
திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுமாக திருமணம் ஆவதற்கான நந்தி கல்யாணம் பார்க்க வேண்டும். நந்தியை தன் மகன் போல் நினைத்த சிவபெருமான் நந்திக்கு திருமணம் முடிக்க வசிஷ்டரின் பேத்தியை முடிவு செய்து திருமணம் நடத்தினார்.
பங்குனிமாத பூச நட்சத்திரத்தில் நந்தி திருமணம் சிறப்பாக நடை பெற்றது. இந்தத் திருமணத்திற்கு சிவபெருமான், பார்வதி செங்கோல் ஏந்தி குதிரை வாகனத்தில் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் திருமணத்தைக் காணும் பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
நந்தி கல்யாணம் கண்டால் முந்தி கல்யாணம் என்ற பழமொழியே உள்ளது. அதுமட்டுமன்றி அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும் என்று கூறப்பட்டு வருகிறது.
மயிலை ஆதிகேசவ பெருமாள் கோவில் மயூரவல்லித் தாயார்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை நடந்து வருகிறது. இரு மணிகளை வாங்கி தாயார் பாதத்தில் வைத்த பின் தாயார் சன்னதி வாசலில்அந்த இரு பணிகளைக் கட்டுவதாலும் திருமணத்தடை நீங்கும்.
காளஹஸ்தி திருக்கோவில்
தஞ்சாவூர் கதிரிநத்தம் என்ற கிராமத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. திங்கட்கிழமை கோளில் ராகு காலத்தில் சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அப்போது திருமணம் ஆகாதவர்களின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்ய மூன்றே மாதத்தில் திருமணம் நடக்கும் என்று நம்பப் படுகிறது.
தென் திருப்பதி உப்பிலி அப்பன் கோவில்
உப்பிலியப்பன் கோவிலில் திருமால் கோகிலாம்பையை மணந்து திருமண வரம் அளிக்கிறார். அதனால் இக்கோவிலுக்கு செல்வது திருமணத் தடையை நீக்கும் என்று நம்பப்படுகிறது. திருமணத்தடை நீக்க வேதச்சடங்கும் நடைபெறுகிறது.
மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோவில்
லால்குடி எடையத்துமங்கலம் கிராமத்தில் மாங்கல்ய மகரிஷியால் திருமண வரம் பெற்ற மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோவில் உள்ளது. திருமணம் சார்ந்த எந்த தடைகளும் இந்தத் தெய்வங்களுக்கு பூஜை செய்வதன் மூலம் தானாகவே மறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
கல்யாண வெங்கடேஸ்வர சீனிவாச ஸ்வாமி கோவில்
திருப்பதிக்கு அருகில் உள்ள சீனிவாசமங்காபுரம் எனும் கிராமத்தில் இருக்கும் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதன் மூலம் திருமணத் தடைகளை நீக்கலாம் என்று நம்பப்படுகிறது.