ஆன்மீக கதை: பக்தனின் வடிவில் பக்தருக்காகச் சென்ற ஸ்ரீராமபிரான்!

ஆன்மீக கதை: ராம நாம ஜெபம் தடைபடக் கூடாது என பக்தர் வடிவில் வந்து பிதுர் காரியம் செய்த ராமபிரான்!
ஆன்மீக கதை | Lord Rama and a Devotee
ஆன்மீக கதை | Lord Rama and a DevoteeImage credit: Chatgpt
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 
Deepam strip
Deepam strip

ஸ்ரீ ராமபிரான் தனது பக்தரின் வடிவில் சென்று சிரார்த்தம் செய்து வைத்த நெகிழ்ச்சியான ஆன்மீக நிகழ்வு ஸ்ரீ சத்குரு சுவாமிகள் என்பவரின் வாழ்வில் உண்மையிலேயே நிகழ்ந்த சம்பவம் ஆகும். தினமும் 1,08,000 முறை இராம நாமத்தை ஜெபித்து வந்த மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், தமது பக்தர் ஒருவருக்கு பதிலாக ஸ்ரீ ராமபிரானே பக்தர் வடிவில் சென்று சிராத்தம் (பிதுர் காரியம்) செய்து வைத்ததாக ஆன்மீக வரலாறு கூறுகிறது.

சத்குரு சுவாமிகள் தினமும் லட்சக்கணக்கான முறை இராம நாமத்தை இடைவிடாது ஜெபித்து வரும் தீவிரமான ராம பக்தர். ஒருமுறை அவரின் தந்தை வேங்கட சுப்ரமணிய ஐயர், அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று சிரார்த்தம் முதலான காரியங்களை செய்து வருவது வழக்கம். ஒரு முறை மணஞ்சேரி கிராமத்தில் இருந்த ஒருவரது வீட்டில் சிராத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால் அதை நடத்துவதற்கு அவரால் செல்ல இயலவில்லை. எனவே சத்குரு சுவாமிகளை அனுப்பி வைத்தார். அதுவரை இம்மாதிரியான காரியங்களை செய்து பழக்கம் இல்லை என்றாலும் தந்தை சொன்னதால் ஒப்புக்கொண்டவர் தனது ராம நாம ஜெபம் தடைபடுமே என்று கவலை கொண்டார்.

என்றாலும் தந்தை கூறியதை கேட்டு சிரார்தத்திற்கு தேவையான சமித்து, தர்பை, பூணூல் ஆகியவற்றை தயார் செய்து கொண்டு அவர் மணஞ்சேரி கிராமத்திற்கு புறப்பட்டார். ஆயினும் சிரார்த்தக் கடமைகளை செய்யும் போது தனது ராம நாம ஜெபம் தடைப்பட்டு விடுமோ என்ற கவலை அவரிடம் மேலோங்கியது. கலங்கிய மனத்துடன் புறப்பட்டவர் வழியில் இருந்த ஒரு ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டார்.

ஆன்மீக கதை | Lord Rama and a Devotee
ஆன்மீக கதை | Lord Rama and a DevoteeImage credit: Gemini AI

ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டதும் மனம் மாறி கோவிலுக்குள் சென்று அனுமனை தரிசித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்து ஆழ்ந்த நித்திரையில் மனம் உருக ராம நாம ஜபத்தை உச்சரிக்கத் தொடங்கினார். அங்கு நிலவிய தெய்வீக சூழலில் தன்னை மறந்து இராம நாம ஜபத்திலேயே முழுமையாக மூழ்கி, பகல் பொழுது முழுவதும் அங்கேயே கழிந்து விட்டது. மாலையில் உணர்வு பெற்ற சுவாமிகள் தந்தையிட்ட பணியை செய்யாமல் விட்டு விட்டோமே, சிரார்தம் செய்ய வேண்டிய குடும்பத்தினர் நமக்காக காத்திருந்து ஏமாந்திருப்பார்களே என்று பதறியபடி அந்த வீட்டிற்கு ஓடினார். ஆனால் அங்கு சென்ற சுவாமிகளுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த வீட்டு உரிமையாளர், "சுவாமி காலையிலேயே நீங்கள் வந்து சாஸ்திரோக்தமாக சிரார்த காரியங்களை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு சென்றீர்களே! ஏன் மீண்டும் வந்துள்ளீர்கள் என்று கேட்க சுவாமிகளுக்கு உண்மை புரிந்தது. பகவானின் லீலையும் புரிந்தது.

சுவாமிகளின் பக்தியைக் கண்ட ராமபிரான் பக்தனின் ஜபம் தடைபடக் கூடாது என்று எண்ணி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். பக்தரின் வடிவில் தாமே நேரில் சென்று அந்தணரின் இல்லத்தில் சிரார்த்த காரியங்களைச் சிறப்பாக நடத்தி வைத்தார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீக கதை: டார்வினின் பரிணாம வளர்ச்சியும், பெருமாளின் தசாவதாரமும்!
ஆன்மீக கதை | Lord Rama and a Devotee

பின்னர் இது குறித்து விசாரிக்கப்பட்ட போது, சுவாமிகள் தான் வரவில்லை என்றும், தான் அனுமார் கோயிலில் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார். சிரார்த்தம் செய்து வைத்து தட்சணையாக 5 ரூபாயும், ஒரு ஜோடி வேஷ்டியும் பெற்றுக் கொண்டவர் ராமபிரானே என்பது பின்னர் தெரியவந்தது. பக்தரின் ராம நாம ஜபத்திற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக ஸ்ரீ ராமபிரானே ஒரு பக்தரின் வடிவில் வந்து சிரார்த்த காரியங்களை செய்து முடித்து வைத்தது உண்மையிலேயே மெய்சிலிர்க்கக்கூடிய நிகழ்வாகும்.

தனது தந்தையிட்ட பணியையும், ராம நாம ஜெபத்தையும் ஒரே நேரத்தில் காப்பதற்கு ஸ்ரீ ராமபிரானே தனது வடிவில் நேரில் வந்து சிரார்த்தம் செய்து வைத்தார் என்பதை உணர்ந்து அவர் விதிர்விதிர்த்துப் போனார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிக கதைகள் - 2!
ஆன்மீக கதை | Lord Rama and a Devotee

மேலும் அந்த சிரார்த்தத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பாவனை பொருட்கள் வேஷ்டி மற்றும் பணம் அனைத்தும் சுவாமிகளின் வீட்டிலேயே பத்திரமாக திரும்ப வந்து சேர்ந்திருந்தன. பக்தனின் தர்மத்தைக் காக்கவும், அவனது பக்திக்கு கைமாறு செய்யவும் தெய்வமே நேரில் வந்து தொண்டு செய்த இந்த நிகழ்வு, இராம நாமத்தின் மகிமைக்கும், பக்தியின் உன்னதத்திற்கும் மிகச் சிறந்த உதாரணமாகும். பக்தனுக்கு ஒரு ஆபத்து அல்லது அவனது ஆன்மீகக் கடமையில் தொய்வு ஏற்படும் போது பகவான் தானே நேரில் வந்து உதவி செய்வார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com