"உங்களுக்குத் தெரியாத நவராத்திரி ரகசியம்: வாழ்க்கையின் 9 தடைகளை உடைக்கும் 9 அம்மன்கள்!"

வாழ்க்கையின் உயர்ந்த இலக்குகளை அடைய நவராத்திரி தரும் 9 படிநிலைகளின் ரகசியம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்!
நவராத்திரி 9 நாட்கள் - Navaratri Spiritual Meaning
நவராத்திரி 9 நாட்கள் - Navaratri Spiritual MeaningImage credit: Gemini
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on: 

நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒன்பது அம்மன்களைத் தனித்தனியாக வணங்குவது, மனிதனுடைய ஆன்மீகப் பயணத்தை ஒன்பது படி நிலைகளாகக் காட்டுகிறது எனக் கூறப்படுகிறது. எவ்வாறென்று பார்க்கலாமா ?

1) * அம்மன்-பாலா திரிபுர சுந்தரி

**படி நிலை - தூய்மை

2) *அம்மன்-அன்னபூரணி

** படிநிலை- உயிரைக் காப்பது

3) *அம்மன்- காயத்ரி

**படிநிலை-அறிவு பெறுவது

4) *அம்மன்-லலிதா தேவி

** படிநிலை-அறிவு, அன்பு,கருணை

5) *அம்மன்-சண்டிகா தேவி

** படிநிலை-தீமையை எதிர்க்கும் துணிவு

6) *அம்மன்- மகாலெட்சுமி

** படிநிலை- வாழ்க்கை வளம்

7) *அம்மன்- சரஸ்வதி தேவி

** படிநிலை- வாழ்க்கை வளம் மற்றும் அறிவை நல்வழியில் பயன் படுத்துவது

8) *அம்மன்- துர்க்கா தேவி

**படிநிலை- பயம் வெல்லல்

9) *அம்மன்-மகிஷாசுரமர்த்தினி

**படிநிலை-அகங்காரம் அழித்தல்.

இறுதியில் விஜயம் கிடைக்கும் படிநிலை, பத்தாம் நாளாகிய விஜயதசமியாகும்.

குங்கும அர்ச்சனையுடன் கூடிய லலிதா சகஸ்ரநாம பாராயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

நவராத்திரி 9 நாட்கள், மங்களத்தின் அடையாளம் குங்குமம். அத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குமத்தை அம்மனின் திருவடிகளில் சமர்ப்பிக்கையில், தேவியின் ஒவ்வொரு நாமத்தையும் கூறவேண்டும். ஆயிரம் திருநாமங்களைக் கொண்ட அம்மனின் லலிதா சகஸ்ரநாம பாராயணம், நவராத்திரி விழாவின் சிறப்பாகும். ஒவ்வொரு நாமத்தையும் கூறுகையில், அம்மனின் திருவடி அல்லது அர்ச்சனைத் தட்டில் குங்குமத்தை மெதுவாகச் சேர்க்க வேண்டும். குங்குமம் என்பது சிறியதாக இருந்தாலும், அர்ச்சனையை குங்குமத்தினால் கடவுளுக்குச் செய்கையில், பலன் அதிகம் கிடைக்கும்.

ஒரு நாமம் சொல்கையில் ஒரு மலர் போடுவது, குங்குமம் போடுவது பிரார்த்தனையாகும். அதுவும் ஆயிரம் நாமங்களை பலரும் ஒன்றாகக் கூறுகையில், ஆயிரம் ஆயிரம் நல்லெண்ணங்கள் மனதில் உதிக்கும். கூட்டாக பிரார்த்தனை செய்கையில் அதிகம் நன்மை கிடைக்கும்.

நவராத்திரி 9 நாட்கள் - Navaratri Spiritual Meaning
நவராத்திரி 9 நாட்கள் - Navaratri Spiritual MeaningImage credit: Gemini

அம்பு போடுதல் நிகழ்வு, பத்தாம் நாளாகிய விஜயதசமி நன்னாளில், சில ஊர்கள் மற்றும் ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த அம்பினை வன்னி மரத்தடியில் எய்வார்கள். தீமையை ஒழித்து வெற்றி பெற்ற அடையாளமாக இந்த நிகழ்வு கருதப் படுகிறது. அம்பு போடுதல் நிகழ்வு விஜயதசமி நன்னாளின் சிறப்பம்சமாகும்.

அம்பு, மனிதனுடைய குறிக்கோளையும் அதை அவன் நோக்கிச் செல்லும் உறுதியையும் குறிக்கிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மனை மனதார வழிபட்டு மனதை தூய்மையாக்கி கொண் பிறகு, பத்தாம் நாளில் அம்பு இலக்கை நோக்கி செலுத்தப் படுகிறது. மனதில் தோன்றுகிற நல்ல எண்ணத்தை, செயலாக மாற்ற வேண்டுமென்பது இதன் பொருளாகும். இன்றை இளைய சமுதாயத்தினருக்கும், வருங்காலத் தலை முறையினருக்கு நம்பிக்கையை அளிக்கும் பண்பாட்டு அடையாளமாக நவராத்திரி பண்டிகை விளங்கிறது.

நவராத்திரியில், துர்கா, சரஸ்வதி, லெட்சுமி ஆகிய மூன்று தேவியர்களை பிரார்த்தனை செய்கையில் கூறப்படுகின்ற நவராத்திரி பொது ஸ்லோகம் பின் வருமாறு -

கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!

துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!"

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல கொலு வைக்கிறீங்களா? 9 படிகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலும் ஆன்மீகமும்!
நவராத்திரி 9 நாட்கள் - Navaratri Spiritual Meaning
logo
Kalki Online
kalkionline.com