அசுரனின் ரத்தத்தால் சிவலிங்க அபிஷேகம்! 'ஓணகாந்தேஸ்வரர்' திருத்தல வரலாறு!

kanchipuram shiva temple
Ona Kantheswarar Temple
Published on
deepam strip
deepam strip

சுரனின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட சிவலிங்கம் இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சுந்தரர் இந்தப் பெருமானைப் பதிகம் பாடிப் போற்றி, பொன்னையும் பொருளையும் பெற்றார் என்பது கூடுதல் சிறப்பு. இத்தகைய பெருமைமிக்க கோவிலைப் பற்றித்தான் இந்தப்பதிவில் காணப்போகிறோம்.

சிவபெருமான் ஏன் 'அம்மையப்பன்'?

பெற்றோர்கள் தன் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, கடைசிவரை அவர்களை அரவணைப்பார்கள். அதேபோலத்தான் சிவபெருமானும் தேவர்களாக இருந்தாலும் சரி, அசுரர்களாகவோ அல்லது பூதகணங்களாகவோ இருந்தாலும் சரி, பாரபட்சமின்றி அனைவருக்கும் அருள் புரிவார். அதனால்தான் அவரை நாம் 'அம்மையப்பன்' என்று அழைக்கிறோம்.

அசுரர்கள் செய்த சிவபூஜை

ஒருகாலத்தில் அசுர மன்னனாக இருந்த வாணாசுரனின் சேனாதிபதிகள்தான் ஓணன் மற்றும் காந்தன். இவ்விருவரும் புழல் என்னும் பகுதியில் இருந்த கோட்டையில் பாதுகாவலர்களாக இருந்தனர்.

  • ஓணன்: அந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தருளிய லிங்கத்திற்குத் தன் ரத்தத்தாலேயே அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பூஜைகள் செய்து பல வரங்களைப் பெற்றார்.

  • காந்தன்: இவரும் மற்றொரு சிவலிங்கத்தைக் கண்டறிந்து, பல பூஜைகள் செய்து வரங்களைப் பெற்றார்.

  • ஜலந்தேஸ்வரர்: இவரும் அதே பகுதியில் லிங்கத்தைச் சலந்தேசம் என ஸ்தாபித்து, வழிபட்டுப் பல வரங்களைப் பெற்றார். இப்படி சிவபெருமான் அசுரர்களுக்கும் வரங்களை வாரி வழங்கினார்.

சுந்தரரின் பதிகமும் தங்கக் கனிகளும்

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் ஒருமுறை இந்த இடத்திற்கு வருகிறார். அப்போது அசுரர்கள் பூஜித்த இந்த மூன்று லிங்கங்களும் மண்ணில் புதைந்து இருப்பதைப் பார்க்கிறார். "அசுரர்களே இவ்வளவு பக்தியுடன் சிவனை வழிபட்டிருக்கிறார்களே! இதனை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்; இந்த லிங்கங்களைப் பாதுகாக்கக் கோவில் கட்ட வேண்டும்" என்று சுந்தரர் விரும்புகிறார்.

அதற்காகச் சிவபெருமான் மீது உருகிப் பதிகம் பாட ஆரம்பிக்கிறார். ஆனால், சிவபெருமான் உடனே மனம் இரங்காமல், சுந்தரர் இன்னும் பதிகம் பாடட்டும் என்று காத்திருக்கிறார். சுந்தரர் "நெய்யும் பாலும் தேனும்..." என்று தொடங்கும் பதிகத்தைப் பாட ஆரம்பிக்கிறார். அப்போது சிவபெருமான் அங்கிருந்த ஒரு புளியமரத்தில் மறைந்து கொள்கிறார். சுந்தரர் அதைக் கண்டுணர்ந்து, அங்கேயே மீதிப் பதிகத்தைப் பாடி முடிக்கிறார்.

அப்போது அந்தப் புளியமரத்தில் இருந்த காய்கள் அனைத்தும் தங்கக் கனிகளாக மாறின. அந்தப் பொன்னைக் கொண்டு சுந்தரர் கட்டிய அழகான கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்.

இக்கோவிலின் தல விருட்சம் புளிய மரம். சுந்தரருக்காகச் சிவபெருமான் புளியங்காய்களைப் தங்கக் கனிகளாக மாற்றிய தலம் என்பதால், இன்றும் அந்தப் புளிய மரம் மிகுந்த மரியாதையுடன் வணங்கப்படுகிறது. பொருளாதாரத் தடைகள் நீங்க விரும்புபவர்கள் இந்த மரத்தை வழிபடுவது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
வடக்கு திசை – செல்வம் தரும் குபேர திசையும், அள்ளித்தரும் அதிர்ஷ்டமும்!
kanchipuram shiva temple

சுந்தரருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்த தலம் என்பதால், இக்கோவில் "செல்வத்தை அருளும் தலம்" என்று போற்றப்படுகிறது. கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் அல்லது தொழிலில் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள், இங்கு வந்து சுந்தரர் பாடிய பதிகத்தைப் பாடி வழிபட்டால், விரைவில் பண வரவு உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com