நேபாள மன்னருக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?

12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாங்க...
rameswaram ramanathaswamy temple
rameswaram ramanathaswamy temple
Published on

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இது ஒரு முக்கியமான சைவ வைணவ ஸ்தலமாகும். ராவணனை கொன்ற ராமன், இங்குள்ள சிவனை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாக வரலாறு. உலகிலேயே மிக நீளமான பிரகாரம் கொண்டது.

22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜை மிகவும் சிறப்பானதாகும்.

மூலவர் மணலால் செய்யப்பட்ட லிங்கம். இது சீதையால் செய்யப்பட்டது என புராணம் கூறுகிறது. அனுமானால் கைலாயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட விஸ்வ லிங்கமும் வழிபாட்டில் உள்ளது. 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்களை போக்கி ஞானத்தை தரும் என நம்பப்படுகிறது. வைணவரான ராமர் சைவ கடவுள் ஆன சிவனை வழிபட்டதால் இந்த கோவில் சைவ வைணவ தலமாக உள்ளது.

ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி அபிஷேகம் நடைபெறும். இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் சீதை மூழ்கி தன் கற்பை நிரூபித்ததாக வரலாறு. அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

மூலவர் ராமநாத சுவாமி, அம்மன் பெயர் பர்வதவர்த்தினி. இது ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகும்.

இதையும் படியுங்கள்:
அமாவாசைக்கு ராமேஸ்வரம் குவிந்த மக்கள்; கடல்நீர் உள்வாங்கியதால் அச்சம்!
rameswaram ramanathaswamy temple

முற்காலத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள ஜோதிலிங்கம் விஷ்ணுவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஜோதி காட்டினால் இளம் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும்.

இங்குள்ள நந்தி வாகனம் சுத்தமான தங்கத்தால் ஆனது. இங்குள்ள நந்தி சுதை வேலைப்பாட்டுகளுடன் அமைந்துள்ளது. 23 அடி நீளம், 17 அடி உயரம், 12 அடி அகலம் கொண்டது.

இங்குள்ள 381 விக்ரங்களுக்கு நாள்தோறும் பூஜை நடைபெறுகிறது.

நான்கு புனித லிங்கங்களில் ராமேஸ்வரம் முதன்மையானது. இவை தவிர துவாரகா நாத், பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களில் சிவலிங்கங்கள் உள்ளன.

காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் அதனை முடித்துவிட்டு ராமேஸ்வரத்தில் நீராடி சிவனை வழிபட்டால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.

இங்குள்ள சிவனுக்கு கங்கையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரால் தினசரி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்தக் கோவில் பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. ராமேஸ்வரத்தில் உள்ள சேது கடல் தீர்த்தம் 2 லட்சம் மைல் சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள், கடல் மேல் மட்டத்தில் வந்து கரையில் ஒதுங்கி வருவதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கைலாச மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ்கோடியில் சங்கமம் ஆவதாக கூறப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவசத்துகள் மின் காந்த அலைகள் உள்ளன. இங்குள்ள சிவனுக்கு 1,008 திரிசங்குகள் மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலிகைகளால் ஆன லிங்கத்திற்கு வைணவ லிங்கம் என பெயர்.

ராமேஸ்வரத்தில் மூலவரை தொட்டு பூஜை செய்யும் உரிமை காஞ்சி பெரியவர், சிருங்கேரி மகா சன்னிதானம், நேபாள மன்னர் ஆகிய 3 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

ராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த குலத்தை சேர்ந்த நேபாளி மன்னர் குலதெய்வமாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னருக்கு இந்த கௌரவம்.

இந்தக் கோவில் தோன்றி நாலு கோடி ஆண்டுகள் ஆகிறது என்பது வியப்பான உண்மை. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 865 அடி நீளம், 657 அடி அகலம் கொண்டது. கிழக்கு கோபுரம் 126 அடி உயரம் உடையது. மேற்கு கோபுரம் 78 அடி உயரம் கொண்டது. வடக்கு தெற்கு வாசல் உபயோகத்தில் இல்லை.

பர்வதவர்த்தினி பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இது சேது பீடமாகும். இக்கோவிலில் 1212 தூண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகின் மிக நீளமான பிரகாரமாக கருதப்படுகிறது. இங்கு வருபவர்கள் முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு தான் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். இங்குள்ள கர்ப்ப கிரகம் இலங்கையில் உள்ள அமைப்பைச் சார்ந்தது.

இதையும் படியுங்கள்:
ராமேஸ்வரம்: புண்ணிய பூமியின் வரலாறு என்ன? தனுஷ்கோடி: இந்தப் பெயர் எப்படி வந்தது?
rameswaram ramanathaswamy temple

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை அன்று இக்கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து கடலில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவனை வழிபட்டு செல்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com