ஆன்மீகக் கதை: நல்லதங்காள்!

Nallathangal
NallathangalAI Image
Updated on

முன் ஒரு காலத்தில் அர்ஜுனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை ராமலிங்க சேதுபதி இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவ்விருவருக்கும் பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அதன்பின் நல்லதம்பி நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள் பிறந்தன. இவர்கள் இருவருமே இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து விட்டனர். இருப்பினும் நல்லதம்பி தன் தங்கையை தாய், தந்தை இல்லை என்ற எண்ணம் வராத அளவிற்கு பாசமாக வளர்த்து வந்தார். நல்ல தங்காள் திருமண வயதை எட்டியவுடன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தை சேர்ந்த காசிராஜான் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தங்கைக்கு சீர் வரிசைகள், பண்ட பாத்திரங்கள் என அனைத்தையும் தாய் தந்தை இருந்து செய்யும் அளவிற்கு சிறப்பாக திருமணம் செய்து முடித்தார். நல்லதங்காளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்திருந்தது. அவள் எட்டு வருடங்களில் ஏழு குழந்தைகளை ஈன்றாள், நான்கு ஆண் குழந்தைகள் மூன்று பெண் குழந்தைகள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com