பூரி ஜெகந்நாதர் 56 பிரசாத ரகசியம்: தக்காளி, வெங்காயம் இல்லாத தெய்வீக சுவை!

7 நாட்கள் கோவர்த்தன கிரிக்கு பின் உருவான சப்பன் போக் மகாபிரசாதத்தின் சுவாரஸ்ய வரலாறு!
சப்பன் போக் - Puri Jagannath Bhog
சப்பன் போக் - Puri Jagannath BhogAI Imagge
Updated on

புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் தினமும் படைக்கப்படும் ‘சப்பன் போக்’ எனும் 56 வகை மஹாபிரசாதம், கிருஷ்ணன் கோவர்த்தன மலையை ஏழு நாட்கள் தூக்கிய புராண சம்பவத்துடன் இணைந்த பாரம்பரிய வழக்கமாக விளக்கப்படுகிறது. சாதம், பருப்பு, காய்கறி கூட்டு, இனிப்புகள், பால் பானங்கள், காரப்பலகாரங்கள் என பல பிரிவுகளில் வரும் இவ்வுணவுகள் அனைத்தும் நாட்டு முறையில், சுத்த சைவமாகவே தயாரிக்கப்படுகின்றன.

புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் ஜெகந்நாதருக்கு பிரசாதமாக வழங்கப்படும் சப்பன் போக்' (Chapan Bhog)என்பது மிகவும் புகழ்பெற்றது. 'சப்பன்' என்றால் இந்தி மற்றும் வடமொழிகளில் 56 என்று பொருள்.

ஜெகந்நாத சுவாமிக்கு தினமும் 56 வகையான உணவுப் பதார்த்தங்கள் நெய்வேத்தியமாக மஹாபிரசாதம் என்று படைக்கப்படுகிறது.

இந்த 56 வகையான பிரசாதங்கள் அனைத்தும் முற்றிலும் பாரம்பரிய முறைப்படி, எந்தவிதமான செயற்கை சுவையூட்டிகளோ அல்லது உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகோஸ் போன்ற அந்நிய நாட்டு காய்கறிகளோ சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகின்றன.

கிருஷ்ணனுக்கு யசோதா தினமும் 8 வகையான உணவு பண்டங்களை செய்து கொடுப்பார்களாம். ஒருமுறை 7 நாட்கள் கோவர்த்தன மலையை தூக்கி கிராம மக்களையும், பசுக்களையும் காப்பாற்றினார் கோபாலன்.

அந்த 7 நாட்களும் கிராம மக்கள் கோவிந்தனுக்கு தினமும் விதவிதமான 8 உணவு பண்டங்களை செய்துக் கொடுத்துள்ளனர். அப்படி செய்ததில் 56 உணவு பண்டங்கள் லிஸ்டில் வந்துள்ளது.

அந்த அடிப்படையிலே ஜெகந்நாதருக்கு 56 நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகின்றன

அன்ன வகைகள் (Rice Dishes):

1.சாதா அன்னம் – சாதாரண பச்சரிசி சாதம்.

2.கானிகா – நெய், சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை சேர்த்த இனிப்பு சாதம்.

3.நெய் அன்னம் – தூய்மையான நெய் கலந்த சாதம்.

4.தஹி பக்காலா – தயிர் சாதம்.

5.மிட்டோ பக்காலா – சர்க்கரை மற்றும் நீர் சேர்த்த அன்னம்.

6.தஹி அன்னம் – இஞ்சி, தயிர் கலந்த அன்னம்.

7.காஜா பக்காலா – தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட சாதம்.

சப்பன் போக் - Puri Jagannath Bhog
சப்பன் போக் - Puri Jagannath BhogAI Image

8.பியாலா சாதம் – சீரகம் மற்றும் நெய் சேர்த்த சாதம்.

9.ஓரியா சாதம் – ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் வடிக்கப்படும் சாதம்.

பருப்பு மற்றும் குழம்பு வகைகள் (Dal & Curries)

10.மிட்டோ தாலி – இனிப்பு பருப்பு.

11.ஹரதா தாலி – துவரம் பருப்பு குழம்பு.

12.முக தாலி – பாசிப்பருப்பு கடைசல்.

13.பெசர தாலி – கடுகு அரைத்து ஊற்றிய பருப்பு குழம்பு.

14.சாகா – கீரை கடையல் (முக்கியமாக வெந்தயக்கீரை).

15.மகூரா – பலாக்கொட்டை, பூசணிக்காய் போன்ற காய்கறிகள் சேர்த்த கூட்டு.

16.தால்மா – பருப்புடன் காய்கறிகள் (வாழைக்காய், சேப்பங்கிழங்கு) சேர்த்து சமைக்கப்படும் புகழ்பெற்ற உணவு.

17.சாத்து – வறுத்த கடலை மாவு கலவை.

18.பகாரா தாலி – தாளித்த பருப்பு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் (Sweets & Baked Items)

19.காஜா – மைதா மற்றும் சர்க்கரை பாகு கொண்டு செய்யப்படும் பூரியின் புகழ்பெற்ற உலர் இனிப்பு.

20.கடா – கோதுமை மாவால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.

21.அமாலு – ரவை, பால், சர்க்கரை சேர்த்து செய்யப்படும் மாலின்கா போன்ற இனிப்பு.

22.பூரி – நெய்யில் பொரித்த பூரி.

23.லட்டு – பூந்தி லட்டு.

24.மகாடு லட்டு – உளுந்து மற்றும் நெய் சேர்த்து செய்யப்படும் லட்டு.

25.காகரா – தேங்காய் பூரணம் வைக்கப்பட்ட இனிப்பு பலகாரம்.

இதையும் படியுங்கள்:
மும்பை சித்திவிநாயகர் கோவில் ரகசியங்கள்: கோடீஸ்வர ஆலயம் உருவான நெகிழ்ச்சிகரமான பின்னணி!
சப்பன் போக் - Puri Jagannath Bhog

26.லஹுனி காஜா – வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் மென்மையான காஜா.

27.சுகாரோ – ஒரு வகை வறுத்த இனிப்பு வடை.

28.பாகா – சர்க்கரை பாகில் ஊறிய பலகாரம்.

29.மண்டா – ஆவியில் வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டை போன்ற இனிப்பு.

30.பப்பரி – மொறுமொறுப்பான மைதா பலகாரம்.

31.நல்ஜி – ஒரு வகை நீண்ட வடிவ இனிப்பு.

32.சுவரா – உலர் மாவு பலகாரம்.

33.கானுரி – சிறிய அளவிலான உலர் இனிப்புகள்.

34.படா – உளுந்து வடை.

35.சிறு படா – சிறிய உளுந்து வடை.

36.தாடியா – தாமரை இதழ் வடிவிலான பலகாரம்.

37.கிலா – நெய்யில் பொரித்த சிறிய இனிப்பு.

38.அரிக்கா – ஒரு வகை பாரம்பரிய தட்டை பலகாரம்.

39.தகாரா – சர்க்கரை தூவப்பட்ட பலகாரம்.

40.பாகா அமாலு – சர்க்கரை பாகில் ஊறவைத்த அமாலு.

41.சந்துவா – நெய் மற்றும் மைதா கலந்த தட்டை இனிப்பு

பால் மற்றும் பாயச வகைகள் (Milk & Milk Products)

42.கோபால வல்லப – காலை வழிபாட்டின் போது படைக்கப்படும் பால், பேரீச்சம்பழம், தேங்காய், வெண்ணெய் கலவை.

43.ரசபாலி – பாலில் ஊறவைத்த பனீர் வடை போன்ற இனிப்பு.

44.ரப்தி – சுண்டக்காய்ச்சப்பட்ட பால் இனிப்பு (Basundi போன்றது).

45.பாயசம் – அரிசி மற்றும் பால் சேர்த்த பாயசம்.

46.கிரி – தடிமனான பால் பாயசம்.

47.சனா தாடியா – பனீர் கொண்டு செய்யப்படும் இனிப்பு.

48.பியூஷ் – அமிர்தம் போன்ற பால் கலவை.

49.மில்க் கேக் / போடா பிதா – அரிசி மாவு, பனீர், வெல்லம் சேர்த்து சுடப்படும் கேக் போன்ற உணவு இதர உலர் பிரசாதங்கள் (Savories & Side Dishes)

50.மரிசா மகாபிரசாத் – மிளகு தூவப்பட்ட பிரசாதம்.

51.கடுகி – ஒரு வகை உலர் காரப்பலகாரம்.

இதையும் படியுங்கள்:
பூரி ஜகன்னாதர் ஆலய ரகசியம்: சங்கிலியால் கட்டப்பட்ட ஆஞ்சநேயரும், 56 வகை பிரசாதமும்!
சப்பன் போக் - Puri Jagannath Bhog

52.ஜிஞ்சர் டோஸ் – இஞ்சி மற்றும் வெல்லம் கலந்த பானம் / கலவை.

53.ஹம்சபிலா – பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் ஒரு வகை தொடுகறி.

54.முண்டியா – உலர் மாவு உருண்டைகள்.

55.தங்கபடோ – ஒரு வகை உலர் பலகாரம்.

56.டங்கா தோராணி (Tanka Torani): மகாபிரசாத அன்னம் சமைத்த கஞ்சித் தண்ணீருடன் தயிர், எலுமிச்சை இலை, இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு புகழ்பெற்ற புனித பானம் ஆகும்.

இது ஜெகந்நாதர் ஆலயத்தில் மிகவும் விசேஷமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாத வகைகளை படித்த பின், நிறைய வகைகளை நாம் கேள்விக்கூடபட்டு இருக்கமாட்டோம்

இந்த சப்பன்போக் (56 உணவுகள்) தயாரிப்பில் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் போன்ற அன்னிய நாட்டு காய்கறிகளோ அல்லது வெங்காயம், பூண்டோ முற்றிலும் சேர்க்கப்படுவதில்லை. இந்தியாவின் பாரம்பரிய நாட்டு காய்கறிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com