பிரேம சாயி அவதாரம் எப்போது? ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறிய அரிய ரகசியங்கள்!

சத்ய சாயிபாபா நூற்றாண்டு விழாச் சிறப்புக் கட்டுரை: மூன்று அவதாரங்களும் அருள்மொழிகளும்.
Sri Sathya Sai baba | ஶ்ரீ சத்ய சாயிபாபா
Sri Sathya Sai baba | ஶ்ரீ சத்ய சாயிபாபாImage Credit: ChatGPT
ச. நாகராஜன்

ச.நாகராஜன், மங்கையர் மலர், தினமணி, ஆனந்த விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தி இந்து உள்ளிட்ட 46 இதழ்களில் 6000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். புஸ்தகா, நிலாச்சாரல் உள்ளிட்ட பதிப்பகங்கள் வழியாக இதுவரை 219 நூல்களை வெளியிட்டுள்ளார்.

Updated on: 
Deepam strip
Deepam strip

மூன்று அவதாரங்கள்!

நாம் வாழ்கின்ற சமகாலத்திலேயே வாழ்ந்து கோடிக் கணக்கான மக்களுக்கு துன்பமெனும் இருளை அகற்றி ஆன்மீக ஒளியை ஏற்றி அருள் புரிந்த மஹா அவதாரம் ஶ்ரீ சத்ய சாயி அவதாரம்!

மூன்று அவதாரம் எடுத்துக் கொள்ள ஸங்கல்பித்த பெருங் கருணை சக்தி முதல் அவதாரமாக ஷீர்டி சாயியாக அவதரித்தது. (தோற்றம்: 27-09-1838 சமாதி: 15-10-1918)

அடுத்த அவதாரமாக புட்டபர்த்தியில் ஶ்ரீ சத்யசாயிபாபாவாக அவதாரம் எடுத்து கோடிக் கணக்கான மக்களை தன் பால் ஈர்த்து அருள் மழை பொழிந்தது. (தோற்றம் 23-11-1926 சமாதி: 24-04-2011)

இனி அடுத்த அவதாரமாக பிரேம சாயியாக அவதாரம் எடுத்து இன்னும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது.

ஆயிரக் கணக்கான அற்புதங்கள்!

தன் வாழ்நாள் முழுவதும் அவர் ஆற்றிய அற்புதங்கள் பல்லாயிரம்!

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!

Bhagavan Baba
Bhagavan Baba
Image 1 Image 2 Image 3

அங்கையை அசைத்து அவர் விபூதியைப் பொழிந்து பக்தர்களை அனுக்ரஹித்தார்.

கை அசைவினால் நம்ப முடியாத பொருள்களைப் படைத்தார்.

நாத்திகரையும், நக்ஸலைட்டுகளையும் ஆத்திகராக மாற்றினார்.

விஞ்ஞானிகளைத் திகைக்க வைத்து அருள் சக்தியை அவர்கள் உணரும்படி செய்தார்.

இறந்தவரை உயிர்ப்பித்தார்.

180க்கும் மேற்பட்ட நாடுகளில் சத்ய சாயி சேவா சமிதியின் கிளைகளை நிறுவி பஜனை, சத் சங்கம் உள்ளிட்டவற்றை நிகழ்த்த அருள் புரிந்தார்.

ஆயிரக்கணக்கில் உள்ள அவரது உரைகள் புத்தகங்களாக வெளி வர அருள் பாலித்தார்.

கல்லூரிகளை நிறுவி புதிய கல்வி முறையை வகுத்தார்.

மருத்துவமனைகளை நிறுவி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவியை அளித்தார்.

தன் தெய்வீகக் குரலால் பஜனைப் பாடல்களைப் பாடி அனைவரையும் ஈர்த்து தெய்வீக மயமாக்கினார்.

உலகத்தின் அரசியல் தலைவர்களையும். பல் துறை நிபுணர்களையும் ஈர்த்து அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

அவரைப் பற்றி விவரிக்க நாள் ஆயிரங்களும் போதாது; எழுதிக் குவிக்க தாள் ஆயிரங்களும் போதாது!

அருள் மொழிகள்!

சிலேடையுடன் கூடிய அவரது அருள் மொழிகள் வித்தியாசமானவை; மற்றவர்கள் மறக்கமுடியாதபடி என்றும் மனதில் நிலைத்திருக்க வைப்பவை.

எடுத்துக்காட்டிற்கு சில:

Parent என்பதை Pay Rent ஆக்கி விடக் கூடாது என்பார்.

Committee என்பதை Come For Tea என்று ஆக்கி விடக் கூடாது என்பார்.

Technology என்பது இன்று Tric-nology ஆகி விட்டது என்று நையாண்டி செய்வார்.

தொடரும் அருள்மழை!

அவரது அருள் மழை என்றும் நிற்காது; தொடர்ந்து பெய்யும் என்பதை அவர் பலமுறை கூறியுள்ளார்.

எடுத்துக்காட்டாக இவற்றைச் சொல்லலாம்:

என்னை எவர் ஒருவர் அன்புடன் நேசித்து நோக்குகிறார்களோ, அவர்களின் இஷ்டங்களுக்கு நான் இல்லாமலேயே இந்த உலகம் அடங்கும்.

யார் ஒருவர் என்னிடம் சாஷ்டாங்க சரணாகதி அடைகின்றனரோ அவர்களை நான் சன்மார்க்கத்திற்கு அழைத்துச் சென்று என் கடனையும் திருப்பிக் கொடுத்து விடுவேன்.

இதையும் படியுங்கள்:
கடவுள் விரும்பும் உண்மையான ஆபரணம் எது? சத்ய சாயிபாபா தரும் வழிகாட்டல்!
Sri Sathya Sai baba | ஶ்ரீ சத்ய சாயிபாபா

சாயி அனுக்ரகம் என்னும் வங்கியில் எவ்வளவு நிதி இருக்கிறது என்பது கணக்கிட முடியாது. உயர் மதிப்புள்ள வைரம் போன்ற அனுக்ரகத்தை நான் அளிக்க இருக்கும் போது, சின்னஞ் சிறு அருளுக்கு நீங்கள் ஏங்குவது சரியல்ல; நான் அளிக்கவிருக்கும் உயர்ந்த அனுக்ரகத்தை ஏற்கத் தகுதி பெறும் முயற்சியில் ஈடுபடுங்கள்!

பாபா தன்னைப் பற்றி மிக அரிதாகவே கூறியுள்ளார்.

'ஒட்டு மொத்த மனித குலமும் சேர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முயற்சி செய்தாலும் என் மர்மத்தை அவிழ்ப்பதில் வெற்றி பெற முடியாது!'

'என் மர்மத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் செய்யக்கூடிய தலை சிறந்த காரியம் இதில் முழுகிப் போவது தான்! வாதம் செய்து பயனில்லை. முழுகி ஆழத்தை அறி. உண்டு சுவையை அறி. அப்போதே நீ என்னைப் பற்றி உன் இதயம் திருப்தி கொள்ளும் வரை அலசிப் பேசலாம். சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக் கொள். இதைச் செய்து விட்டால் பின்னர், நீ ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்யக் கூடத் தேவை இல்லை. நீ கேளாமலேயே உன்னிடம் யாவும் கொண்டு சேர்க்கப்படும்.'

இதையும் படியுங்கள்:
அம்ருதத்வம் அடையும் வழி: ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருள் வாக்கு!
Sri Sathya Sai baba | ஶ்ரீ சத்ய சாயிபாபா

பிரேம சாயி அவதாரம் தோன்றப் போகிறது!

அடுத்த அவதாரமான தனது பிரேம சாயி பற்றியும் அவர் மிக அரிதாகவே சில செய்திகளை அணுக்கத் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

மனித குலத்தை ஒரு உயரிய நிலைக்கு பிரேம சாயி இட்டுச் செல்வார்.

பக்தைகளில் சிறந்த ஒரு உத்தம பக்தையே அவரது இல்லத்தரசியாக ஆவாராம்.

பிரேம சாயி, சத்ய சாயி நிறுவனங்களை நாட மாட்டார். அவரே ஒரு சிவாலயத்தின் அருகே ஒரு ஆசிரமத்தை அமைப்பார்.

பாபாவுடன் சத்யசாயி அவதாரத்தில் பெரும் பங்கு ஆற்றியவர்கள் பிரேம சாயி அவதாரத்திலும் பெரும் பங்கு ஆற்றப் போகிறார்கள்.

மனித குலம் ஒரு புதிய சிகரத்தை எட்ட இருக்கிறது!

மன இருளை அகற்றும் மகா சக்தியை இருள் அகற்றும் ஒளியே போற்றி, போற்றி என்று துதித்து வணங்குவோமாக.