மராட்டிய மன்னர் சிவாஜி அவர்கள் குல தெய்வமாக விநாயகரை வழிபட்டு வந்தார். பீஷ்வாஸ் சமுகத்தின் முக்கிய தெய்வமாகவும் விநாயகர் கருதப்படுகிறார். மராத்தியர்களின் மகத்தான தெய்வம் இவர். ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் கணேஷ் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அங்குள்ள பெரிய மைதானத்தில் கணேஷ் சிலையை பெரிய அளவில் நிறுவி, அதற்கு பூஜை செய்து இறுதி நாளில் நீர்நிலைகள் மற்றும் கடற்கரையில் கரைப்பார்கள்.
மும்பையின் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் பொதுமக்கள் கொண்டாடும் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக அமையும்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கணேஷ் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பாக 'லால்பாக் ராசா' என்று போற்றப்படும் விநாயகர் சிலையினை நிறுவி பூஜைகள் செய்கிறார்கள்.
லால்பாக் ராஜா கணேஷ் கடவுளை அந்த ஊர் மக்கள் போற்றி வணங்குவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், 1930 -ம் ஆண்டில் ஜவுளி ஆலைகள் நிரம்பிய இந்த பகுதி, தொழில் முறை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்பொழுது ஆலைகளின் மூடல்கள் காரணமாக எண்ணற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவற்றினை நிவர்த்தி செய்ய மனிதனை நம்புவதை விட மகேசனை நம்புவோம் என்று லால்பாக் ராஜா கணேஷ் கடவுளை நம்பினார்கள். அங்குள்ள மக்களுக்கு குடியிருப்புக்கான நிலங்கள் வழங்கப்பட்டன. அதற்கு நண்றி உணர்வாக கணேஷ் கடவுளுக்கு ஆண்டு தோறும் மிக விமர்சையாக விழா கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சிலை புதிய வடிவத்தில் உருப்பெறும். தங்க நகைகள் ஆபரணங்கள் அணிவிக்கப்படும் இந்த பிள்ளையார் மிகவும் விலைமதிப்பு அதிகமுள்ளவர். இந்த விழா பதினொரு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த விழாவின் தரிசன விஐபி கட்டணம் ரூ.200 ஆகும். சிறப்பு தரிசன கட்டணம் ரூ.500 என எதிர்பார்க்கிறார்கள். பொது தரிசன கட்டணம் ரூ.50 என நிர்ணயித்துள்ளார்கள்.
இந்த டிக்கெட்டுகளை ஆலய கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம். விஐபி தரிசன டிக்கெட்கள் உரிய படிவத்தில் விண்ணப்பம் நிறைவு செய்த பின் பெற்றுக் கொள்ளலாம். பக்தர்களின் விருப்பத்தின் பேரில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஆகும். ஒரு நபர் தரிசனம் செய்ய ஆகும் நேரம் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் ஆகும். இந்த நேரம் கூட்டத்தின் அளவினைப் பொறுத்து மாறுபடும்.
இந்த லால்பாக் ராஜா விழாவிற்கு ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் அறக்கட்டளை இருபது கிலோ தங்கமும் 15 கோடி ரூபாய் பணமும் சென்ற ஆண்டு வழங்கி உள்ளனர்.
இந்த லால்பாக் ராஜாவை தரிசித்த பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, ஆயுஷ்மதான் குரானா, விக்கி கௌஷல் மற்றும் ஈஷா தியோல் ஆவார்கள்.
சமீபத்தில் பரினீதி சோப்ரா, ரன்தீப் ஹூடா மற்றும் அவரது மனைவி லன் லைஷராம் மற்றும் அம்பானி குடும்பத்தினர் பிரார்தனை செய்தனர்.
தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் லால்பாக் ராஜாவின் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். மிக சிறப்பான விழாவாகும்.