நாகதோஷம் நீக்கும் குக்கே தலத்தில் ஹோசலிகம்மாவை ஏன் முதலில் வழிபட வேண்டும் தெரியுமா?

குக்கே சுப்பிரமணியரின் சக்தி வாய்ந்த காவல் தெய்வம் ஹோசலிகம்மா: வழிபாட்டு முறைகளும் ரகசியங்களும்!
ஹோசலிகம்மா வழிபாடு - Hosaligamma Devi
ஹோசலிகம்மா வழிபாடு - Hosaligamma Devi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ஹோசலிகம்மா (Hosaligamma) என்பது கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் (Kukke Subramanya Temple) வளாகத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த ஒரு முக்கியமான காவல் தெய்வம் மற்றும் கிராம தேவதை ஆகும்.

இந்த தேவி குக்கே சுப்பிரமணியசுவாமியின் முக்கிய காவல் தெய்வமாகவும், தனிப்பட்ட பாதுகாவலராகவும் கருதப்படுகிறார். இவருடன் புருஷராயா (Purusharaya) என்ற தெய்வமும் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

தல புராணங்களின்படி, தாரகாசுரன் போன்ற அரக்கர்களை வதம் செய்த பிறகு சுப்பிரமணிய சுவாமி இந்த தலத்தில் குடியேறினார். அப்போது அவருக்கு பாதுகாப்பாகவும், இந்தப் புனித தலத்தின் எல்லையைக் காக்கும் காவல் தெய்வங்களாகவும் ஹோசலிகம்மா வழிபாடு மற்றும் புருஷராயர் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரின் சன்னதிகளும், குக்கே சுப்பிரமணியர் கோவில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளன. ஹோசலிகம்மா மற்றும் அவருடன் இருக்கும் புருஷராயர் ஆகிய இரு தெய்வங்களின் பெயர்களும் ஸ்கந்த புராணத்தின் "கௌமாரிகா காண்டத்தில்" குறிப்பிடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரு முறை இவருக்கு பலி அல்லது சிறப்புப் படையல் சமர்ப்பிக்கப்படுகிறது.

வழிபாட்டு முறைகளும் நேர்த்திக்கடன்களும்:

சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வெளி பிரகார வளாகத்தில் உள்ள தெய்வம் இது. தேவி சக்தி வாய்ந்தவளாகவும் அதே சமயம் கருணை மிக்கவளாகவும் காட்சி தருகிறாள். பிரதான சுப்பிரமணியர் கோவிலின் வெளிப்புற சுற்றுவட்ட பகுதியில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி வரும்போது இடதுபுறத்தில் இந்த அம்மனைக் காணலாம்.

இந்த அம்மன் சன்னதி மிகவும் தொன்மையானது. குக்கே சுப்பிரமணியர் கோவிலில் ரதோற்சவம் அதாவது தேர்த்திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்கள் நிறைவடைந்த பிறகு இந்த கிராம தேவதைக்கு சிறப்பு பிரசாதங்கள் மற்றும் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்கு ஈடுகாயி சேவை என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
ஆண்கள் விளக்கேற்றலாமா? தீப வழிபாட்டில் நீங்கள் அறியாத ரகசியங்கள்!
ஹோசலிகம்மா வழிபாடு - Hosaligamma Devi

முதன்மை தெய்வமான சுப்பிரமணியரை தரிசிப்பதற்கு முன்போ அல்லது தரிசித்த பின்போ இந்த காவல் தெய்வங்களை வழிபடுவது இக்கோவிலின் முக்கிய மரபாகும். பக்தர்கள் ஹோசலிகம்மா மற்றும் புருஷராய தெய்வங்களுக்கு குங்குமார்ச்சனை, மங்களாரத்தி மற்றும் ஹன்னுகாய் (தேங்காய் - பழம் படைத்தல்) ஆகிய வழிபாடுகளை முதன்மையாகச் செய்கின்றனர்.

தீய சக்திகளிடமிருந்தும், கண் திருஷ்டிகளிடமிருந்தும் தங்களை காத்துக் கொள்ள இந்த காவல் தெய்வங்களிடம் மக்கள் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

துளு நாடு மற்றும் தட்சிண கன்னடா பிராந்தியத்தின் நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஹோசலிகம்மா ஒரு சக்தி வாய்ந்த பெண் காவல் தெய்வமாக போற்றப் படுகிறார். குக்கே சுப்பிரமணிய தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித தீங்கும் நேராத வண்ணம் எல்லையைக் காப்பது இவளின் முக்கிய பணியாக நம்பப்படுகிறது.

துளுநாட்டின் பூத ஆராதனை கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்த அன்னை, அப்பகுதி மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்துகளில் இருந்து காக்கும் அம்மனாக மிகவும் பக்தியுடன் வழிபடப் படுகிறாள். குக்கே சுப்பிரமணியரை தரிசனம் செய்துவிட்டு காவல் தெய்வமான ஹோசலிகம்மா ஆலயத்தையும் தரிசனம் செய்துவிட்டு கோவிலின் பின்புறம் உள்ள ஆதிசுப்பிரமணியர் கோவிலுக்கு செல்லலாம்.

ஹோசலிகம்மா வழிபாடு - Hosaligamma Devi
ஹோசலிகம்மா வழிபாடு - Hosaligamma Devi

அங்கு 2 குகைகள் காணப்படுகின்றன. ஒரு குகையில் வாசுகி முருகனை நினைத்து தவம் இருப்பதால் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு அருகில் மஹி எனும் ஆறு ஓடுகிறது.

இந்த ஆற்றில் தான் வாசுகி நாகம் நீராடி தன்னுடைய காயத்திலிருந்து விடுபட்டதாகவும், இந்த மஹி நதியில்தான் சிவ சக்தியின் குமாரனாகிய முருகப்பெருமான் அசுரர்களைக் கொன்ற பின் தன்னுடைய ஆயுதங்களை கழுவியதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் இந்த ஆற்றிற்கு "குமாரதாரா" என்று பெயர் ஏற்பட்டது. இந்த குமாரதாரா நதியில் நீராடி முருகனை தரிசனம் செய்ய சர்ப்ப தோஷம் மற்றும் நோய்கள் நீங்கும் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகிறது. குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகளுக்காக செல்லும் பக்தர்கள் தவறாமல் இந்த காவல் தெய்வத்தையும் வழிபடுவது மரபாகும்.

இதையும் படியுங்கள்:
கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர்: ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கலை அதிசயம்!
ஹோசலிகம்மா வழிபாடு - Hosaligamma Devi
logo
Kalki Online
kalkionline.com