ராசி தோஷம் போக்கும் அதிசய விருச்சிக பிள்ளையார்: மருத்துவக்குடி ஆன்மீக தரிசனம்!

ஜோதிட தோஷங்கள் நீக்கும் அரிய விருச்சிக பிள்ளையார் வரலாறு மற்றும் வழிபாட்டு முறை.
விருச்சிக பிள்ளையார் - Airavateswarar Temple
விருச்சிக பிள்ளையார் - Airavateswarar Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கும்பகோணம் அருகே ஆடுதுறைக்கு அருகில் உள்ள மருத்துவக்குடி கிராமத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் அருபாளிக்கும் விருச்சிக பிள்ளையார். இத்தலத்தின் மூலவர் ஐராவதேஸ்வரர். அம்பிகை அபிராமியம்மை. இது ஒரு தேவார வைப்புத் தலமாகும். இந்திரனின் ஐராவதம் வழிபட்ட தலம் இது. தேவலோக யானையான ஐராவதம் தன் சாபம் நீங்க இறைவனை வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

அதனால்தான் இங்கிருக்கும் இறைவன் ஐராவதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். ஐராவதம் என்னும் வெண்மையான யானை பூஜித்ததால் லிங்கத் திருமேனி வெள்ளை நிறத்துடன் காணப்படுகிறது. மருத்துவக்குடி என்ற பெயருக்கு ஏற்ப நோய்களை தீர்க்கும் மருத்துவ நாயகனாக இறைவனும், அருமருந்தாக அம்பிகை அபிராமியும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

விருச்சிகப் பிள்ளையாரின் சிறப்புகள்:

இக்கோவிலின் பிரகாரத்தில் உள்ள விநாயகரின் திருமேனி, தேள் (விருச்சிகம்) செதில்கள் போன்ற அரிய வரிவரியான வடிவமைப்புடன் காணப்படுகிறது. விநாயகரின் முகமும் தேளின் உடல் போன்ற அமைப்பும் சிற்பக்கலையின் சிறப்பை குறிக்கிறது.

தேளுக்கு சமஸ்கிருதத்தில் 'விருச்சிகம்' என்று பெயர் என்பதால் இவர் 'விருச்சிகப் பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். விநாயகரின் முக அமைப்போடு, உடல் மற்றும் துதிக்கைப் பகுதியில் தேள் (விருச்சிகம்) போன்ற செதில்களுடன் கூடிய வரிவரியான வடிவமைப்பு செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விருச்சிகப் பிள்ளையாரை வணங்கிட ராசி தோஷங்கள் நீங்கும், தோல் வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. தேள் போன்ற விஷ பூச்சிகளின் கடியை குணப்படுத்தும் சக்தி கொண்டவர் இந்தப் பிள்ளையார் என்று போற்றப்படுகிறது.

புராண வரலாறு:

சந்திரன் தன் சுய ஒளியை இழந்து மங்கித் தேய்ந்த பொழுது அதாவது நீசம் பெற்ற பொழுது இத்தலத்திற்கு வந்து ஈசனையும் இத்தலத்து விநாயகரையும் வழிபட்டு தனது தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்டதாக ஐதீகம்.

விருச்சிக பிள்ளையார் - Airavateswarar Temple
விருச்சிக பிள்ளையார் - Airavateswarar Temple

சந்திரன் சுய ஒளியை இழந்து மங்கித் தேய்ந்து வந்த பொழுது இத்தலத்து ஈசனை வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கினான். இத்தலத்து தீர்த்தம் சந்திர புஷ்கரணி எனப்படும். அத்துடன் மூலநாயகனான பிள்ளையாரையும் நிறுவி பூஜித்தான். விநாயகரின் உடல் அமைப்பு இங்கு தேள் போன்று வரி வரியாக வித்தியாசமாக காணப்படுகிறது.

ஜோதிட ரீதியாகவும் சந்திரன் நீசமானது விருச்சிக ராசியில் தான். ஆகவே விருச்சிகத்தில் மங்கி தேய்ந்தவன், இங்கு விருச்சிகப் பிள்ளையாரை நிறுவி பூஜித்து திரும்பவும் சுய ஒளியைப் பெற்றான். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பிள்ளையாரை வணங்க அவர்களின் வாழ்வு செழுமை பெறும்.

பரிகாரத்தலம்:

விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அல்லது சனி-செவ்வாய் சேர்க்கை உள்ளவர்கள் இங்கு வந்து விருச்சிக விநாயகரை வழிபடுவது சிறப்பான பலன்களைத்தரும். அருகம்புல் சாற்றி, தீபமேற்றி வழிபட தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இக்கோவில் இரண்டாம் இராஜராஜனால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோவில்கள் எனப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சுதந்திர செங்கோல் பிறந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் அதிசய ரகசியங்கள்!
விருச்சிக பிள்ளையார் - Airavateswarar Temple

தல பெருமை:

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் எனும் ஆபரணம் அணிந்து 'தாடங்க பீடேஸ்வரி' என்று விளங்குவதுபோல், இத்தலத்து அபிராமி ஒட்டியான ஆபரணம் ஏற்று 'ஒட்டியாண பீடேஸ்வரி' என்று மகா சக்தியுடன் திகழ்கிறாள். ஐராவதம் இத்தலத்து இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர். சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாப விமோசனம் பெற்றதால் இத்தல தீர்த்தம் சந்திர தீர்த்தம்.

கோவில் காலை 7 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?

கும்பகோணம்-மயிலாடுதுறை பேருந்து சாலை வழியில் ஆடுதுறை என்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஜாதக ரீதியான தடைகளைத்தாண்டி மன அமைதியையும், ஆரோக்கியத்தையும், வாழ்வின் உச்ச நிலையையும் அடைவதற்கான முழுமையான ஆன்மீகத் தெளிவை இந்தப் பதிவு உங்களுக்கு வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
விருச்சிக பிள்ளையார் - Airavateswarar Temple
logo
Kalki Online
kalkionline.com