தொடர்கதை: உற்சவர் - அத்தியாயம் 4 - எல்லா நோயும் தீரும்

கீழ்மின்னல் ஆற்றின் ரகசியமும் ஆழிப்பெருமாளின் அற்புதமும்
Urchavar - Tamil Series Story - 4
Urchavar - Tamil Series Story - 4Image Credit: ChatGPT
ஆர்கி

'ஆர்கி' என்ற புனைப்பெயரில் எழுதி வரும் ராஜசிம்மன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரிக் காலம் முதலே கதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், சமீப காலமாகதான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதையான வினைச்சுழல், நடுகல் இணைய இதழில் வெளியானது. கல்கி ஆன்லைனில் வெளியாகி இருக்கும் 'உற்சவர்' எனும் படைப்பு வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான தொடர்கதை.

Updated on: 
Deepam strip
Deepam strip

உற்சவர் - அத்தியாயம் 4 - எல்லா நோயும் தீரும் - நிகழும் கடந்த காலம்

ஊர்: கீழ்மின்னல்

இடம்: கோதண்டராமன் வீடு

நாள்: மூவெள்ள நாள்

காலம்: 6 ஆண்டுகளுக்கு முன்பு

நேரம்: காலை 4 மணி

“ரேணுகா, எல்லாம் ரெடியா? பத்மா கண்ணா, முத்துகிட்ட நேத்தே சொல்லிருந்தேன். நாலு கூடை சாமந்தி, நாலு பெரிய ரோஜாப்பூ, சம்பங்கி மாலை, மல்லிப்பூ ஒரு ஐம்பது முழம் எக்ஸ்ட்ராவா கட்டி வைக்க, நீ ஒரு ஆறு மணிக்கு அவர் ஆத்துக்கு போயி. அத டைரக்ட்டா கோயிலுக்குத் தந்துட சொல்லு. ஏழரை மணிக்குள்ள அவரை வரச் சொல்லிடு. காசு கொஞ்சம் முன்னும் பின்னும் ஆனா பரவாயில்லன்னு சொல்லு மா.”

“டேய் பாலாஜி, இன்னும் எவ்வளவு நேரம்தான் புரண்டு புரண்டு படுப்ப? உன்னை நான் மத்த நாள்ல தொந்தரவு பண்றேனா? இன்னைக்கு ஒரு நாள் அப்பாவுக்கு ஒத்தாசையா வாடா கண்ணு.”

அப்போது, “எல்லாம் ரெடியா, ரெடியா, ரெடியானு கேக்கறதுக்குப் பதிலா, சமையல் கட்டுக்கு வந்து எடுத்துண்டு போலாமொலியோ,” என்று ரேணுகா சொன்னாள்.

கோதண்டராமன் வீடே பரபரப்பாக இருந்தது.

Loading content, please wait...