ஸ்ரீரங்கம் கோவில் அதிசயங்கள்! ஒன்றா? இரண்டா...? நாராயணா!

ரங்கநாதர் அணியும் காலணிகள் தானாகவே தேய்கின்றனவா? ஆயிரம் ஆண்டு பழமையான நெற்கதிர் இன்றும் வளர்கிறதா? சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒளிந்திருக்கும் மர்மம்! ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம்! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பின்னணியில்...
Srirangam Ranganathaswamy temple
Srirangam Ranganathaswamy templeImg credit: AI Image
Published on
Deepam strip
Deepam strip

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கோவிலாக கருதப்படுகிறது. இந்தக் கோவில் பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இது 108 வைணவ தளங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது.

காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஏழு பிரகாரங்கள் 21 கோபுரங்கள் அமைந்துள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் ஆகும். 

இந்த கோவிலில் ராஜகோபுரம் 236 அடி உயரம் உள்ளது. இந்த கோபுரம் தான் ஆசியாவிலேயே உயரமான கோபுரம் ஆகும். மூலவர் ரங்கநாதர் சுயம்பு லிங்கமாக தோன்றியதாக வரலாறு. மேலும், ராமபிரானால் பூஜிக்கப்பட்ட கோவிலாகும். மூலவர் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் மூலிகை கலவையால் ஆனவர். 

விஜயநகர பேரரசரர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஆயிரம் கால் மண்டபம் பிரமிக்க வைக்கிறது. வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் ஆகியவை முக்கிய நிகழ்வாகும். 

இந்த கோவில் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகர அரசர்களால் சீரமைக்கப்பட்டது. மூலவர் அரங்கநாதர் உற்சவர் நம்பெருமாள், தாயார் ரங்கநாயகி, தலவிருட்சம் புன்னை மரம்.

ராமபிரான் விபீஷணனுக்கு ரங்கநாதர் சிலையை கொடுத்ததாக புராண வரலாறு உள்ளது. இங்குள்ள விஷ்ணு சிலையின் சிறப்பு என்னவென்றால் பிரம்மாவின் தொப்புளில் இருந்து எழுந்த தாமரை இந்த இடத்தில் காணவில்லை. 

தினசரி சூரிய உதயத்திற்கு முன்பாக பிரம்மா விஷ்ணுவை வணங்குவதாக ஐதீகம். பொன்னால் வேயப்பட்ட ஸ்ரீரங்க விமானம் ஓம் என்ற பிரணவ வடிவத்தில் காட்சியளிக்கிறது. ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடி மரத்தை வணங்கி உயரே பார்த்தால் கல் கொடி மரம் அசைவது போன்று தோன்றும். 

ராமானுஜர் தனது 120 வது வயதில் காலமான பின்பு அவரது உடல் இந்த கோவிலில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பெயரில் 'கரும்பு'... ஆனால் சர்க்கரை நோய் குணமாகும் அற்புதம்!
Srirangam Ranganathaswamy temple

ரங்க நாச்சியார் 5 குழி வாசல் வழியாக பெருமாளை சேவிக்கிறார். இந்தக் கோவிலில் 9 பிரதான தீர்த்தங்கள் உள்ளன. 

ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்கநாச்சியார், சேர குலவள்ளி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என ஏழு நாச்சியார்கள் உள்ளனர். 

தாயார் சன்னதியில் வருடத்தில் ஏழு உற்சவங்கள் நடைபெறுகின்றன. 12 ஆழ்வார்கள் ஏழு சன்னதிகள் காணப்படுகின்றன. இதில் ஏழு சேவைகள் வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடைபெறும்.

தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் மாலை ரங்கநாதருக்கு சுக்கு வெண்ணி படைக்கப்படுகிறது. சுவாமிக்கு ஜீரணம் ஆவதற்காக சுக்கு வெண்ணி நெய்வேத்தியம் தன்வந்திரியால் கொடுக்கப்பட்டதாக ஐதீகம். அதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்தக் கோவிலில் ஆண்டுக்கு 250 திருவிழாக்கள் நடைபெறும். திருச்சியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெற்கதிர்கள் உள்ளன. இந்த நெற்குதிர்கள் வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
நரசிம்மர் கோயிலில் ஆடு கோழி நேர்த்திக்கடன்! மலைவாழ் வேடுவ குலத்தினர் செலுத்தும் விநோதம்!
Srirangam Ranganathaswamy temple

ஏழு பிரகாரங்களும் பிரபஞ்சத்தின் அமைப்பை குறிக்கிறது. இக்கோவிலில் உள்ள சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் உருவானது. 

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. கம்பராமாயணத்தை கம்பர் இந்த கோவிலில் தான் அரங்கேற்றினார். நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் இங்கு தான் உள்ளது.

ரங்கநாதர் காலனிகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். அப்போது அந்தக் காலணிகள் தேய்ந்து இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். ரங்கநாதர் தினசரி காலனியை பயன்படுத்துவதாக ஐதீகம். 

கிபி ஆறாம் நூற்றாண்டு வரை சமணர்களின் பிடியில் இந்த கோவில் இருந்தது. கிபி எட்டாம் நூற்றாண்டில் இருந்து சமணம் அழிந்து வைணவர்களால் தொடங்கப்பட்டது. எனவே, கிபி எட்டாம் நூற்றாண்டில் இருந்து தான் இந்த கோவில் வைணவ தலமாக மாறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com