

கூடூர் பிராந்தியத்தில் இருக்கும் மைகாவை மிகுந்த முயற்சியுடன் அதைச் சுற்றியுள்ள பாறைகளை நன்கு அகற்றி விட்டு வெட்டி எடுக்க வேண்டும். அதில் ஏற்படும் களைப்பு சாதனையில் பெற்ற ஆனந்தத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஒருவேளை அதை மேல்பரப்பிலிருந்து சேகரித்திருந்தால் அது இவ்வளவு சந்தோஷத்தைத் தந்திராது.
முயற்சியாலேயே ஆனந்தம் கிடைக்கிறது. அவதூறுகளாலும் ஏளனங்களாலும் நீண்ட காலம் சிரமப்பட்டு மனிதன் சத்தியத்தை அறிகிறான்; மிக உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறான்.
ஜனகர் தனது மகளான சீதையின் ஸ்வயம்வரத்திற்கு வந்திருந்த ரிஷிகளை வரவேற்றபோது ரிஷிகளின் தலைவரான சௌனகர்,
“தசரதரின் குமாரரான இறைவன் இங்கு வந்திருப்பதால் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அவரை எமது கண்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பு தருமாறு நீண்ட காலம் நாங்கள் பிரார்த்தித்தோம். அவர் எங்களது வேண்டுதலுக்கு இணங்கி மனித உருவில் காட்சி தர இசைந்தார். நாங்கள் அவரை மணந்து கொண்டோம். இது மணமகளால் மணமகனைத் தேர்ந்தெடுக்கும் ஸ்வயம்வரம். இதை நாங்கள் முன்பே செய்து விட்டோம்.” என்றார்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
அவனே இறைவனும் எஜமானனும் ஆவான் என்று தீர்மானித்தவர்களே அழியாத ஆனந்தத்தைப் பெற முடியும்.
கடிகாரத்தில் உள்ள செகண்ட் முள் விரைவாகச் சுற்றிச் சுற்றி ஓடுகிறது. ஒரு முழுச்சுற்று முடிந்தவுடன் நிமிட முள் மெதுவாகச் சற்று நகர்கிறது. அது நகர்வதைப் பார்ப்பதற்கு லேசில் முடியாது. மெதுவாக நிமிட முள் ஒரு முழுச் சுற்று சுற்றியவுடன் மணி முள் அடுத்த நம்பருக்கு நகர்கிறது.
செகண்ட் முள் தான் கர்மத்திற்கான அடையாளம். பௌதீக உடலால் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு அது செய்த கர்மத்தினாலேயே நுட்பமான சூக்கும உடல் மெதுவாக அடுத்த இடத்தை நோக்கி நகர்கிறது. சித்தம் அல்லது உள்ளே உள்ள பிரக்ஞை அதிகமதிகம் சுத்தமாக ஆக, பௌதிக உடலான கர்ம சரீரம் சத்தியத்தை உணர்தலை நோக்கி முன்னேற்றப்படுகிறது. செகண்ட் முள் நகர்ந்தாலேயே போதும். மற்றவை ஒழுங்கான நியதிப்படி பின் தொடரும்.
தியாகமே முக்கிய சாவி. அதுவே முள்ளை இயக்குகிறது. தியாகத்தின் மூலம் அமிர்தத்தன்மை அடையப்படுகிறது.
தியாகராஜனாக இருங்கள்; போகராஜனாக இருக்காதீர்கள்!
துறத்தல் என்ற பகுதியின் சாம்ராஜ்யாதிபதியாக இருங்கள்; இன்பம் அனுபவித்தல் என்ற பகுதியின் சாம்ராஜ்யாதிபதியாக இருக்காதீர்கள்.
இங்கு நடக்கும் யாகத்தின் முக்கியத்துவதைப் பற்றி இங்கு நடக்கும் சடங்குகளின் மூலமாக ருத்ரனின் கோர இயற்கை சாந்தப்படுத்தப்பட்டு அவர் அனுக்ரஹிக்கும் தயாளுவான சிவனாக ஆகிறார்.
கடவுள் எல்லா குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். அவனுக்கு ஆக்ரஹம் (கோபம்) என்பதே இல்லை. அவன் எப்போதும் அன்பின் திருவுருவம்.
அவன் குணங்களில் இருக்கிறான். ஆனால் குணங்கள் அவனிடம் இல்லை. பானையில் களிமண் இருக்கிறது. ஆனால் களிமண்ணில் பானை இல்லை. கடவுளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. அவன் அங்கீகரிக்காத அனைத்துச் செயல்களும் அகற்றப்பட்டு அவனை வெகுவாக அன்புடன் நேசிக்க வேண்டும்.
தவறைச் செய்ய அஞ்சுங்கள். அடுத்தவரை வெறுக்க அஞ்சுங்கள். கருணையை இழக்க அஞ்சுங்கள்.
அஹம் தேஹாஸ்மி என்று நீங்களே உடல் என்று நீங்கள் உணரும் வரையே யாகங்கள் செல்லத்தக்கதாகும். நீங்களே பிரம்மம் என்பதை உணரும் போது யக்ஞங்கள் அதன் மதிப்பை இழந்து விடும்.