சரஸ்வதி தேவி வீணை இல்லாமல் இருக்கும் அரிய காட்சி! எந்தக் கோயிலில் தெரியுமா?

பல்வேறு திருத்தலங்களில் வீணையில்லாமல், பலவித வாகனங்களில் அருள் பாலிக்கும் கலைமகளின் அற்புதக் கோலங்கள்.
சரஸ்வதி பூஜை - Saraswati Pooja 2026
சரஸ்வதி பூஜை - Saraswati Pooja 2026Image credit: Gemini

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

சரஸ்வதி பூஜை - அக்டோபர் 19, 2026

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கோமதி அம்மன் சன்னதிக்கு எதிரே சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் உள்ளது.

காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட கைலாசநாதர் கோவிலில், மூன்று இடங்களில் சரஸ்வதி சிற்பங்கள் உள்ளன. இரு சிற்பங்களில் நான்கு கரங்களுடன் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். வலக்கரங்களில் அட்ச மாலையும், தியான முத்திரையும் திகழ, இடக்கரங்களில் கமண்டலமும், ஓலைச்சுவடியும் ஏந்தி தரிசனம் தருகிறாள்‌. மூன்றாவது சிற்பத்தில் வலக்கரங்களில் அட்ச மாலையும், அபயமுத்திரையும், இடக்கரங்களில் கமண்டலமும், தாமரையும் ஏந்தி உள்ளாள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழ நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள பத்மநாபபுரம் வந்தபோதுதான் வழிபட்ட சரஸ்வதி தேவி சிலையையும் எடுத்து வந்தார். அச்சிலை பத்மநாபபுரம் கோட்டையில் இன்றும் உள்ளது.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில், சரஸ்வதி தேவி நான்கு கரங்களுடன், வீணையேந்தி தரிசனம் தருகிறாள்.

திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி தேவி எழுத்தாணியுடன் காட்சி தருகிறாள்.

நாகை மாவட்டம் கடலங்குடி சிவன் கோவிலில், சரஸ்வதி தேவி முத்துச்சரங்கள், நெற்றிம் பட்டம், கிரீடம், கொலுசு, வளையல்கள் அணிந்து அலங்கார பூட்சிதையாக காட்சி தருகிறாள்.

சிருங்கேரியில் சரஸ்வதி தேவி மாணவியாக, படிக்கின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

சரஸ்வதி தேவிக்கு பொதுவாக அன்ன வாகனம் என்று சொல்லப்படுகிறது. மயில்வாகனம் என்றும் மேஷ (ஆடு) வாகனம், யாளி, சிம்மம் என்ற வாகனங்களும் சரஸ்வதி தேவிக்கு உண்டு என்று புராண நூல்களில் கூறப்பட்டுள்ளன.

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் சரஸ்வதி தேவி நின்ற கோலத்தில், வீணை வித்யாம்பிகை எனும் பெயரில் அருள் புரிகிறாள்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடியில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. அந்த சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி என்று பெயர். சரஸ்வதியின் பெயர்களில் ஒன்றான வாணியின் பெயரில் வாணியம்பாடி என்று அவ்வூர் பெயர் பெற்றது.

சரஸ்வதி பூஜை - Saraswati Pooja 2026
சரஸ்வதி பூஜை - Saraswati Pooja 2026Image credit: Gemini

திருச்சி மாவட்டம் உத்தமர் கோவிலில் சரஸ்வதி தேவி தனி சன்னதியில் எழுந்து அருளி உள்ளார். இங்கு தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் சிறப்புடையது.

மகாராஷ்டிரா மாநிலம் எனும் ஜோதிர்லிங்கத் தலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்ன வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி தேவி தரிசனம் தருகிறாள். கைகளில் வீணை, ஜப மாலை, ஓலைச்சுவடிகள் உள்ளன. இரு சேவகர்கள் தேவிக்கு வெண்சாமரம் வீசியவாறு நிற்கிறார்கள்.

இந்தத் தொகுப்பின் மூலம் தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்றுத் தலங்களில் அருள்பாலிக்கும் கலைமகளின் அறியப்படாத வடிவங்களையும், வழிபாட்டுச் சிறப்புகளையும் முழுமையாக உணர்ந்து, எதிர்வரும் சரஸ்வதி பூஜையன்று எந்தெந்தத் தலங்களை தரிசித்து வீணாவாதினியின் அருளைப் பெறலாம் என்ற தெளிவான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பஸாரா கோயில் பிரசாதம்! இதன் மகிமை தெரியுமா?
சரஸ்வதி பூஜை - Saraswati Pooja 2026
logo
Kalki Online
kalkionline.com