குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பஸாரா கோயில் பிரசாதம்! இதன் மகிமை தெரியுமா?

மஞ்சள் பிரசாதத்தின் மகிமையும், கல்விச் செல்வத்தைப் பெருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பஸாரா தலத்தின் அதிசயங்கள்.
சரஸ்வதி கோயில் - Gnana Saraswati Temple
சரஸ்வதி கோயில் - Gnana Saraswati Temple
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

சரஸ்வதி அல்லது கலைமகள் கல்விக் கடவுளாக அறிவோம். படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனைவியாவார். பேச்சுக் கலையின் தேவதை எனப் பொருள்படும் வாக் தேவி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.

எல்லாக் கலைகளுக்கும் அதிபதியான ஞான சரஸ்வதி வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வெள்ளை ஆடை அணிந்து கையில் ஜெபமாலைமும், வீணையும் ஏந்தி இருப்பவள் என ஞானநூல்கள் வர்ணிக்கின்றன.

ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதிக்கென்றே தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சிருங்கேரியின் உள்ள சரஸ்வதியின் பெயர் சாரதாம்பாள். அரசு வழங்கும் ஞானபீடம் என்னும் விருதில் இடம்பெறும் சின்னம் வாக் தேவி (சரஸ்வதி கோயில்).

சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் மூலவராக உள்ள தலம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் சரஸ்வதி ஆலயம். மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பதினெட்டு புராணங்களை எழுதியவர் வியாசர்.

இவற்றை இமயமலையில் உள்ள மானா என்ற குகையில் தங்கி எழுதினார். இக்குகை வியாச புஸ்தக் என அழைக்கப்படுகிறது. சரஸ் என்பதற்கு நீர் ஒளி எனப்பெயர். இந்த குகை அருகில்தான் சரஸ்வதி நதி உற்பத்தி ஆகிறது.

இத்தகைய பெருமை பலகொண்ட சரஸ்வதி அருள்பாலிக்கும் தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பஸாராவில் மூலவராக கோயில் கொண்டுள்ளாள். மஞ்சள் பூசியிருக்கும் இந்த அம்பாளுக்கு சரஸ்வதி பூஜையன்று விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடக்கும்.

வியாசர் பிரதிஷ்டை செய்த இந்த தலத்திற்கு வியாசபுரி எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் வஸாரா எனத் திரிந்து தற்போது பஸாரா என்றழைக்கப்படுகிறது. இங்கே வீணை இல்லாமல் காட்சி தரும் கலைவாணியை விநாயகர் வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது.

சரஸ்வதி கோயில் - Gnana Saraswati Temple
சரஸ்வதி கோயில் - Gnana Saraswati Temple

மூன்று நிலை கோபுரத்தோடு இருக்கும் இக்கோவிலுக்குள் நுழைந்ததும் சூர்யேஸ்வர ஸ்வாமி என்னும் பெயரில் சிவன் சன்னதி உள்ளது. தினமும் இவர் மீது சூரியக்கதிர்கள் விழுவதால் இப் பெயர் ஏற்பட்டது. கருவறையில் ஞான சரஸ்வதி, வீணை, அட்சர மாலை, ஏடு தாங்கிய கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

இங்குள்ள மலையின் பெயரால் குமாராஞ்சல நிவாசினி என்னும் பெயர் உண்டு. அருகில் மகாலட்சுமி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். பிரகாரத்தில் மகா காளி தனி சன்னதியில் அருள்புரிகிறாள்.

இதையும் படியுங்கள்:
விஜயதசமி நாளில் குழந்தைக்கு வித்யாரம்பம்: அக்ஷராப்யாசம் செய்ய சரியான முறை எது?
சரஸ்வதி கோயில் - Gnana Saraswati Temple

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்கு வந்து பெற்றோர் சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து, வெண்பட்டு உடுத்தி குழந்தைகளுடன் பிரகாரம் சுற்றி வந்து பின் பள்ளியில் சேர்க்கின்றனர்.

குழந்தைகள் நன்கு படித்து தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள் என்பதை அனைவரும் நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.

புதன்கிழமை காலை6-00_7-00 மணிக்குள் நெய் தீபமேற்றி வழிபட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர். ஞான சரஸ்வதியின் மீது பூசிய மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதுபோல் வேறு எங்கும் காண இயலாது. இந்த பிரசாதத்தை குழந்தைகள் சாப்பிட அல்லது பூசிக்கொள்ள சரஸ்வதி தேவியின் அருளால் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.

சரஸ்வதி பூஜையன்று கோவில் திருவிழா கோலம் பூண்டிருக்கும். நிஜாமாபாத் நகரிலிருந்து 30கி மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

நாமும் குழந்தைகளுடன் சென்று சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுவோம்.

திருச்சிக்கு அருகே சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒன்றாக வீற்றிருக்கும் தலம் உத்தமர் கோயில்.பிரம்மனுக்கு அருகில் ஞான சரஸ்வதியாக தனிச் சந்நிதி கொண்டிருக்கிறாள். இங்கும் மஞ்சள் பொடியை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர் அஷ்ட சரஸ்வதி களாவர்.

இந்த நவராத்திரி நன்னாளில் தேவியரை ‌வணங்கி வளம் பெறுவோம்.

இதையும் படியுங்கள்:
கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர்: ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கலை அதிசயம்!
சரஸ்வதி கோயில் - Gnana Saraswati Temple
logo
Kalki Online
kalkionline.com