
சரஸ்வதி நபஸ்துப்பியம் வரதே
காம ரூபிணி…! வித்யாரம்பம்
கரிஷ்யாமி சித்தீர் பவதுமே சதா…!
இந்த ஸ்லோகம் சரவஸ்தியை தியானித்து சொல்வது. இதன் அர்த்தம் பின்வருமாறு :
“சரஸ்வதியே…! விரும்பும் வடிவம் எடுப்பவளே…! நான் இன்று கல்வி கற்க ஆரம்பிக்கிறேன். நீ தான் எனக்கு எப்போதும் உன் அருளை தந்து கல்வி கற்க வைக்க வேண்டும். “
சரஸ்வதி கடாட்சம் அனைவருக்கும் தேவையானது.
ஆம்.
சரஸ்வதி எப்படி இருக்கிறாள்..? எங்கே அமர்ந்து உள்ளார்..?? அவரது வாகனம் என்ன…??? அவரது 4 கைகளில் உள்ளது என்ன…?
அவர் ஒரு கையில் ஜபமாலை வைத்து உள்ளார். இன்னொரு கையில் ஓலைச் சுவடிகள். அது வேதத்தை குறிக்கும். மற்ற 2 கைகளில் வீணை வாசிக்கிறார்.
அது சரி…?
அவள் எப்படி இருக்கிறாள்…??
தூய வெண்மை ஆடை தரித்தவர். அவர் அமர்ந்து இருப்பது வெள்ளை தாமரை. அவர் வாகனம் அன்னம். அதுவும் சுத்த வெண்மை.
இவை எல்லாம் நமக்கு புகட்டுவது என்ன…?
நாம் அனைவரும் தூய்மையாக இருக்க வேண்டும். வெண்மையாக இருக்க வேண்டும்.
அதற்கு அர்த்தம் என்ன…?
நமது எண்ணம், சொல், செயல் எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும். சரஸ்வதியின் வெண்மை நிறம் இதை தான் சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாறு எண்ணம்,சொல் மற்றும் செயல் உண்மையாக வெண்மையாக இருந்தால் அவள் கடாட்சம் நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.
செல்வத்தை திருடலாம். ஆனால் கற்ற கல்வியை நிச்சயமாக யாராலும் திருட முடியாது. மனிதனை மனிதனாக வைப்பது கல்வி மட்டுமே. எனவே…சரஸ்வதி வெண்மையாக இருப்பது ஏன் என்று தெரிந்து விட்டது.
பிறகு பலருக்கு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை குறித்து பெரும் சந்தேகம் உள்ளது.
சரி, ஆயுதம் என்றால் என்ன..?
ஸ்பேனர், ஸ்க்ரூ, சுத்தி, உளி, செம்மட்டி என்று எல்லா பொருட்களும் ஆயுதம் தான். இவற்றை வைத்து தான் மனிதன் சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ, கார், பஸ் மற்றும் ரயில் விமானம் உட்பட எல்லாமே ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. சரஸ்வதி பூஜை அன்று ஆட்டோ ஸ்டேண்ட்டில் ஆயுத பூஜை செய்வது வழக்கம்.
ஆயுதம் என்பது மனித சிந்தனையின் விளைவு. அந்த மனித சிந்தனையின் மூலக்காரணம் சரஸ்வதி தான். எனவே சரஸ்வதி இல்லை என்றால் உலகே இல்லை. எனவே ஆண்டுக்கு ஒரு முறை சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம். வீட்டில் உள்ள மிக்ஸி, கைரண்டர், அடுப்பு, கேஸ், கத்தி, கரண்டி, பேனா, பென்சில், காம்ப்பஸ் & டிவைடர் எல்லாமே ஆயுதங்கள் தான். அதனால் தான் வீடுகளில் புத்தகம் மற்றும் நோட் மட்டும் இல்லாமல் பேனா, பென்சில், கத்தி, அறிவாள் எல்லாமே சரஸ்வதி முன் வைத்து ஜபிக்கிறோம்.
சரஸ்வதி பூஜை செய்து அவரை கொண்டாடுவது எல்லோரும் நன்கு படிக்க வேண்டும் என்றும் மேலும் ஆயுதங்களை பெருமைப்படுத்தி பூஜை செய்கிறோம்.
வீட்டில் மட்டுமே அல்ல. ஆபிசில் கடைகளில், டைலர் கடைகளில், ஆட்டோ, கார் பிற ஆயுதங்கள் வைத்து வணங்குகிறோம்.
சரி. முடிக்கிறேன்.
எல்லோரும் சரஸ்வதி பூஜை செய்து மகிழுங்கள். சரஸ்வதி கடாட்சம் நிச்சயமாக வேண்டும் என்று தியானம் செய்யுங்கள்.
சரஸ்வதி கடாட்சம் இருந்தால் நிச்சயமாக அங்கு லட்சுமி கடாட்சம் நிச்சயமாக இருக்கும்.
சரஸ்வதி பூஜை தான்ஆயுத பூஜை. இதை மனதில் வைத்து சரஸ்வதியை துதியுங்கள்.
சரஸ்வதியை தியானிப்போம்..!
அவள் அருள் பெறுவோம். ஆயுத பூஜை அன்று மட்டும் அல்ல. தினமும் அவளை தியானியுங்கள்.
சரஸ்வதி கடாட்சம் பெறுவோம்..! சுபிட்சம் பெறுவோம்…!!
சரஸ்வதியே நம..!