பொதுவாக வைக்கப்படும் மிகவும் அழகான வடிவம் இது.

காளிங்க நர்த்தன கிருஷ்ணன்.

வடிவம் -யமுனை நதியில் காளிங்கன் என்ற நச்சுப்பாம்பின் தலைகளின் மீது நடனம் ஆடும் வடிவம்.

சிறப்பு -தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டுவதை குறிக்கிறது இக்கோலம்.

கோவர்த்தன தாரி

வடிவம் - இந்திரனின் கோபத்தால் உண்டான பெரும் மழையிலிருந்து ஆயர்பாடி மக்களை காக்க கோவர்த்தனகிரி என்ற மலையை தன் சுண்டு விரலால் குடையாக தூக்கிய கோலம்.

சிறப்பு - தன் பக்தர்களை காக்கும் இறைவனின் பேராற்றலை காட்டும் வடிவம்.

இதையும் படியுங்கள்:
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்: அபூர்வ சம்மோகன கிருஷ்ணர் ரகசியம்!
கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi 2026

ராதா கிருஷ்ணன் வேணுகோபாலன்

வடிவம் - வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்னே வைத்து அருகில் ராதை நிற்க குழலூதும் (புல்லாங்குழல் வாசிக்கும்) அழகான நின்ற கோலம்

சிறப்பு - தெய்வீக காதல் மற்றும் பக்தியின் அடையாள வடிவம்.

முரளிதரன்

வடிவம் -நான்கு கைகளுடன் தன் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்தியபாமா தேவியருடன் நின்றிருக்கும் திருக்கோலம்.

சிறப்பு - இது கிருஷ்ணரின் அரசர் மற்றும் தெய்வீக கோலமாக கருதப்படுகிறது.

மதன கோபாலன்

வடிவம் -எட்டு கைகளுடன், கைகளில் சங்கு, சக்கரம், வில்லு, அம்பு , பாசம், அங்குசம், கரும்பு, வில் மற்றும் புல்லாங்குழல் ஏந்தி காட்சியளிக்கும் அரிய வடிவம்.

சிறப்பு - அஷ்டபுஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணனின் வடிவம்.

பார்த்தசாரதி - (கீதோபதேசம்)

வடிவம் -மகாபாரத போரில் அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்து அவனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்யும் கோலம்.

சிறப்பு -வாழ்க்கையின் தத்துவங்களை உலகிற்கு உணர்த்திய மிக முக்கிய வடிவம்.

பகவத்கீதை வந்த சிறப்பு

கிருஷ்ணனின் அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும் . ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை ஆனது.

கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi 2026
கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi 2026Image credit : Gemini

கிருஷ்ணரின்விஸ்வரூபம் தரிசனம் பெற்றவர்கள்:

1) மகாபாரத்தில் விஸ்வரூபம் என்ற பிரம்மாண்டமான காட்சியை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளித்தார்.

குருஷேத்திர போர்க்களத்தில் தன் சொந்த பந்தங்களுக்கு எதிராக போர் புரிய அர்ஜுன் தயங்கி நின்ற போது அவனுக்கு கடமையும், ஞானத்தையும் உணர்த்த கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்தார். இந்த உபதேசத்தின் ஒரு பகுதியாக தானே பிரபஞ்சத்தின் வடிவம் என்பது உணர்த்த தனது விஸ்வரூபத்தை கிருஷ்ணர் காட்டினார்.

2) யசோதை

கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் அவர் வாயில் மண்ணை தின்றபோது, வாயைத் திறந்து காட்ட சொன்ன யசோதைக்கு அகில உலகமும் அடங்கிய விஸ்வரூபத்தைக் கிருஷ்ணர் காட்டினார்.

3) துரியோதனனின் சபை

பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணரை துரியோதனன் வஞ்சிக்க முயன்றபோது கிருஷ்ணர் சினம் கொண்டு தனது விஸ்வரூபத்தை அங்கிருந்தோருக்கு காட்டினார்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi 2026

4) உதங்க முனிவர்

மகாபாரத போருக்குப் பின் கிருஷ்ணரை சந்தித்த உதங்க முனிவர் போரை ஏன் நிறுத்தவில்லை? என்று கோபமடைந்தபோது கிருஷ்ணர் அவருக்கு தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி அமைதிபடுத்தினார்.

5) அனுமன்

அர்ஜுனனின் தேர்க்கொடியில் (கபித்வஜம்) அமர்ந்திருந்ததால் இந்த முழு நிகழ்வையும் அவர் பார்த்தார்.

மகாபாரதத்தின்படி ஸ்ரீ கிருஷ்ணர் தனது விஸ்வரூபக்காட்சியை பிரதானமாக ஐந்து பேருக்கு நேரடியாகவும், ஞானக்கண் மற்றும் பிற வழிகளில் இன்னும் சிலருக்கும் காட்டியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com