ஆன்மிகக் கதை: ஒரே சிற்பி செய்த 5 நடராஜர் சிலைகள்! சிதம்பரத்தில் ஒன்று; நெல்லையில் நான்கு! நடந்தது என்ன?

Sculptor Making Nataraja statue
Sculptor and Nataraja statue
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள், பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்கள் வெளியிடபட்டுள்ளன. பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இவருக்கு, சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ஆன்மீக கட்டுரைகள், கதைகள், ஆலயத் தகவல்கள் திறம்பட வழங்குவதில் தனி ஆர்வம்.

Updated on: 
deepam strip
deepam strip
5 Nataraja statues
5 Nataraja statues

பல்லவ மன்னன் சிம்மவர்ம பல்லவன் மிகச்சிறந்த சிவபக்தர். ஒரு முறை அந்த மன்னனுக்கு, நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய எண்ணம் வந்தது. அதற்காக மிகச்சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார். அப்போது சோழ தேசத்தைச் சேர்ந்த நமச்சிவாய முத்து என்ற சிற்பியைக் கண்டறிந்தார். அந்தச் சிற்பியும் மிகச்சிறந்த சிவபக்தர்.

மன்னன் சிற்பியிடம், நடராஜர் திருவுருவத்தை வடிவமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சிற்பியும், மன்னனின் விருப்பப்படி, மிக அற்புதமான நடராஜர் சிலையை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த செப்புச் சிலையில் மிகவும் அழகாக இருந்த நடராஜரைப் பார்த்த மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

செப்புச் சிலையிலேயே இறைவன் இவ்வளவு அழகாக இருக்கும்போது, தங்கத்தில் வடித்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பார் என்று ஒரு ஆசை மேலிட்டது மன்னனுக்கு. அதனால் சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து நடராஜர் சிலையை தங்கத்தில் வடித்துத் தரும்படி சொன்னார்.

Loading content, please wait...