நாகராஜர் கோவில்: ஓலைக்கூரை கருவறை முதல் மண் பிரசாதம் வரை... நாகர்கோவில் பெயர் பின்னணி!

நாகராஜர் கோவில் - Nagaraja Temple
நாகராஜர் கோவில் - Nagaraja Temple
Updated on

நாகர்கோவிலில் காசி விஸ்வநாதர், அனந்தகிருஷ்ணன், கன்னிமூல கணபதி சன்னதிகளுடன், நாகதோஷம் நீங்கி குழந்தைபேறு கிடைக்கும் தலமாக நாகராஜா கோவில் புகழ்பெற்றது. கருவறை ஓலைக்கூரை ஆண்டுதோறும் மாற்றப்படும் மரபு, கொடிமரத்தில் கருடனுக்கு பதிலாக ஆமை வாகனம், ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம், ஆயில்யம் நட்சத்திர வழிபாடு போன்ற சடங்குகள் பக்தர்களை ஈர்க்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்துள்ளது இந்த நாகராஜா கோவில். நாகத்தை மூலக்கடவுளாகக் கொண்டு மிகப் பழமையான புகழ்பெற்ற கோவிலாகும். இக்கோவிலின் பெயர் காரணமாகவே இந்த இடத்திற்கு நாகர்கோவில் என பெயர் வந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி புதர்கள் நிறைந்த வயலாக இருந்தது.  அப்போது நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் அரிவாள் பட்டு நாகர்சிலையிலிருந்து ரத்தம் பீறிட்டது. பதறிபோன ஊர் மக்கள் வந்து பார்த்தபோது அங்கே ஐந்து தலை நாகராஜர் சிலை சுயம்பு வடிவமாக இருப்பதை கண்டனர். அதன் பின்னர் பாலபிஷேகம் செய்து ஓலை குடிசை அமைத்து வழிபட்டனர். 

அக்காலத்தில் தோல்நோயால் அவதிப்பட்ட களக்காடு பகுதி மன்னர் மார்த்தாண்டவர்மா இந்த கோவிலுக்கு வந்து இங்குள்ள நாகராஜரை வழிபட்டு பாலாபிஷேகம் செய்து தனது தோல் நோய் நீங்கியதாக வரலாறு உள்ளது. அதன் பிறகு மன்னர் அந்த இடத்தில் நாகராஜருக்குபெரிய கோவிலை கட்டிக் கொடுத்தார். 

மூலவர் நாகராஜா இருக்கும் மண்மேடு ஆண்டுதோறும் நிறம் மாறும் அதிசயமாக காணப்படுகிறது. 

ஆடி மார்கழி மாதம் கருப்பு நிறமாகவும் தை மற்றும் ஆனி மாதம் வெள்ளை நிறத்திலும் காணப்படும் இந்த அதிசயம் இன்றும் நடைபெற்று வருகிறது கோவில் தூண்களில் 

சமண தீர்த்தங்கரர்கள் உருவங்கள் பார்சுவநாதர் பத்மாவதிதேவி சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் நாகதோஷம் நீங்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

நாகராஜர் கோவில் - Nagaraja Temple
நாகராஜர் கோவில் - Nagaraja TempleAI Image

மேலும் இங்குள்ள கொடி மரத்தில் கருடனுக்கு பதிலாக ஆமை வாகனம் இடம்பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக இந்த நாகராஜா கோவில் விளங்கி வருகிறது.  நாகர் வழிபாட்டுக்கு என தனியே அமைக்கப்பட்டுள்ள கோவிலாகும்.

திருப்பாம்புரம் பாமணி நாகப்பட்டினம் காளகஸ்தி திருநாகேஸ்வரம் கோடகநல்லூர் கீழப்பெரும்பள்ளம் போன்ற கோவில்களில் மூலவரான சிவபெருமானை நாகங்கள் வழிபட்ட ஸ்தலங்கள் ஆகும்.

இங்குள்ள கருவறை மட்டும் கூரையால் அமைக்கப் பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இங்குள்ள அர்ச்சகர்கள் இந்த பழைய கூரையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் புதிய ஓலை கூரையை அமைத்து வருகிறார்கள் 

மூலவருக்கு எதிரே உள்ள தூண்களில் நாக கண்டிகை சிற்பம் உள்ளது. வயல் பகுதி இருந்த இடமாக காணப்பட்டதால் இங்கு நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நீருடன் கலந்த மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
சுகப்பிரசவம், மக்கட்பேறு அருளும் தமிழக அம்மன் கோவில்கள்: வழிபாட்டின் அதிசயங்கள்!
நாகராஜர் கோவில் - Nagaraja Temple

நாகராஜர் சன்னதியின் வலதுபுறத்தில் காசி விஸ்வநாதர் அனந்தகிருஷ்ணன் கன்னிமூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன நாகராஜருக்கு தினசரி பூஜைகள் நடந்த பின்னர்தான் மற்ற சன்னதிகளுக்கு பூஜை நடைபெறும். 

நாகராஜர் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த வாசலை மகாமேரு என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை பெரும் திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.  இந்தத்தேரில் ஆனந்த கிருஷ்ணன் எழுந்தருளி வீதி உலா வருவார். பாம்பும் கருடனும் பகைவர் என்பதால் இங்கு உள்ள கொடிமரத்தில் ஆமை இருப்பதாக கூறப்படுகிறது.

நாக தோஷம் குழந்தைபேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு அவர்கள் கோரிக்கை நிறைவேறுகிறது அதேபோன்று தோல் நோய் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபட்டு பாலாபிஷேகம் செய்து தங்கள் தோல் நோய் தீர்ந்ததாக கூறுகிறார்கள். எனவே இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

ஓட வள்ளி என்ற கொடிதான் இதன் தல விருட்சமாகும். வெளிப்பிரகாரத்தில் நாகலிங்க மரம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜருக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நீலமாக மாறும் பால் அதிசயம்! 2000 ஆண்டுகள் பழமையான 'தென் பத்ரி' மலை மண்டல பெருமாள் கோவில்!
நாகராஜர் கோவில் - Nagaraja Temple

இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி தூவி பால் அபிஷேகம் செய்யலாம். நாகராஜர் ஆயில்யம்நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே ஆயில்யம் நட்சத்திரம் அன்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். காலை 5 மணி முதல் 12 மணி வரை மதியம் 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறவு இருக்கும்.

இக்கோவிலுக்கு வந்து நான் இங்குள்ள நாகராஜரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கி குழந்தைபேறு கிடைக்கும் மற்றும் தோல் வியாதிகள் குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com