விருச்சிக ராசி: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2026!

2026 பராபவ வருஷத்துக்கான தமிழ்ப் புத்தாண்டுப் ராசிபலன்!
Scorpio - Tamil New year Rasi palan 2026
Scorpio - Tamil New year Rasi palan 2026
Published on
deepam strip
deepam strip

விருச்சிக ராசியின் ராசிநாதன் செவ்வாய். போதாக்குறைக்கு அங்கே சந்திரன் பலம் குன்றியிருப்பார். அதுக்கு இப்போ என்னன்றீங்க? செவ்வாய் என்பவர் கோபத்தை மூக்கின்மீது சிம்மாசனமிட வைப்பவர். தன்னம்பிக்கைக்கும் மனதிடத்துக்கும் உரிய சந்திரன் பலம் குன்றினால் அந்த இரண்டும் எங்கே போகும் பாவம்? ஆக… கோபத்தைக் குறைத்துத் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. மற்றபடி நீங்கள் தங்கக்கட்டி என்பதை நல்லவேளையாய் உலகறியும்!

இந்த வருடம் பதவி உயர்வு காரணமாக அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். நிர்வாகத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பார்ட்னரிடம் அதீத கவனத்துடன் இருக்கவேண்டும். பார்ட்னர் எதிர்பாலினத்தவர் என்றால் கொசுறாகக் கொஞ்சம் கவனத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள்.

இந்த ஆண்டிற்கான பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். வெளியூர்ப் பயணத்தின்போது கொண்டுசெல்லும் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கவனச்சிதறலை அனுமதிக்க வேண்டாம்.

குடும்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். குழந்தைகள் நடந்துகொள்ளும் விதத்தினால், நடுவில் காணாமல் போயிருந்த மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு மீளும். தாயின் தேவைகளை நிறைவுசெய்து, மகிழ்வித்து மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியைச் செய்து தருவார். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்களும் சில சந்தோஷங்களும் ஏற்படக்கூடும். உங்களைப் பற்றிய பெருமிதம் உயரும்படியான சம்பவங்கள் பொதுவாழ்க்கையில் அல்லது சமூக ஊடகத்தில் நடைபெறும்.

வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு ஆண்டின் துவக்கத்திலேயே நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய சலுகைகள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு ஆண்டின் மத்தியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு வீண்செலவுகள் ஏற்படவும் அதன்காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். மிகவும் அவசியம் என்று தோன்றினாலன்றிக் கடன் வாங்குவதைத் தவிர்க்கப் பாருங்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருவார். குறிப்பாக அழகு சார்ந்த அல்லது ஆடை ஆபரணங்கள் மற்றும் அலங்காரம் சார்ந்த பிசினஸ் செய்ய நினைத்தீர்களானால் அது நன்கு வெற்றி பெறும்.

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம், வருட ஆரம்பத்தில் துவங்கி மெல்ல மெல்ல அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்திருந்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களின் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். சிலருக்குக் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம்.

கடந்த சில மாதங்களாக முடங்கிக்கிடந்த திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே முழுமையான செயல்பட்டுக்கு வந்துவிடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழுக்காரணமாக இருக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி உண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். முன்பு கடுமையான வாக்குவாதம் மூலம் பிரிந்த உறவினர் நண்பர்கள் மீண்டும் சேருவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதுவரை மறைந்திருந்த உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தடைதாமதங்களைப் பொருட்படுத்த  வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்த நிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களால் பணவரவுக்கும் சொத்துச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். சற்று முயற்சிகளையும் வேகத்தையும் அதிகரித்தால்தான் பலன் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

பெண்கள் நிறைவான வகையில் சந்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்களை உருவாக்கும் துறையில் வேலை பார்ப்பவர்கள் நிறைய வேலை வாய்ப்புகள் பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் படிப்பினில் ஆர்வம் காட்டிப் பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். மாணவர்கள் தகுந்த சமயத்தில் நுணுக்கங்களை அறிந்து நற்பெயர் அடைவார்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.  வருடத்தின் முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்துசேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் யாரோ ஒருவருக்குத் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். வீண் செலவுகளும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது.

வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

ஆண்டின் முற்பகுதியில் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் பணம் தந்து உதவுவதால் சொத்துக்கள் வாங்குவீர்கள்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகள் கண்டிப்பாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படாதபடி கவனமாய்ச் செயல்படுவீர்கள் என்பதால் பிரச்னை ஏதும்இன்றி வியாபாரம் வெண்ணையாய் வழுக்கிக்கொண்டு போகும்.  பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள் என்பதால் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்னை இந்த ஆண்டு ஏற்பட வாய்ப்பில்லை.

புண்ணியக் காரியங்கள் செய்வீர்கள். பல வகைக் கோயில்களுக்குப் போய் வருவீர்கள். பெரியவர்களிடம் மரியாதை செலுத்தி அவர்களின் ஆசியை வாங்குவீர்கள். நிறையப் பணம் வரும்.

இதைவிட இந்த ஆண்டில் வேறு என்ன நன்மை வேண்டும்? குட் லக். இந்த ஆண்டு இனிதாகட்டும்.

 மற்ற ராசிபலன்களை படிக்க Click Here

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com