தனுசு ராசி: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2026!

2026 பராபவ வருஷத்துக்கான தமிழ்ப் புத்தாண்டுப் ராசிபலன்!
Sagittarius - Tamil New year Rasi palan 2026
Sagittarius - Tamil New year Rasi palan 2026
Published on
Deepam strip
Deepam strip

உங்களின் ராசிநாதன் குரு பகவான். அது ஒன்றே போதுமே உங்களை வாழ்விக்க,.. நல்ல கல்வி, செல்வம், புண்ணிய சிந்தனை, கருணை, சுப நிகழ்வுகள் என்ற பல கொடுப்பினைகள் உங்களுக்கு உண்டு… இந்த ஆண்டு ராசிநாதன் குரு உச்சம்பெற்று உங்களை மிக உயர்த்தப்போகிறாரே. சூப்பர்ங்க.

பல மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே கணவன்  மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடம் அமைந்த திருமணம் கைகூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அதற்காகப் பெரிதாய்க் கவலைப்பட எதுவும் இல்லை. வந்த வேகத்திலேயே பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரவும் செய்யுமே. கவலையைத் தூக்கி மேஜைக்குக் கீழே உள்ள அந்தக் குப்பைக்கூடையில் போடுவதற்கான வேளை வந்தாயிற்று. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். மனம் சந்தோஷப்படும்படியான சம்பவங்களெல்லாம் ஒவ்வொன்றாக  நடைபெறும். சொத்துப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வரும். அடகு நகையை மீட்கப்போகிறீர்கள் பாருங்களேன். சுபமான விஷயங்களுக்காகச் செலவுகள் அதிகரிக்கும்.  சிறு சிறு தாமதங்களைத் தவிர்க்க இயலாது. ஆனால் விஷயம் நல்லபடியாக நடந்து முடிந்து மகிழ்ச்சி அளிக்கும்போது அந்தத் தாமதம் ஒரு விஷயமே இல்லை என்றாகிவிடும்.

காதலில் இது வரை இருந்து வந்த தடைகள் மற்றும் பயங்கள் நீங்கும். கணவன் மனைவி பிரச்னைகள் சரியாகும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவார்கள். ஆமாம். இயல்புதானே? உன்னைப்போல உண்டா.. என்று அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பார்கள்.

உடனேயே சம்பள உயர்வை எதிர்பார்க்காதீர்கள். ஆடி மாதத்துக்குப் பிறகு நீங்கள் கேட்கவே இல்லை என்றாலும் சம்பளம் உயர்ந்து நிதி நிலைமை அருமையாக உயரும்.

பெண்களுக்குப் பிறந்த வீட்டிலும்,  புகுந்த வீட்டிலும் செயல்பாடுகள் அட என்று வியக்க வைத்துப் பாராட்டுக்களை அள்ளிக்கொடுக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். ஆவணி மாதத்தில் போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய சிரமம் அறிந்து உங்களின் அலுவலக மற்றும் பர்சனல் பொறுப்புகளை உங்களுக்கு  வேண்டியவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.  வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீங்க. மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். அதெல்லாம் தேவையற்ற வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் அமையலாம். அது நீங்க ஆசைப்பட்டபடியே அமையும்.

இந்த வருடம் வழக்கத்தைவிடவும் அதிகமாக உங்களால் நிறைய உழைக்க முடியும். தெரியும். பட்…  கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்கங்கப்பா/ம்மா. ஓ.கே? அதிலும் மற்றவர்களின்பொருட்டு உழைக்க வேண்டுமென்றால் ஓடிப்போய் முதல் ஆளா நிற்பீர்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர். இந்த ஆண்டு  இது இரட்டிப்பாகும். அடக்கி வாசியுங்கள். பொதுவாய்ப் பார்க்கப்போனால் இது நல்ல விஷயம்தான். பாராட்டப்பட வேண்டிய அம்சம்தான். ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் அலுவலகம் என சொந்த விஷயங்கள் காத்திருக்கும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முக்கியம் என்று யோசிக்க வேண்டாமா?

என்றைக்கோ கலந்துகொண்ட விஷயம் ஒன்றிற்கு இன்றைக்கு முக்கியத்துவம் கிடைத்து, பாராட்டு/ பரிசு பெறுவீங்க. அல்லது என்றைக்கோ செய்த முதலீடு இன்றைக்குக் கனியும். பக்தி மார்க்கத்தில் மனம் ஈடுபடும். முன் எப்போதோ செய்து கொண்ட பிரார்த்தனைகளை நிறைவேற்ற முனைந்து முயன்று முடித்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களை துணிவோடு முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் அமோக லாபம் பார்ப்பீர்கள். வருடக் கடைசில அதிகப் பொறுமையோடு காத்திருந்து விஷயங்களை அணுகி நன்மை பெறுவீர்கள்.

ஆனால் ஒன்று சொல்லியே ஆக வேண்டும். இந்த ஆண்டு ஆஸ்பத்திரியின் வாசலில் நுழைவீர்கள். பயந்துவிடாதீர்கள். ஏற்கனவே உள்ள உங்களின் கருணை உள்ளமும், உதவும் மனப்பான்மையும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்ய வைக்கும். அவர்களின் நெகிழ்ந்த ஆசீர்வாத்தைப் பெற்றுத் தரும்.

தந்தைக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் வராமல் கவனமாய் இருங்கள். வெற்றிப்படியில் சில  சின்னஞ்சிறு தடைகள் நேரிடலாம். பொருட்படுத்த வேண்டாம். திருமணம் சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். அது உங்கள் திருமணமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் யாருடைய திருமணமாக இருந்தாலும் சரி. ஆழ்ந்து யோசிப்பதோ, நன்கு விசாரித்தபிறகு தீர்மானியுங்கள்.

உங்களிடம் ஒரு விஷயத்தைப் பாராட்டியே தீரவேண்டும். சமீப காலத்தில் உங்களிடம் வளர்ந்திருக்கும்… நீங்கள் முனைந்து வளர்த்துக்கொண்டிருக்கும் பொறுமை. அது உங்களை மேலும் மேலும் இந்த ஆண்டு உயர்த்தப்போகிறது.. பார்த்துக்கொண்டே இருங்களேன். காத்திருந்த விஷயம் கனிந்து சந்தோஷமும் வெற்றியும் தரும். புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. வழக்குரைஞர்கள் சிறப்பாகத் தொழில் செய்வாங்க. மருத்துவர் களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குக் கடந்த ஆண்டுகளை விடவும் முன்னேற்றம் ஏற்படும். அவசியமற்ற செலவுங்க செய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் மாணவர்  அல்லது மாணவியா? எனில் கல்வியில் சிறப்புப் பெற்று வெற்றியடைவீர்கள். நண்பர்களோ ஆசிரியர்களோ கனிவுடன் உதவுவார்கள்.  வீட்டில் உலகப் போர் அல்லது உள்நாட்டுப்போர் கடந்த சில மாதங்களாய் நடந்துகொண்டிருந்தது அல்லவா? கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக்கொண்டே வரும். உல்லாசப் பயணத்திற்கு வருமாறு யாரேனும் உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாகச் சொல்லிவிடுங்கள்.  உணவு சம்பந்தமான தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும். ஹோட்டல் தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள். பொழுது போக்கு அம்சங்களைத் தொழிலாக் கொண்டவர்களுக்கு முன்பைவிடவும் புகழ் அதிகரிக்கும்.

சிறு இக்கட்டில் மாட்டவிருக்கும் சமயத்தில், உங்கள் பயத்தைப் போக்கும்படியாக எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வந்து பொருளாதார சிக்கலைத் தீர்க்கும். சிலருக்கு இந்த ஆண்டின் கடைசியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் கேட்கும்போது பணம் கொடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை.  ஆனால் யாருக்குக் கொடுக்கலாம் எவ்வளவு தரலாம் என்பதில் சற்றே கண்டிப்பா இருங்கள். மிகச் சரியாகத் தப்பான நபரைத் தேர்ந்தெடுத்து உதவாதீர்கள்.

தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் மட்டுமின்றி எதிர்கிடைத்து நிம்மதியும் சந்தோஷமும் வழங்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைய நீங்கள் எடுத்த கூடுதலான முயற்சியும் உழைப்பும் நல்ல பலனை அளிக்கும். சிலர், சம்பாதித்ததெல்லாம்  செலவழிந்து விட்டது என்பார்கள் ஆனால் உங்கள் ராசியினருக்கோ.. நேர் எதிராகச் செலவு செய்த தொகையை ஈடுகட்டும்படி செலவுகளுக்கேற்ற பணவரவும் இருக்கும் என்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமணமான பெண்களுக்குச் சகோதரர்களிடமிருந்து மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துகொண்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி வரும். வேலை தேடும் முயற்சிகளில் பொறுமை  அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் ஒரு வழியாக நல்ல பலனைப் பார்ப்பீர்கள். குடும்பத்தினருடன் உங்களால் சண்டை வராமல் பார்த்துக்  கொள்ளுங்கள். வீடு விற்க நினைப்போருக்கு அது ஒரு வழியாக விற்கும். கடந்த பல மாத முயற்சிகளின் பலன் அது. நீங்கள் எதிர்பார்த்ததையும்விடப் பத்து சதவீதத் தொகை அதிகமாகவே கிடைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தந்தை வழி உறவினரால் திடீர் நன்மைகள் ஏற்படக்கூடும். எனினும் எந்த உறவினருடன் பேசும்போதும் கவனமாகப் பேசுவது நல்லதுதானே? புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிப்பது உங்கள் செயல்மூலம்தான் தீர்மானமாகும். எனவே குரலை உயர்த்தாமல் இருப்பது நல்லது. 

மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளைவிடக் கடுமைகள் குறைந்து நன்மைகள் பெருகும். வாழ்த்துகள்.

 மற்ற ராசிபலன்களை படிக்க Click Here

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com